பற பற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜி.வி. பிரகாஷ் குமார்என்.ஆர்.ரகுநந்தன்நீர்ப்பறவை

Para Para Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பற பற பற பறவை ஒன்று…
கிரு கிரு வென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
ஜெபிக்கவா…

ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…

ஆண் : ஓ… அன்பே எந்தன் வாழ்வுக்கு…
ஆசிர்வாதம் நீயடி…
கண்ணீராடும் பிள்ளைக்கு…
நீயே காதல் தாயடி…

ஆண் : உன்னை காண மீண்டும் மீண்டும்…
கண்கள் தூண்டும்…
இருமுறை ஒரு வானவில் வருமா…

—BGM—

ஆண் : பற பற பற பறவை ஒன்று…
கிரு கிரு வென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
ஜெபிக்கவா…

ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…

—BGM—

ஆண் : தேவாலயம் மெழுகும் நானே…
திரி ஏறும் தீயும் நீயே…
என் தேகம் கண்ணீர்விட்டு கரையுதே…

ஆண் : மீன் கொத்த செல்லும் பறவை…
மீன் வலையில் விழுந்தது போல…
வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே…

ஆண் : மழையில் கழுவிய மணலிலே…
தொலைந்த காலடி நானடி…
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு…
நிலைத்த முகவரி நீயடி…

ஆண் : பெட்ரோல் மீது தீயை போல…
உந்தன் மீது பற பற என பரவுது மனசு…

—BGM—

ஆண் : பற பற பற பறவை ஒன்று…
கிறு கிறுவென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே…
ஜெபிக்கவா…

ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…

—BGM—

ஆண் : என் உலகம் கைவசம் இல்லை…
என் பெயரும் ஞாபகம் இல்லை…
சத்தியமாய் என் அருகே நீ இருக்கிறாய்…

ஆண் : பெற்றவரை வீட்டில் மறந்தேன்…
மற்றவரை ரோட்டில் மறந்தேன்…
மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்…

ஆண் : மங்கை என் குரல் கேளடி…
நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி…
எனது அசுத்தங்கள் பாரடி…
வந்து என்னை பரிசுத்தம் செய்யடி…

ஆண் : பெட்ரோல் மீது தீயை போல…
உந்தன் மீது பற பற என பரவுது மனசு…

—BGM—

ஆண் : பற பற பற பறவை ஒன்று…
கிரு கிரு வென தலையும் சுற்றி…
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா…

ஆண் : அது பறந்திட வானம் இல்லை…
அது இருந்திட பூமியும் இல்லை…
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா…

—BGM—


Notes : Para Para Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. பற பற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading