ரத்த கண்ணீர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திராஎன்.ஆர். ரகுநந்தன்நீர்ப்பறவை

Raththa Kanneer Song Lyrics in Tamil


ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர்தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஏன் இந்த கதி ஏன் இந்த விதி…
நொந்தேன் உயிர் நொந்தேன்…
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வெந்தேன்…

ஆண் : என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை…
அடி இல்லை…
என் பாவங்களில் நீ பங்கு பெற…
நியாயம் இல்லை…

ஆண் : பாதைதான் காணாமல் பட்டம்தான் விடுகின்றேன்…
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்…
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஊர் பேசியதும் யார் ஏசியதையும்…
நெஞ்சை சுட வில்லை…
நீ துன்பமுற நான் கண்டுவர…
ஜீவன் இல்லை…

ஆண் : என் தண்டனையில் நீ வாடுவது குற்றம்…
என் குற்றம்…
என் பாவ வினை ஏழு ஜென்மம் வரை…
சுற்றும் சுற்றும்…

ஆண் : போதைக்குள் பிறந்தாலும்…
என் காதல் பொய் இல்லை…
சேற்றோடு பிறந்தாலும்…
தாமரையில் அழுக்கில்லை…
வா பெண்ணே உன்னைவிட்டால் வாழ்வில்லை…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர் தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ளமாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…


Notes : Raththa Kanneer Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. ரத்த கண்ணீர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading