Tag Archives: அருண்மொழி

Thendralukku Theriyuma Song Lyrics in Tamil

தென்றலுக்கு தெரியுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅருண்மொழி & கே.எஸ். சித்ராதேவாபாரதி கண்ணம்மா

Thendralukku Theriyuma Song Lyrics in Tamil


BGM

ஆண் : சேத்து மட தொறக்க…
செவ்வாள மீன் துடிக்க…
தாவி குதிச்ச மீனு…
தாவணிக்குள் விழுந்துவிட…

ஆண் : பாம்பு புகுந்ததுன்னு…
பருவ பொண்ணு கூச்சலிட…
முறைமாமன் ஓடிவந்து…
முந்தானைக்குள் மீன் எடுக்க…

ஆண் : வாலமீன புடிக்க வந்து…
சேலை மீன புடிச்சதென்ன… ஓ…

BGM

ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…

ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…

BGM

பெண் : உள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா…
அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா…
வண்ண சிறுக்கொடி பூத்திருக்க…
வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா…

ஆண் : வானத்தில நிலா பூத்திருக்கு…
வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா…
மாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க…
மனம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா…

பெண் : எறும்பு ஊற கல்லும் தேயும்…
இது தெரியாதா…

ஆண் : கல்ல விடவும் உள்ளம் உறுதி…
இது தெரியாதா…

பெண் : விடுகதை போட்டேன்…
ஒரு விடை தெரியாதா…
விடுகதை போட்டேன்…
ஒரு விடை தெரியாதா…

பெண் : அட ஏன்டா பேராண்டி…
அதை சொல்ல தெரியலையா…
நான் சொல்லி தாரேன் வாறியா…

BGM

பெண் : எண்ணையும் தண்ணியும்…

ஆண் : எண்ணையும் தண்ணியும்…
ஒண்ணா கலந்ததில்லே கலந்ததில்லே…
நெல்லை போல கோரையிருக்கும்…
விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல…

பெண் : நட்டு வச்ச நாத்து பூமிய…
பிடிப்பதில்ல பிடிப்பதில்ல…
வேரு விட்ட பிறகு மண்ணை…
பிரிவதில்ல பிரிவதில்ல…

ஆண் : பாறையில் விதைச்ச விதை…
பலனுக்கு வருவதில்ல…

பெண் : பாறையிலும் செடி முளைக்கும்…
ஏன் அதை பாத்ததில்ல…

ஆண் : கல்லுல நார் உரிக்கும்…
கதை எங்கும் நடந்ததில்ல…

பெண் : கல்லுல செல செதுக்கும்…
கலை அது பொய்யும் இல்ல…

ஆண் : இது விடுகதையா இல்ல விதியா…
என் தலை சுத்தி போச்சு…

பெண் : உண்மை நிலை தெரியும்…
அது புரியும் இது மழுப்புற பேச்சு…

பெண் : அட ஏன்டா பேராண்டி…
அவ சொன்னது கேட்கலையா…
நான் சொல்லி தாரேன் வாறியா…

ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…


Notes : Thendralukku Theriyuma Song Lyrics in Tamil. This Song from Bharathi Kannamma (1997). Song Lyrics penned by Vairamuthu. தென்றலுக்கு தெரியுமா பாடல் வரிகள்.


வாச கருவேப்பிலையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாசிறையில் பூத்த சின்ன மலர்

Vasa Karuveppilaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…

ஆண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

பெண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…

BGM

ஆண் : நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா…
உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா…

பெண் : நடந்தா தென்மதுரை பாண்டியன் போல…
நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை…

ஆண் : நன்றி கெட்ட சேலை…
அது வேணா விட்டுருடி…
கண்ணே உந்தன் சேலை…
இனி நான்தான் கட்டிக்கடி…

பெண் : எட்டி நில்லு சாமி…
நீ தொட்ட ஒட்டிகுவேன்…
தொட்டில் ஒன்னு போட…
ஒரு தோது பண்ணிக்குவேன்…

ஆண் : இப்போதே அம்மாவா நீ ஆனா…
என் பாடு என்னாகும் வாம்மா…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…

BGM

ஆண் : ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல…
உதடும் முள்முருங்க பூத்தது போல…

பெண் : கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்…
கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம்…

ஆண் : எந்த பொண்ணு கையும்…
என்னை இன்னும் தொட்டதில்ல…
இன்று மட்டும் கண்ணே…
நம்ம கற்பும் கெட்டதில்ல…

பெண் : கற்பு உள்ள ராசா…
நான் உன்ன மெச்சிக்குறேன்…
கட்டிகையா தாலி…
உன்ன நல்ல வச்சுகிறேன்…

ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்…
கையோடு கை சேர்த்து போவோம்…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…

ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…

பெண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

ஆண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…


Notes : Vasa Karuveppilaiye Song Lyrics in Tamil. This Song from Sirayil Pootha Chinna Malar (1990). Song Lyrics penned by Pulamaipithan. வாச கருவேப்பிலையே பாடல் வரிகள்.


பத்து ரூவா ரவிக்கைதுணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & கே.எஸ். சித்ராதேவாஎன் ஆச ராசாவே

Pathu Rooba Ravikkai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…

ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா…
அடி பஞ்சவர்ணம்…
எம் மேலதான் ஆசை வல்லையா…

பெண் : உன் சூட்சுமம்தான்…
என் கிட்ட நடக்குமா…
கொஞ்சம் சூதானமா…
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா…

ஆண் : ஹொய்… பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…

BGM

ஆண் : ஏ… பச்சப் பாசி பல்லழகி…
நீ பம்பரத்து கண்ணழகி…
அச்சடிச்ச முத்தழகி…
அத்த பெத்த பொன்னழகி…
ஒன்ன விட்டு எங்க போவேண்டி…

பெண் : ஏ… வெள்ளரிக்கா மூக்கழகா…
ஏ… வெங்கலத்து பேச்சழகா…
வெட்டருவா மீசை வச்சு…
வீச்சருவா கையில் வச்சு…
கிட்ட வந்தா ஆசை வருமா…

ஆண் : ஏன்டி மொறைக்கிற…
என்னாடி என் கொற…
என்ன விட்டு எங்க ஓடுற…

பெண் : நீ வீணா பசப்புற…
வீராப்பா பேசுற…
வேலையத்த வேல செய்யுற…

ஆண் : என்ன பாத்தா எதுக்குற…
நீயா ஒதுக்குற…
அப்பறமும் எனக்கு சலிக்கல…

பெண் : என்ன பாடா படுத்துற…
மாடா நடத்துற…
துப்புரவா எனக்குப் புடிக்கல…

ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…

BGM

ஆண் : ஏ… கண்ணாடி வளவி போட்டு…
ஒன் காலுக்கு கொலுசு போட்டு…
ஒன்னோட ஒடம்பெல்லாம்…
பொன்னால நான் போத்துறேன்…
என்னோட நீ வாடி ராசாத்தி…

பெண் : என்னோட தகப்பன் சொல்ல…
நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன்…
யாருக்கும் தெரியாம…
ஒன்னோட நான் வந்தாக்கா…
மானம் கெடும் நான் வர மாட்டேன்…

ஆண் : என் கண்ணா மதிக்கிறேன்…
பொன்னா எழக்கிறேன்…
சொன்னாக் கேளு என்னோட பேச்ச…

பெண் : நல்லாவே பேசுற…
என்ன நீ ஏய்க்கிற…
ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன்…

ஆண் : அய்யோ கஞ்சி குடிக்கல…
கண்ணு மூடி தூங்கல…
கட்டழகி நெனப்பு போகல…

பெண் : என் நெஞ்சு பொறுக்கல…
நேசம் மறக்கல…
ஒன்ன விட்டு வேற தேடல…

ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…

ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா…
அடி பஞ்சவர்ணம்…
எம் மேலதான் ஆசை வல்லையா…

பெண் : உன் சூட்சுமம்தான்…
என் கிட்ட நடக்குமா…
கொஞ்சம் சூதானமா…
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா…

BGM


Notes : Pathu Rooba Ravikkai Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. பத்து ரூவா ரவிக்கைதுணி பாடல் வரிகள்.


ஒத்த ரூவா தாரேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & தேவி நீத்தியார்இளையராஜாநாட்டுப்புறப்பாட்டு

Otha Ruba Tharen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்த ரூவாயும் தாரேன்…
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்…
நீ ஒத்துக்கிட்டு வாடி…
நாம ஓட பக்கம் போவோம்…

BGM

பெண் : ஒத்த ரூவாயும் வேணா…
உன் ஒனப்பத் தட்டும் வேணா…
ஒத்துக்கிற மாட்டேன்…
நீ ஒதுங்கி நில்லு மாமோய்…

BGM

ஆண் : ஏய்… பத்து ரூவாயும் தாரேன்…
ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன்…
பச்சக் கிளி வாடி…
மெல்ல படப்பு பக்கம் போவோம்…

BGM

பெண் : ஏய்… பத்து ரூவாயும் வேணா…
உன் பதிக்கஞ்சங்கிலி வேணா…
பசப்பி நிக்கிற மாமா…
என்ன உசுப்பி விட வேணா…

BGM

ஆண் : நா மச்சு வீடும் தாரேன்…
பஞ்சு மெத்த போட்டு தாரேன்…
மத்தியான நேரம் வாடி…
மாந்தோப்புக்கு போவோம்…

BGM

பெண் : அட மச்சு வீடும் வேணாம்…
உன் பஞ்சு மெத்தையும் வேணாம்…
மல்லுக்கு நிக்கிற மாமா…
உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்…

BGM

ஆண் : ஹே… நஞ்சை புஞ்சசையும் தாரேன்…
நாலு தோட்டம் எழுதி தாரேன்…
தண்ணிக்கு போறது போல…
கண்ணே கொளத்து பக்கம் வாடி…

BGM

பெண் : உன் நஞ்சை புஞ்சையும் வேணாம்…
நாலு தோட்டம் தொறவும் வேணாம்…
கணக்கு பண்ணுற மாமா…
உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன்…

BGM

ஆண் : ஏய்… சொத்து பூரா தாரேன்…
சாவிக் கொத்தும் கையில தாரேன்…
பத்தர மணிக்கு மேலே…
நீ வெத்தல காட்டுக்கு வாடி…

பெண் : ஓன் சொத்து சொகம் வேணா…
என் புத்தி கெட்ட மாமா…
மஞ்சத் தாலி போதும்…
ஓம் மடியில நான் வாரேன்…

BGM


Notes : Otha Ruba Tharen Song Lyrics in Tamil. This Song from Nattupura Pattu (1996). Song Lyrics penned by Kasthuri Raja. ஒத்த ரூவா தாரேன் பாடல் வரிகள்.


ஏலா அழகம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாரதி கண்ணன்அருண்மொழி & கே.எஸ். சித்ராஇளையராஜாதிருநெல்வேலி

Yela Azhagamma Song Lyrics in Tamil


ஆண் : எதுத்த வீட்டு ஜோடியப் போல்…
இன்பமாக இருப்போமுன்னு…
நெனச்சிருந்தேன் பொன் மயிலே…

ஆண் : நான் இஷ்டப்பட்டு பக்கம் வர…
எடம் போனா வலம் போற…
வலம் போனா எடம் போற…
வெக்கத்த விட்டுச் சொல்லுறேன்…
மக்கரோ மக்கர் பண்ணுறே…

ஆண் : ஏலா அழகம்மா…
என்னப் பாத்தா எளப்பமா…

BGM

ஆண் : ஏலா அழகம்மா…
என்னப் பாத்தா எளப்பமா…

BGM

ஆண் : ஏலா அழகம்மா…
என்னப் பாத்தா எளப்பமா…
மினுக்கி குலுக்குற…
என்னத்துக்கு தளுக்கம்மா…

ஆண் : ஏலா அழகம்மா…
என்னப் பாத்தா எளப்பமா…
மினுக்கி குலுக்குற…
என்னத்துக்கு தளுக்கம்மா…

ஆண் : பாத்தாலும் பாத்தேன்…
ஆத்தாடி ஆத்தா…
சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி…

ஆண் : காத்தாடும் ரோசா…
கொத்தோடு முள்ளு…
குத்தாம பூ எடுக்க முடியவில்லையடி…
முடியவில்லையடி… ஹேய்…

பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு…
ரொம்ப ரொம்ப எளப்பமா…
பொம்பளைங்க பொழப்பெல்லாம்…
நீங்க பண்ணுற கொழப்பம்தான்…

பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு…
ரொம்ப ரொம்ப எளப்பமா…
பொம்பளைங்க பொழப்பெல்லாம்…
நீங்க பண்ணுற கொழப்பம்தான்…

BGM

ஆண் : கருத்திருந்தாலும் ரொம்ப உருத்து…
உள்ளவன் நான்…
என்ன வெறுத்தொதுக்குறியே…
ரொம்ப முறுக்கு காட்டுறியே…

பெண் : அ ஆஹ ஆஹ ஆஹா…
எதுக்கெடுத்தாலும் கண்ண வெட்டி
முழிக்கிறியே… எட்டிக் கையப் புடிக்கிறியே…
தொட்டு கட்டி இழுக்குறியே…

ஆண் : இழுத்தரைக்குற மஞ்சளப் போல்…
நீ மனச வெக்குறியே…
இடுப்பில் கட்டின கொசுவ சேலையில்…
பின்னி முடிக்கிறியே…

பெண் : முறுக்கி நிக்கிற கருப்பு மீசையில்…
கன்னத்தக் குத்துறியே…
அரிசி குத்துற சாக்குல…
துள்ளுற இடுப்பொடிக்கிறியே…

ஆண் : வேணுமின்னே உசுப்பி விட்டு…
வேடிக்க பாக்குற ராசாத்தி…
உள்ளுக்குள்ள ஒன்னு…
வெளியில ஓன்னு வேணாண்டி…

பெண் : ஹேய்… பொண்ணுன்னா உங்களுக்கு…
ரொம்ப ரொம்ப எளப்பமா…
பொம்பளைங்க பொழப்பெல்லாம்…
நீங்க பண்ணுற கொழப்பம்தான்…

பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு…
ரொம்ப ரொம்ப எளப்பமா…
பொம்பளைங்க பொழப்பெல்லாம்…
நீங்க பண்ணுற கொழப்பம்தான்…

BGM

பெண் : வீட்டில் இருந்தாலும்…
அது விட்டு வெளியிலதான்…
இந்தக் கன்னிப் பொண்ணு மனசும்…
அட கண்ட படி சுத்துது…

ஆண் : ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ…
காட்டில் இருந்தாலும்…
நம்ம வீட்டுக்குள்ள உன்னத்தான்…
சுத்திச் சுத்தி வருகுதடி…
இந்த சொங்கிப் பய மனசு…

பெண் : சட்டி கழுவுறேன்…
சாதம் வடிக்கிறேன்…
வேல நடக்கலியே…

பெண் : கோழி அடிக்கிறேன்…
கொழம்பு வெக்கிறேன்…
வாசம் அடிக்கலியே…

ஆண் : சமஞ்சு நிக்கிற தங்கம் இருக்கயில்…
சமச்சதென்னத்துக்கு…
வாலிபப் பசிக்கு வட்டியில் சோறுதான்…
காட்டுவதென்னத்துக்கு…

பெண் : சாடையா நான் புரிஞ்சுக்கிட்டேன்…
தெரிஞ்சுக்கிட்டேன்…
பார்வையில அங்கும் இங்கும்…
கிள்ளுறியே ராசாவே…

ஆண் : ஏலா அழகம்மா…
என்னப் பாத்தா எளப்பமா…
மினுக்கி குலுக்குற…
என்னத்துக்கு தளுக்கம்மா…

பெண் : ஆஹான்… பொண்ணுன்னா உங்களுக்கு…
ரொம்ப ரொம்ப எளப்பமா…
பொம்பளைங்க பொழப்பெல்லாம்…
நீங்க பண்ணுற கொழப்பம்தான்…

ஆண் : பாத்தாலும் பாத்தேன்…
ஆத்தாடி ஆத்தா…
சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி…

பெண் : காத்தாடும் ரோசா…
கூத்தாடும் போது…
தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா…
சொருகுனது உண்டா…

ஆண் : ஏலா அழகம்மா…
என்னப் பாத்தா எளப்பமா…
மினுக்கி குலுக்குற…
என்னத்துக்கு தளுக்கம்மா…

பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு…
ரொம்ப ரொம்ப எளப்பமா…
பொம்பளைங்க பொழப்பெல்லாம்…
நீங்க பண்ணுற கொழப்பம்தான்…


Notes : Yela Azhagamma Song Lyrics in Tamil. This Song from Thirunelveli (2000). Song Lyrics penned by Bharathi Kannan. ஏலா அழகம்மா பாடல் வரிகள்.


ஓலை ஓலை ஓலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்சுவர்ணலதா & அருண்மொழிஎஸ். ஏ. ராஜ்குமார்மாயி

Olai Olai Olai Song Lyrics in Tamil


BGM

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…

பெண் : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருச்சா…
குழு : அட ஒட்டகம் வந்திருச்சா…

பெண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருச்சா…
குழு : அட கப்பலும் வந்திருச்சா…

பெண் : மீசை இருக்குது மாமா…
ஏன் ஆசை இருக்காதா…
பூத்து கிடக்குது ரோசா…
ஏன் வாசம் அடிக்காதா…

பெண் : பத்திக்கிருச்சு…
ஏய்… பத்திக்கிருச்சு…
உன் பட்டுச் சட்டையில…
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு…

குழு : ஓலை ஓலை ஓலை…
பெண் : ஏய்…
குழு : ஓலை குடிசையில்…
பெண் : ஹான்…
குழு : ஊசி ஊசி ஊசி…
பெண் : ஹான்…
குழு : ஊசி முனையில…

பெண் : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருச்சா…

பெண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருச்சா…

BGM

பெண் : பள்ளியறை போல இருக்கேன்…
பாடம் படிசிக்குயா…
பந்தி வச்சி காத்து கிடக்கேன்…
பசி எடுக்கலையா…

BGM

ஆண் : குண்டுமல்லி பூவ வீசி…
மலைய சாய்க்கிரியா…
கொசுவத்தில் உலக தள்ளி…
மறைக்க பாக்குறியா…

பெண் : ஒத்து உழைக்குறேன் நான்தான்…
அட ஒத்துக்க வேண்டும் நீதான்…
கணக்க முடிக்கும் வரைக்கும்…
நீ கட்டிக்கும் வேட்டி நான்தான்…

பெண் : கட்டில் மேல் ஒத்தையிலே…
சாகதையா…
காசிக்கு போனாலும்…
விடமாட்டேன்யா…

பெண் : என் இடுப்ப மின்னலும்…
இடம் புடிக்குது எடுத்துக்கையா…

பெண் : பத்திக்கிருச்சு…
ஏய்… பத்திக்கிருச்சு…
உன் பட்டுச் சட்டையில…
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு…

ஆண் : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருமா…
பெண் : ஆமா…

ஆண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருமா… ஓய்…

BGM

பெண் : வெட்கம் விட்டு விடிய விடிய…
விவரம் சொல்லட்டுமா…
வெத்தலை போல் உன்னாக்குல…
செவந்துகிரட்டுமா…

BGM

ஆண் : எக்குதப்பு நினைப்பெல்லாம்…
என்கிட்டே நடக்குமா…
ஏன்டியம்மா கரும்புகிட்ட…
இரும்பு உருகுமா…

பெண் : அள்ளி எடுக்கனும் மாமா…
உள்ள அனலடிகுது ஆமா…
அவரகொடி போல் மாமா…
என்ன வேட்டியில் சுத்தனும் ஆமா…

ஆண் : செந்தேனே என்மேலதான்…
சிந்தாதம்மா…
சேலைக்குள் அடங்கிடாத…
புயல் நானம்மா…

ஆண் : ஒன் ஊசி பட்டாசுல…
உசந்த வானம் உடந்திடுமா…

குழு : பத்திக்கிருச்சு…
அய்யோ பத்திக்கிருச்சு…
உன் பட்டுச் சட்டையில…
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு…

பெண் : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருச்சா…
குழு : அட ஒட்டகம் வந்திருச்சா…

பெண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருச்சா…
குழு : அட கப்பலும் வந்திருச்சா…

ஆண் : மன்மத கடலில் விழுக…
நான் இந்திரன் இல்லையம்மா…
பெண் : ஹான்… ஹான்…

ஆண் : மந்திரம் போட்டு மயக்க…
நான் சந்திரன் இல்லையம்மா…
பெண் : ஏய்…

ஆண் : ஏய்… பத்திகிருமா…
ஏய்… பத்திகிருமா…
இந்த பச்ச தண்ணதான்…
தீப்பொறி விழுந்து பத்திகிருமா…

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…


Notes : Olai Olai Olai Song Lyrics in Tamil. This Song from Maayi (2000). Song Lyrics penned by Ilayakamban. ஓலை ஓலை ஓலை பாடல் வரிகள்.


எத்தனை மணிக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகரிசக்காட்டு பூவே

Ethanai Manikku Song Lyrics in Tamil


BGM

ஆண் : எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…

ஆண் : கொஞ்ச நேரம் உன்ன பார்க்க…
ரொம்ப நேரமா…
இந்த ஒத்தையடி பாதையில…
காத்திருக்கேன்டி…

ஆண் : கொஞ்ச நேரம் உன்ன பார்க்க…
ரொம்ப நேரமா…
இந்த ஒத்தையடி பாதையில…
காத்திருக்கேன்டி…

பெண் : உன்னைபோல பொம்பளைக்கி…
யசவு இருக்குதா…
நீ நினைச்சதுமே வாரதுக்கு…
வழி இருக்குதா…

பெண் : உன்னைபோல பொம்பளைக்கி…
யசவு இருக்குதா…
நீ நினைச்சதுமே வாரதுக்கு…
வழி இருக்குதா…

பெண் : கொஞ்சம் நேரம்…
காத்திருக்க கோவிக்கலாமா…
நீங்க கோவப்பட்டா…
நாம்ம ஒன்னு சேர முடியுமா…

பெண் : கொஞ்சம் நேரம்…
காத்திருக்க கோவிக்கலாமா…
நீங்க கோவப்பட்டா…
நாம்ம ஒன்னு சேர முடியுமா…

ஆண் : போடு தன்னானே தானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
தன்னன்னே நான்னன்னே…

பெண் : தன்னானனே நானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
நானனன்னே தன்னானன்னே…

BGM

ஆண் : புல்லுக்கட்டு தூக்கிகிட்டு…
போற பொம்பள…
ஒரு ரெண்டு நாளா என்னை…
நீ எட்டி பாக்கல…

ஆண் : ஹ… புல்லுக்கட்டு தூக்கிகிட்டு…
போற பொம்பள…
ஒரு ரெண்டு நாளா என்னை…
நீ எட்டி பாக்கல…

ஆண் : அட காத்துகிட்டு நிக்கிறேன்டி…
தென்னம் தோப்புல…
என்ன கண்டுக்காம போறியே…
நீ அந்தவாக்குல…

ஆண் : அட காத்துகிட்டு நிக்கிறேன்டி…
தென்னம் தோப்புல…
என்ன கண்டுக்காம போறியே…
நீ அந்தவாக்குல…

பெண் : மல்லுகட்டும் நோக்கத்துல…
வந்த மாப்புள…
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு…
இந்த தோப்புல…

பெண் : மல்லுகட்டும் நோக்கத்துல…
வந்த மாப்புள…
இப்ப சுத்தி சுத்தி ஆள் இருக்கு…
இந்த தோப்புல…

பெண் : வம்பு பண்ண வாரிகளே…
இந்த சாக்குல…
உங்க கொம்பு சுத்தும்…
வேலைக்கெல்லாம் நானு ஆள் இல்ல…

ஆண் : போடு… தன்னானே நானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
தன்னன்னே நான்னன்னே…

பெண் : தன்னானனே நானனன்னே…
தன்னானன்னே தன்னே தன்னானே…
நானனன்னே தன்னானன்னே… ஹே…

BGM

ஆண் : தெற்குதிக்க கரட்டு பக்கம்…
இருட்டு கட்டுது…
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு…
மழையும் கொட்டுது…

BGM

ஆண் : ஹே… தெற்குதிக்க கரட்டு பக்கம்…
இருட்டு கட்டுது…
அங்க கும்மரிச்சம் போட்டுக்கிட்டு…
மழையும் கொட்டுது…

ஆண் : குச்சிக்குள்ள வந்துருடி…
கொஞ்சம் ஒதுங்கி
மழை விட்டுதுமே போயிறலாம்…
ஊர நெருங்கி…

பெண் : ஆசை தோசை…

ஆண் : ஆ… குச்சிக்குள்ள வந்துருடி…
கொஞ்சம் ஒதுங்கி…
மழை விட்டுதுமே போயிறலாம்…
ஊர நெருங்கி…

பெண் : தட்டு வண்டி கட்டிக்கிட்டு…
போற மாப்புள…
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க…
எங்க வீட்டுல…

பெண் : தட்டு வண்டி கட்டிக்கிட்டு…
போற மாப்புள…
என்ன ஏத்திக்கொண்டு விட்டுருங்க…
எங்க வீட்டுல…

பெண் : ஒத்தையில போகமாட்டேன்…
இந்த காட்டுல…
இனி நம்பிக்கையும் வைக்கமட்டேன்…
உங்க பேச்சில…

ஆண் : எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…

ஆண் : கொஞ்ச நேரம் உன்ன பார்க்க…
ரொம்ப நேரமா…
இந்த ஒத்தையடி பாதையில…
காத்திருக்கேன்டி…

பெண் : உன்னைபோல பொம்பளைக்கி…
யசவு இருக்குதா…
நீங்க நினைச்சதுமே வாரதுக்கு…
வழி இருக்குதா…

பெண் : கொஞ்சம் நேரம்…
காத்திருக்க கோவிக்கலாமா…
நீங்க கோவப்பட்டா…
நாம்ம ஒன்னு சேர முடியுமா…

ஆண் : ஹேய்… தன்னானே நானனன்னே…
தன்னானனே தன்னே தன்னானே…
பெண் : யோவ்…

ஆண் : தன்னன்னே நான்னன்னே…
தன்னானனே நானனன்னே…
பெண் : ஆஹா…

ஆண் : தன்னானன்னே தன்னே தன்னானே…
நானனன்னே தன்னானன்னே…
பெண் : ஹஹஹா… யோவ்… யோவ்வ்வ்…


Notes : Ethanai Manikku Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. எத்தனை மணிக்கு பாடல் வரிகள்.


பூங்குயில் பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅருண்மொழி & ஹரிணிஎஸ். ஏ. ராஜ்குமார்நீ வருவாய் என

Poonkuyil Pattu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

பெண் : சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா…
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா…
அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற…
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா…
கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன்…
என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா…

பெண் : இளமனசுக்குள் கனவுகளை…
இறக்கி வச்சது நெனப்பிருக்கா…
மேகம் கூட்டம் மறைஞ்சிருக்கே…
மீண்டும் சேர வழியிருக்கா…

பெண் : அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

பெண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…

BGM

பெண் : ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி…
நான் ரசித்தது பிடிச்சிருக்கா…
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்…
நம்ம நனைஞ்சது நெனப்பிருக்கா…

ஆண் : திறந்திருக்கிற மனசுக்குள்ளே…
திருடிச் சென்றது பிடிச்சிருக்கா…
வாசம் போக பிடிச்சிருக்கா…
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா…

பெண் : அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

ஆண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு…
பூங்காற்றும் பிடிச்சிருக்கு…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு…
பனிக்காற்றும் பிடிச்சிருக்கு…

ஆண் : சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு…
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு…
அடி கிளியே நீ சொல்லு…
வெள்ளி நிலவே நீ சொல்லு…

ஆண் : பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு…
பூங்காற்றும் பிடிச்சிருக்கு…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு…
பௌர்ணமியும் பிடிச்சிருக்கு…


Notes : Poonkuyil Pattu Song Lyrics in Tamil. This Song from Nee Varuvai Ena (1999). Song Lyrics penned by Viveka. பூங்குயில் பாட்டு பாடல் வரிகள்.


வெள்ளி நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.என். சுரேந்தர், அருண்மொழி & உமா ரமணன்இளையராஜாநந்தவன தேரு

Velli nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
வீண் சோகம் ஏனடி மானே… ஏனடி…

ஆண் : முல்லை மலரே முல்லை மலரே…
உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி…

ஆண் : மின்னும் சிலையே…
அன்னை போல் வரவா நானும் சோறூட்ட…
உண்ணாதிருந்தால்…
இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட…

ஆண் : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
வீண் சோகம் ஏனடி மானே… ஏனடி…

BGM

ஆண் : விண்ணில் ஓடி தன்னால் வாடும்…
நிலவே நாளும் உருகாதே…

குழு : உன்னை பாடி மண்ணில் கோடி…
கவிதை வாழும் மறவாதே…

ஆண் : நிலா சோறு நிலா சோறு…
தரவா நீயும் பசியாற…

குழு : குயில் பட்டு குயில் பாட்டு…
தருவோம் நாங்கள் குஷியாக…

ஆண் : வானவில்லும் தானிறங்கி…
பாய் போடும் நீயும் தூங்க…
ஆடும் மயில் தோகை எல்லாம்…
தாலாட்டியே காத்து வீச…

ஆண் : தேவ கன்னியே…
தேய்வதென்ன நீ தன்னாலே…

குழு : வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…
வீண் சோகம் ஏனடி மானே… ஏனடி…

குழு : முல்லை மலரே முல்லை மலரே…
உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி…

BGM

ஆண் : சொந்தம் யாரு பந்தம் யாரு…
நிலவே பாரு எனைப் பாரு…

குழு : நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம்…
துடைப்பார் யாரு பதில் கூறு…

ஆண் : உள்ளம் தோறும் கள்ளம் நூறு…
அதை நீ பார்த்து எடை போடு…

குழு : உன்னை காக்க தொல்லை தீர்க்க…
வருவோம் நாங்கள் துணிவோடு…

ஆண் : வானத்தோடு கோவம் கொண்டு…
நீ போவதேன் பால் நிலாவே…
வானம் காக்க நாங்கள் உண்டு…
நீ நம்பியே பார் நிலாவே…

ஆண் : தேவ கன்னியே…
தேய்வதென்ன நீ தன்னாலே…

பெண் : வெள்ளி நிலவு வெள்ளி நிலவு…
உன்னோடு சேர்ந்திடதானே பாடுது…
உள்ளம் திறந்து உள்ளம் திறந்து…
தன் சோகம் தீர்ந்திடதானே தேடுது…

பெண் : மின்னும் நிலவே உன்னாலே வருதே…
பாடி சோறூட்ட…
தள்ளி நடந்தால்…
வேறாரு வருவார் என்னை காப்பாற்ற…

பெண் : வெள்ளி நிலவு வெள்ளி நிலவு…
உன்னோடு சேர்ந்திடதானே பாடுது…

குழு : தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…
தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…

குழு : தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…
தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…

குழு : தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…
தன் நன் நானா… தன் நன் நானா…
தன் நன் நானா…


Notes : Velli nilave Song Lyrics in Tamil. This Song from Nanthavana Theru (1995). Song Lyrics penned by R. V. Udayakumar. வெள்ளி நிலவே பாடல் வரிகள்.


சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண் மொழி & கே.எஸ். சித்ராதேவாவிஷ்ணு

Singara Kannukku Mai Kondu Vaa Song Lyrics in Tamil


ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…
செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா
நந்தலாலா ஏ நந்தலாலா…

ஆண் : தேன் பாலா வந்தாளா…
மாமுலா தந்தாளா…
ஒன்னாச்சி தோளோடு தோளா…
இப்ப வந்தாச்சு என் கும்பமேலா…
மேனிதான் ஊஞ்சலா…

BGM

பெண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…

BGM

ஆண் : ஹே ஹேய்… அக்கம் பக்கம் யாருமில்லை…
இந்த ஆலமர காட்டுக்குள்ள…
வெட்கம் கிட்கம் தேவையில்லை…
வந்து சேர்ந்துக்க என் கூட்டுக்குள்ள…

பெண் : அம்மாடி அம்மாடி வானம் பூமி…
எல்லாமே எல்லாமும் பார்க்கும்…
கச்சேரி வைக்காம கோட்ட தாண்டி…
எட்டூரும் உன் பாட்ட கேக்கும்…

ஆண் : வேனுமின்னு கேட்குது மனசு…
வேலிகளை தாண்டுற வயசு…

பெண் : பொறுத்துக்க பொறந்திடும்…
நல்ல நாள் நாயனம் ஊதிடதான்…

BGM

ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…

பெண் : செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…

BGM

ஆண் : முன்ன பின்ன தொட்டதில்ல…
அடி தொட்டத நான் விட்டதில்ல…
ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள…
நாம ஒட்டிக்கிட்டா குற்றமில்ல…

ஆண் : என்னான்னு ஏதுன்னு ராசா ராசா…
என்னோடு உட்காந்து பேசு…
எம்மேணி வேர்க்காமல் ஈரக்காத்தா…
இப்போது சில்லுன்னு வீசு…

ஆண் : பூட்டி வச்ச பூ இதை திறந்து…
ஊத்திக்குடு வாலிப விருந்து…

பெண் : கொடுக்கவா எடுக்கவா…
அம்மம்மா ராத்திரி ஆகிடனும்…

ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…

பெண் : செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…

ஆண் : தேன் பாலா வந்தாளா…

பெண் : மாமுலா தந்தாளா…

ஆண் : ஒன்னாச்சி தோளோடு தோளா…
இப்ப வந்தாச்சு என் கும்பமேலா…

பெண் : மேனிதான் ஊஞ்சலா…

BGM

ஆண் & பெண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா…
நந்தலாலா ஏ நந்தலாலா…


Notes : Singara Kannukku Mai Kondu Vaa Song Lyrics in Tamil. This Song from Vishnu (1995). Song Lyrics penned by Vaali. சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா பாடல் வரிகள்.