நடுவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மகா. ரூபன்மைக்கேல் ராவ் & மகா. ரூபன்மகா. ரூபன்சிவன் பாடல்கள்

Naduvan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்து போகும்…
இந்த உடலெனும் காயமும் அழிந்து போகும்…
ஊன்பொருள் தீக்கிரை அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போகும்…

ஆண் : உடலினை நிஜமென எண்ணி எண்ணி…
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி…
கோடிப் பணமும் அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போனாலும்…

ஆண் : அழியாதது உன் பாதம்…
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்…
அழியாதது உன் நாமம்…
நமச்சிவாயம்… நமச்சிவாயம்…

ஆண் : கரையாதது மானுட பாவம்…
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்…
தவறாது என் பற்று அறுத்து…
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்…

ஆண் : நந்தவனத்தில் ஓர் ஆண்டி…
பத்துமாதமாய்க் குயவனை வேண்டி…
அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி…
அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி…

ஆண் : பிறவி தாண்டி மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து…
வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி…
உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி…

ஆண் : மனங்களும் மடக்கும் மேனி…
மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி…
தென்பிறை களைய நினைவோடிருப்போர்…
முன்பிறை காண உயர்பவர் அன்றோ…

ஆண் : மன்னுயிர் கொன்று சுட்டதைத் தின்று…
தோற்றத்தை விட்டு வென்றதைக் கொண்டு…
ஆறாத காயம் ருசிப்பது மாட்டார்…
தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு…

ஆண் : கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்து போகும்…
இந்த உடலெனும் காயமும் அழிந்து போகும்…
ஊன்பொருள் தீக்கிரை அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போகும்…

ஆண் : உடலினை நிஜமென எண்ணி எண்ணி…
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி…
கோடிப்பணமும் அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போனாலும்…

ஆண் : அழியாதது உன் பாதம்…
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்…
அழியாதது உன் நாமம்…
நமச்சிவாயம்… நமச்சிவாயம்…

ஆண் : கரையாதது மானுட பாவம்…
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்…
தவறாது என் பற்று அறுத்து…
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்…

—BGM—

ஆண் : ஊழ் வினை உன் வினை…
தன்னைச்சுடும் வினை முன் வினை…
அதன் முன் வணங்கிடு தலைவனை…
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை…

ஆண் : பூரணமே ஈசனே காரணமே காலனே…
வாரணமே நமச்சிவாய…
மரணமே வருக வருக…
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக…

ஆண் : சந்தன குங்கும சான்றும் பரிமளமும்…
வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும்…
காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும்…
வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை…

ஆண் : நீர்க்குமிழி வெடித்துவிடும்…
உயிர்கூத்தை பிளந்துவிடும்…
கூச்சகூட இயலாது…
கோணித்துணி மறைத்துவிடும்…

ஆண் : மேலென்ன கீழேன்ன…
நீயென்ன நானென்ன…
உயிர் போகும் தருவாயில் ஈசனே சரணாகதி…

—BGM—

ஆண் : கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்து போகும்…
இந்த உடலெனும் காயமும் அழிந்து போகும்…
ஊன்பொருள் தீக்கிரை அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போகும்…

ஆண் : உடலினை நிஜமென எண்ணி எண்ணி…
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி…
கோடிப்பணமும் அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போனாலும்…

ஆண் : அழியாதது உன் பாதம்…
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்…
அழியாதது உன் நாமம்…
நமச்சிவாயம்… நமச்சிவாயம்…

ஆண் : கரையாதது மானுட பாவம்…
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்…
தவறாது என் பற்று அறுத்து…
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்…

—BGM—

ஆண் : நமச்சிவாயம்…
நமச்சிவாயம்…
நமச்சிவாயம்…
நமச்சிவாயம்…

—BGM—


Notes : Naduvan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Dr. Burn. நடுவன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading