Tag Archives: டி. எல். மகாராஜன்

முன்னேருதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துடி.எல்.மகாராஜன் & சுவர்ணலதாஏ. ஆர். ரகுமான்இந்திரா

Munnerudhan Song Lyrics in Tamil


ஆண் : மயிலகாள மருதகாள… ஆஅஆ…
மணி கயித்துல சோடி சேரு…
வெளுத்த காள செவத்தகாள… ஆஅஆ…
இடம் வலமா சோடி சேரு…

பெண் : மாரி மாரி பொழிய வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
பெண் : பூமிதாயி குளிர வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…

பெண் : வானம் பார்த்த கரிசக்காடு…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
பெண் : மனசபோல இளக வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…

ஆண் : முன்னேருதான் பூட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலேலோ…
ஆண் : போற வழி நீ காட்டு…
குழு : ஏலேலங்கடி ஏலோ…

ஆண் : பின்னேருதான் ஓட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலேலோ…
ஆண் : சொல்லிபுடு ஒரு வாட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலோ…

பெண் : பொன்னேரு பூட்டி…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : வெத போட வேணும்…
குழு : போட வேணும்…

பெண் : முப்போகம் வௌஞ்சு…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : பசியாற வேணும்…
குழு : ஆறவேணும்…

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…

{ குழு : தந்தானனா தானா ஏலாலங்கடி ஏலாலம்…
தானனதான ஏலாலங்கடி ஏலாலம்…
தனனனதானன ஏலாலங்கடி ஏலேலோ…
த ன ன ன தா ன ன ஏலாலங்கடி ஏலேலோ… } * (2)

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…


Notes : Munnerudhan Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. முன்னேருதான் பாடல் வரிகள்.


மச்சினிச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிடி.எல். மகாராஜன், பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோகன் & சுனந்தாஎஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Machinichi Song Lyrics in Tamil


BGM

ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

குழு : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

ஆண் : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

குழு : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

குழு : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

பெண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

ஆண் : மச்சினிச்சி கொலுசு சத்தம்…
வீட்ட சுத்தி பாட்டு பாட…
மண்ணும் கல்லும் பாதம் தொட்டு…
மல்லிகையா மாறி போக…

ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

BGM

ஆண் : தண்ணி ஊத்துறா…
மஞ்ச தண்ணி ஊத்துறா…
மாமன்காரன் மயங்கி நின்னா…
வெண்ணி ஊத்துறா…

பெண் : தண்ணி ஊத்துறா…
மஞ்ச தண்ணி ஊத்துறா…
மாமன்காரன் மயங்கி நின்னா…
வெண்ணி ஊத்துறா…

ஆண் : பூவப்போல மனசுக்குள்ள…
புயலப்போல வந்த புள்ள…
திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள…

குழு : பூவப்போல மனசுக்குள்ள…
புயலப்போல வந்த புள்ள…
திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
பூட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள…

பெண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

BGM

ஆண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

குழு : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

ஆண் : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

குழு : நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

பெண் : மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…

BGM


Notes : Machinichi Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. மச்சினிச்சி பாடல் வரிகள்.


பூவாட்டம் காயாட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காதல் மதிடி.எல். மகாராஜன் & சுவர்ணலதாயுவன் ஷங்கர் ராஜாஅரவிந்தன்

Poovattam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

பெண் : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கூட்டம்…
வாட்டம் பார்த்து கைதாவுதே…
சட்டந்திட்டம் சம்பந்தம் நீதி…
ஜாதி பூவும் கைதாகுதே…

பெண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

BGM

பெண் : ஆசை ஊறுது அந்தரங்கமா…
ஆடி காத்துக்கு பஞ்சு தப்புமா…

ஆண் : சேலை மூடுது மேகமூட்டமா…
தொட்டு ஒரசிட மின்னல் வெட்டுமா…

பெண் : வேல வெட்டிக்கு விடுமுறைதானா…
வீணா திரிஞ்சாலே காதல் வருமா…

ஆண் : வெட்டி வேருக்கு விளம்பரம் வேணாம்…
வாசம் எழுந்தாலே அடங்கிடுமா…

பெண் : மெட்டி அணிய விரலைத் தரவா…
மொட்டுத் தித்திக்க முத்தங்கள் இடவா…

ஆண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

BGM

ஆண் : மொட்டுத் தாமரை தத்தளிக்குமா…
சொட்டும் வேர்வையில் முக்குளிக்குமா…

பெண் : கட்டும் சேலைக்கு கப்பம் கட்டுமா…
கன்னப் பாறையில் சிற்பம் வெட்டுமா…

ஆண் : முத்தம் கொடுத்திட பனித்துளிதானா…
மச்சான் கொடுத்தாலே கசந்திடுமா…

பெண் : கட்டில் விளிம்புல தவிக்கிறேன் நாளா…
கட்டிப் பிடிச்சாலே கசந்திடுமா…

ஆண் : கள்ளி நெலவே காதல் மலரே…
பார்வை தீயில நெஞ்சுக்குள் குளிரே…

பெண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

ஆண் : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கூட்டம்…
வாட்டம் பார்த்து கைதாவுதே…
சட்டம் திட்டம் சம்பந்தம் நீதி…
ஜாதி பூவும் கைதாகுதே…

ஆண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

BGM


Notes : Poovattam Song Lyrics in Tamil. This Song from Aravindhan (1997). Song Lyrics penned by Kadhal Mathi. பூவாட்டம் காயாட்டம் பாடல் வரிகள்.


Andhi Mazhai Megam Song Lyrics in Tamil

அந்தி மழை மேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்டி. எல். மகாராஜன் & பி. சுசீலாஇளையராஜாநாயகன்

Andhi Mazhai Megam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…
எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…

பெண் : ஹோய்… இடி கொட்டு மேளம்…
அது கொட்டும் நேரம்…
எங்கள் தெரு எங்கும் தேரோடும்…

குழு : தேரோடும் திரு நாளாகும்…
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்…

பெண் : அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…
எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…

BGM

பெண் : நீர் நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது…
குழு : தனக்க தீம்…

ஆண் : நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது…
குழு : தனக்க தீம்…

பெண் : மாடங்கள் கலைகூடங்கள்…
யார் செய்தார் அதை நாம் செய்தோம்…

ஆண் : நாடாளும் ஒரு ராஜாங்கம்…
யார் தந்தார் அதை நாம் தந்தோம்…

பெண் : தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே…
ஆண் : தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே…
குழு : தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்…

பெண் : அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…
எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…

ஆண் : ஹேய்… இடி கொட்டு மேளம்…
அது கொட்டும் நேரம்…
எங்கள் தெரு எங்கும் தேரோடும்…

குழு : தேரோடும் திரு நாளாகும்…
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்…

BGM

ஆண் : பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது…
குழு : தனக்க தீம்…

பெண் : கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது…
குழு : தனக்க தீம்…

ஆண் : பூவாரம் இனி சூட்டுங்கள்…
கற்பூரம் இனி ஏற்றுங்கள்…

பெண் : ஊரெல்லாம் களி ஆட்டங்கள்…
என்னென்ன இனி காட்டுங்கள்…

ஆண் : வீடுதோரம் மங்களம் இன்று வந்தது…
பெண் : காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது…
குழு : தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்…

ஆண் : அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…

பெண் : எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…

ஆண் : ஹேய்… இடி கொட்டு மேளம்…
பெண் : அது கொட்டும் நேரம்…
ஆண் & பெண் : எங்கள் தெரு எங்கும் தேரோடும்…

குழு : தேரோடும் திரு நாளாகும்…
நாள் தோரும் இங்கு ஊர்கோலம்…

குழு : அந்தி மழை மேகம்…
தங்க மழை தூவும் திரு நாளாம்…
எங்களுக்கும் காலம்…
வந்ததென பாடும் பெருநாளாம்…


Notes : Andhi Mazhai Megam Song Lyrics in Tamil. This Song from Nayakan (1987). Song Lyrics penned by Pulamaipithan. அந்தி மழை மேகம் பாடல் வரிகள்.


ஒன்பது கோளும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownடி. எல். மகாராஜன்Unknownவிநாயகர் பாடல்கள்

Onbathu Kolum Song Lyrics in Tamil


BGM

ஆண் : அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம்…
அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம்…
சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்…
அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும்…
ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும்…
நல்லதே நடக்கும்… நல்லதே நடக்கும்…

BGM

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

ஆண் : சூரியன் முதலாய் ஒன்பது கிரகமும்…
பல வித குணங்களை கொண்டிருக்கும்…
எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது…
ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

BGM

ஆண் : சூரிய பகவான் ஒளி முகம் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்…
குழு : கதிரவன் தரிசனம் பெற வேண்டும்…

ஆண் : சூரிய பகவான் ஒளி முகம் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்…
குழு : கதிரவன் தரிசனம் பெற வேண்டும்…

ஆண் : இருளை விலக்கி உலகை எழுப்பும்…
ஞாயிறு அங்கே குடியிருப்பான்…
அவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில்…
ஒளியாய் வந்து குடியிருப்பான்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

BGM

ஆண் : திங்கள் பகவான் திரு முகம் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்…
குழு : குளிரும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : திங்கள் பகவான் திரு முகம் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்…
குழு : குளிரும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : பார்கடல் பிறந்த சந்திர பகவான்…
கணபதி வயிற்றில் பிறந்திருப்பான்…
எங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு…
தீரா பிணிகளை தீர்த்து வைப்பான்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

BGM

ஆண் : அங்காரகனவன் தங்கும் இடமே…
குழு : கணபதியாரின் வலத் தொடையே…
ஆண் : அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்…
குழு : வணங்கிட வேண்டும் கணபதியை…

ஆண் : அங்காரகனவன் தங்கும் இடமே…
குழு : கணபதியாரின் வலத் தொடையே…
ஆண் : அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்…
குழு : வணங்கிட வேண்டும் கணபதியை…

ஆண் : நெருப்பாய் எரியும் செவ்வாய் பகவான்…
மழையாய் மாறி பொழிந்திடுவான்…
அவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர்…
மனதுக்கு உறுதியை கொடுத்திடுவான்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

BGM

ஆண் : புத பகவானின் பத மலர் இரண்டும்…
குழு : பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே…
ஆண் : எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே…
குழு : புதனவன் தரிசனம் கிடைக்கிறதே…

ஆண் : புத பகவானின் பத மலர் இரண்டும்…
குழு : பிள்ளையர் பட்டியில் தெரிகிறதே…
ஆண் : எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே…
குழு : புதனவன் தரிசனம் கிடைக்கிறதே…

ஆண் : ஞான தேவியின் கணவன் புதனாம்…
ஞானம் நமக்கு கைக் கூடும்…
எங்கள் கற்பகத்தானின் வலக் கை காண…
வாக்கு வன்மையும் கை சேரும்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

BGM

ஆண் : குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்…
குழு : குடி வந்த குருவை தொழ வேண்டும்…

ஆண் : குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்…
குழு : குடி வந்த குருவை தொழ வேண்டும்…

ஆண் : ஆலமர் செல்வன் அவனது பார்வை…
தடைகளை நீக்கி வளம் பெருக்கும்…
நம் கணபதி சிரத்தை காண்கிற மங்கையர்…
மாங்கல்ய பலமே திடமாகும்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

BGM

ஆண் : சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே…
குழு : இருக்கும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே…
குழு : இருக்கும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : புத்திர பாக்கியம் தருகிற பகவான்…
சுக்கிரன் அங்கே குடியிருப்பான்…
அவன் கற்பகக் கடவுளை கண்டவர் தமக்கு…
பொன் பொருள் அள்ளி கொடுத்திடுவான்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

BGM

ஆண் : அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே…
குழு : வாழும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : அட்டமச் சனியின் நட்டங்கள் தவிர்க்க…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே…
குழு : வாழும் அவனை தொழ வேண்டும்…

ஆண் : வாழ்ந்திட வைப்பதும் தாழ்ந்திட வைப்பதும்…
சனி பகவானின் செயலல்லவா…
அந்த கணபதி கரத்தை கண்டவர் தமக்கு…
சனியின் பார்வை நலமல்லவா…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

BGM

ஆண் : திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்…
குழு : பிள்ளையர் பட்டி வரலாமே…
ஆண் : எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே…
குழு : இருக்கும் ராகுவை தொழலாமே…

ஆண் : திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்…
குழு : பிள்ளையர் பட்டி வரலாமே…
ஆண் : எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே…
குழு : இருக்கும் ராகுவை தொழலாமே…

ஆண் : பிணிகளை தருகிற பகவான் அவனே…
மருத்துவம் செய்வான் தெரியாதா…
ராகுவின் பதத்தை கணபதி கை மேல்…
கண்டால் நன்மைகள் விளையாதா…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே…
குழு : மலரும் கேதுவை தொழ வேண்டும்…

ஆண் : கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே…
குழு : மலரும் கேதுவை தொழ வேண்டும்…

ஆண் : ஐந்து தலையோடு எழுந்த சுவக் கேது…
கணபதி தொடையில் கொலுவிருப்பான்…
அவன் தொடரும் பிணிகளை நடுங்கச் செய்வான்…
தொழுதால் தொல்லைகள் நீக்கிடுவான்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

ஆண் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண…
குழு : பிள்ளையர் பட்டி வர வேண்டும்…
ஆண் : அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்…
குழு : உறையும் அவரை தொழ வேண்டும்…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…

குழு : நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…
நவகிரக நாயகன் கணபதியே…
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே…


Notes : Onbathu Kolum Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. ஒன்பது கோளும் பாடல் வரிகள்.


நீ கட்டும் சேல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன் & டி. எல். மகாராஜன்ஏ.ஆர்.ரகுமான்புதிய மன்னர்கள்

Nee Kattum Selai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…
நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…

ஆண் : அடியே சூடான மழையே…
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா…
கொடியே வெத்தல கொடியே…
சுண்ணாம்பு நான் தரலாமா…

ஆண் : அழகே தாவணி பூவே…
தேன எடுத்துக்கலாமா…
கொலுசு போட்ட காலிலே…
தாளம் போட்டுக்கலாமா…

பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே…
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே…
நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே…
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே…

பெண் : வண்டு சாமந்தி பூவில்…
நாயனம் ஊதுது மாமா…
மனசு ஆசையினாலே…
ஊஞ்சல் ஆடுது மாமா…

பெண் : மலரும் தாவணி பூவில்…
தேன எடுத்துக்க மாமா…
கொலுசு போட்ட காலிலே…
தாளம் போட்டுக்க மாமா…

BGM

ஆண் : நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம்…
குட்டி குட்டி நிலவு தெரியுதடி…
உன் இடுப்பழகில் ஒரசும் கூந்தலிலே…
பத்திகிட்டு மனசு எரியுதடி…

பெண் : சிக்கி முக்கி கல்ல போல…
என்ன சிக்கலிலே மாட்டாதே…
தாலி ஒன்னு போடும் வர…
என்ன வேறெதுவும் கேக்காதே…

ஆண் : அந்த வானம் பூமி எல்லாம்…
இங்க ரொம்ப பழசு…
அட நீயும் நானும் சேர்ந்திருக்கும்…
காதல்தாண்டி புதுசு…

பெண் : வண்டு சாமந்தி பூவில்…
நாயனம் ஊதுது மாமா…
மனசு ஆசையினாலே…
ஊஞ்சல் ஆடுது மாமா…

பெண் : மலரும் தாவணி பூவில்…
தேன எடுத்துக்க மாமா…
கொலுசு போட்ட காலிலே…
தாளம் போட்டுக்க மாமா…

ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…
நீ கட்டும் சேல மடிப்புல நான் கசங்கி போனேன்டி…
உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி…

ஆண் : அடியே சூடான மழையே…
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா…
கொடியே வெத்தல கொடியே…
சுண்ணாம்பு நான் தரலாமா…

ஆண் : அழகே தாவணி பூவே…
தேன எடுத்துக்கலாமா…
கொலுசு போட்ட காலிலே…
தாளம் போட்டுக்கலாமா…

BGM

பெண் : மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே…
என்னோட போர்வை சேர்வதெப்போ…
மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே…
என்னோட துடிப்பு கேட்பதெப்போ…

ஆண் : ஏன் ஆயுள் ரேகை எல்லாம்…
உன் உள்ளங்கையில் ஓடுதடி…
உன் உள்ளங்கை அழகினிலே…
ஆச உச்சி வர ஊறுதடி…

பெண் : நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது…
என் கழுத்து கிட்ட முத்தம் தந்து மயிலிறகாக கூசுது…

ஆண் : அடியே சூடான மழையே…
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா…
கொடியே வெத்தல கொடியே…
சுண்ணாம்பு நான் தரலாமா…

ஆண் : அழகே தாவணி பூவே…
தேன எடுத்துக்கலாமா…
கொலுசு போட்ட காலிலே…
தாளம் போட்டுக்கலாமா…

பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே…
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே…
நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே…
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே…

குழு : அடியே சூடான மழையே…
கொடைக்குள் நனஞ்சுக்கலாமா…
கொடியே வெத்தல கொடியே…
சுண்ணாம்பு நான் தரலாமா…

குழு : அழகே தாவணி பூவே…
தேன எடுத்துக்கலாமா…
கொலுசு போட்ட காலிலே…
தாளம் போட்டுக்கலாமா…

BGM


Notes : Nee Kattum Selai Song Lyrics in Tamil. This Song from Pudhiya Mannargal (1994). Song Lyrics penned by Pazhani Bharathi. நீ கட்டும் சேல பாடல் வரிகள்.