தென்றலுக்கு தெரியுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅருண்மொழி & கே.எஸ். சித்ராதேவாபாரதி கண்ணம்மா

Thendralukku Theriyuma Song Lyrics in Tamil


BGM

ஆண் : சேத்து மட தொறக்க…
செவ்வாள மீன் துடிக்க…
தாவி குதிச்ச மீனு…
தாவணிக்குள் விழுந்துவிட…

ஆண் : பாம்பு புகுந்ததுன்னு…
பருவ பொண்ணு கூச்சலிட…
முறைமாமன் ஓடிவந்து…
முந்தானைக்குள் மீன் எடுக்க…

ஆண் : வாலமீன புடிக்க வந்து…
சேலை மீன புடிச்சதென்ன… ஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…

ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…

BGM

பெண் : உள்ளங்கையில் வந்து தேன் விழுந்தா…
அத உறிஞ்சி குடிப்பதில் தப்பிருக்கா…
வண்ண சிறுக்கொடி பூத்திருக்க…
வண்டு கண்ண மூடிக்கொண்டால் அர்த்தமுண்டா…

ஆண் : வானத்தில நிலா பூத்திருக்கு…
வண்டு தேனெடுக்க ஒரு தெம்பிருக்கா…
மாட்டுக்கொம்பில் வந்து பால் கறக்க…
மனம் ஆசப்பட்டா அதில் தோதிருக்கா…

பெண் : எறும்பு ஊற கல்லும் தேயும்…
இது தெரியாதா…

ஆண் : கல்ல விடவும் உள்ளம் உறுதி…
இது தெரியாதா…

பெண் : விடுகதை போட்டேன்…
ஒரு விடை தெரியாதா…
விடுகதை போட்டேன்…
ஒரு விடை தெரியாதா…

பெண் : அட ஏன்டா பேராண்டி…
அதை சொல்ல தெரியலையா…
நான் சொல்லி தாரேன் வாறியா…

BGM

பெண் : எண்ணையும் தண்ணியும்…

ஆண் : எண்ணையும் தண்ணியும்…
ஒண்ணா கலந்ததில்லே கலந்ததில்லே…
நெல்லை போல கோரையிருக்கும்…
விளைஞ்சதில்ல விளைஞ்சதில்ல…

பெண் : நட்டு வச்ச நாத்து பூமிய…
பிடிப்பதில்ல பிடிப்பதில்ல…
வேரு விட்ட பிறகு மண்ணை…
பிரிவதில்ல பிரிவதில்ல…

ஆண் : பாறையில் விதைச்ச விதை…
பலனுக்கு வருவதில்ல…

பெண் : பாறையிலும் செடி முளைக்கும்…
ஏன் அதை பாத்ததில்ல…

ஆண் : கல்லுல நார் உரிக்கும்…
கதை எங்கும் நடந்ததில்ல…

பெண் : கல்லுல செல செதுக்கும்…
கலை அது பொய்யும் இல்ல…

ஆண் : இது விடுகதையா இல்ல விதியா…
என் தலை சுத்தி போச்சு…

பெண் : உண்மை நிலை தெரியும்…
அது புரியும் இது மழுப்புற பேச்சு…

பெண் : அட ஏன்டா பேராண்டி…
அவ சொன்னது கேட்கலையா…
நான் சொல்லி தாரேன் வாறியா…

ஆண் : தென்றலுக்கு தெரியுமா…
தெம்மாங்கு பாட்டு…
அது என்னான்னு கேட்டு…
ஒரு மெட்டு போட்டு காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…
அது பாசமெனும் பாட்டு…
அத கத்து தரப்போறேன் காத நீ காட்டு…

பெண் : தென்றலுக்கு தெரியுமே…
தெம்மாங்கு பாட்டு…


Notes : Thendralukku Theriyuma Song Lyrics in Tamil. This Song from Bharathi Kannamma (1997). Song Lyrics penned by Vairamuthu. தென்றலுக்கு தெரியுமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading