பூவாட்டம் காயாட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காதல் மதிடி.எல். மகாராஜன் & சுவர்ணலதாயுவன் ஷங்கர் ராஜாஅரவிந்தன்

Poovattam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

பெண் : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கூட்டம்…
வாட்டம் பார்த்து கைதாவுதே…
சட்டந்திட்டம் சம்பந்தம் நீதி…
ஜாதி பூவும் கைதாகுதே…

பெண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

—BGM—

பெண் : ஆசை ஊறுது அந்தரங்கமா…
ஆடி காத்துக்கு பஞ்சு தப்புமா…

ஆண் : சேலை மூடுது மேகமூட்டமா…
தொட்டு ஒரசிட மின்னல் வெட்டுமா…

பெண் : வேல வெட்டிக்கு விடுமுறைதானா…
வீணா திரிஞ்சாலே காதல் வருமா…

ஆண் : வெட்டி வேருக்கு விளம்பரம் வேணாம்…
வாசம் எழுந்தாலே அடங்கிடுமா…

பெண் : மெட்டி அணிய விரலைத் தரவா…
மொட்டுத் தித்திக்க முத்தங்கள் இடவா…

ஆண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

—BGM—

ஆண் : மொட்டுத் தாமரை தத்தளிக்குமா…
சொட்டும் வேர்வையில் முக்குளிக்குமா…

பெண் : கட்டும் சேலைக்கு கப்பம் கட்டுமா…
கன்னப் பாறையில் சிற்பம் வெட்டுமா…

ஆண் : முத்தம் கொடுத்திட பனித்துளிதானா…
மச்சான் கொடுத்தாலே கசந்திடுமா…

பெண் : கட்டில் விளிம்புல தவிக்கிறேன் நாளா…
கட்டிப் பிடிச்சாலே கசந்திடுமா…

ஆண் : கள்ளி நெலவே காதல் மலரே…
பார்வை தீயில நெஞ்சுக்குள் குளிரே…

பெண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

ஆண் : ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கூட்டம்…
வாட்டம் பார்த்து கைதாவுதே…
சட்டம் திட்டம் சம்பந்தம் நீதி…
ஜாதி பூவும் கைதாகுதே…

ஆண் : பூவாட்டம் காயாட்டம் கன்னித்தோட்டம்…
மானாட்டம் மீனாட்டம் துள்ளுதே…
பாலாட்டம் தேனாட்டம் பந்தலாட்டம்…
நெஞ்சுக்குள் போராட்டம் பண்ணுதே…

—BGM—


Notes : Poovattam Song Lyrics in Tamil. This Song from Aravindhan (1997). Song Lyrics penned by Kadhal Mathi. பூவாட்டம் காயாட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading