Category Archives: 1960’s Movies

அன்பே வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்அன்பே வா

Anbe Vaa Song Lyrics in Tamil


ஆண் : அன்பே வா அன்பே வா…
அன்பே வா அன்பே வா வா வா…

BGM

ஆண் : உள்ளம் என்றொரு கோவிலிலே…
தெய்வம் வேண்டும் அன்பே வா…
உள்ளம் என்றொரு கோவிலிலே…
தெய்வம் வேண்டும் அன்பே வா…

ஆண் : கண்கள் என்றொரு சோலையிலே…
தென்றல் வேண்டும் அன்பே வா…
கண்கள் என்றொரு சோலையிலே…
தென்றல் வேண்டும் அன்பே வா…

ஆண் : அன்பே வா அன்பே வா வா வா…

BGM

ஆண் : நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்…
நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்…

ஆண் : பாா்வையிலே வெளிச்சமில்லை…
பகல் இரவு புரியவில்லை…
பாதையும் தெரியவில்லை…
ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை…

ஆண் : உள்ளம் என்றொரு கோவிலிலே…
தெய்வம் வேண்டும் அன்பே வா…
கண்கள் என்றொரு சோலையிலே…
தென்றல் வேண்டும் அன்பே வா…

ஆண் : அன்பே வா அன்பே வா வா வா…

BGM

ஆண் : வான்பறவை தன் சிறகை எனக்கு தந்தால்…
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்…
வானத்திலே பறந்து சென்றே போனவளை…
அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன்…

ஆண் : அழுதமுகம் சிரித்திருக்க…
ஆசைக்கு உயிர் கொடுப்பேன்…

ஆண் : அன்பே வா அன்பே வா வா…


Notes : Anbe Vaa Song Lyrics in Tamil. This Song from Anbe Vaa (1966). Song Lyrics penned by Vaali. அன்பே வா பாடல் வரிகள்.


அவள் பறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி.பி. ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Aval Parandhu Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே… } * (2)

BGM

ஆண் : என் காதுக்கு மொழியில்லை…
என் நாவுக்கு சுவையில்லை…
என் காதுக்கு மொழியில்லை…
என் நாவுக்கு சுவையில்லை…

ஆண் : என் நெஞ்சுக்கு நினைவில்லை…
என் நிழலுக்கும் உறக்கமில்லை…
என் நிழலுக்கும் உறக்கமில்லை…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

BGM

ஆண் : இந்த வீட்டுக்கு விளக்கில்லை…
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை…
இந்த வீட்டுக்கு விளக்கில்லை…
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை…

ஆண் : என் அன்புக்கு மகள் இல்லை…
ஒரு ஆறுதல் மொழியில்லை…
ஒரு ஆறுதல் மொழியில்லை…

ஆண் : அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

BGM

ஆண் : என் இதயத்தில் பூட்டி வைத்தேன்…
அதில் என்னையே காவல் வைத்தேன்…
அவள் கதவை உடைத்தாளே…
தன் சிறகை விரித்தாளே…
தன் சிறகை விரித்தாளே…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

ஆண் : அவள் எனக்கா மகளானாள்…
நான் அவளுக்கு மகனானேன்…
அவள் எனக்கா மகளானாள்…
நான் அவளுக்கு மகனானேன்…

ஆண் : என் உரிமைத் தாயல்லவா…
என் உயிரை எடுத்து கொண்டால்…
என் உயிரை எடுத்து கொண்டால்…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

BGM


Notes : Aval Parandhu Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. அவள் பறந்து பாடல் வரிகள்.


பச்சை மாமலைபோல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்திருமால் பெருமை

Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரர்றே…
ஆயர் தம் கொழுந்தே என்னும்…

ஆண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரர்றே…
ஆயர் தம் கொழுந்தே என்னும்…

ஆண் : இச்சுவை தவிர யான் போய்…
இந்திர லோகம் ஆளும்…
இச்சுவை தவிர யான் போய்…
இந்திர லோகம் ஆளும்…
அச்சுவை பெறினும் வேண்டேன்…
அரங்கமா நகர் உளானே…

ஆண் : ஊரிலேன் காணி இல்லை…
உறவு மற்று ஒருவர் இல்லை…
பாரில் நின் பாதம் மூலம்…
பற்றிலேன் பரம மூர்த்தி…

ஆண் : ஊரிலேன் காணி இல்லை…
உறவு மற்று ஒருவர் இல்லை…
பாரில் நின் பாதம் மூலம்…
பற்றிலேன் பரம மூர்த்தி…

ஆண் : காரொளி வண்ணனே…
கண்ணனே கதறுகின்றேன்…
காரொளி வண்ணனே…
கண்ணனே கதறுகின்றேன்…

ஆண் : ஆருளர் கலைஞன் அம்மா…
அரங்கமா நகர் உளானே…


Notes : Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil. This Song from Thirumal Perumai (1968). Song Lyrics penned by Kannadasan. பச்சை மாமலைபோல் பாடல் வரிகள்.


வா வாத்யாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆலங்குடி சோமுமனோரமாவி. குமார்பொம்மலாட்டம் (1968)

Vaa Vathiyare Song Lyrics in Tamil


பெண் : வா வாத்யாரே ஊட்டாண்டே…
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்…

பெண் : ஜாம்பஜார் ஜக்கு…
நான் சைதாப் பேட்டே கொக்கு…
ஜாம்பஜார் ஜக்கு…
நான் சைதாப் பேட்டே கொக்கு…

பெண் : வா வாத்யாரே ஊட்டாண்டே…
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்…

பெண் : ஜாம்பஜார் ஜக்கு…
நான் சைதாப் பேட்டே கொக்கு…
ஜாம்பஜார் ஜக்கு…
நான் சைதாப் பேட்டே கொக்கு…

BGM

பெண் : வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்…
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்…

BGM

பெண் : வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்…
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்…

பெண் : லவ்வாப் பாத்து சோக்கா பேசி…
டேக்கா குடுத்தே பின்னாலே…
லவ்வாப் பாத்து சோக்கா பேசி…
டேக்கா குடுத்தே பின்னாலே…

பெண் : சர்தான் வாம்மா கண்ணு…
படா பேஜாராச்சு நின்னு…
அட சர்தான் வாம்மா கண்ணு…
படா பேஜாராச்சு நின்னு…

பெண் : வா வாத்யாரே ஊட்டாண்டே…
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்…

பெண் : ஜாம்பஜார் ஜக்கு…
நான் சைதாப் பேட்டே கொக்கு…
ஜாம்பஜார் ஜக்கு…
நான் சைதாப் பேட்டே கொக்கு…

BGM

பெண் : நைனா ஒன் நெனப்பாலே…
நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு…
நைனா… ஆஆஆ ஒஒ…

பெண் : நைனா ஒன் நெனப்பாலே…
நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு…
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து…
ஜால்னா நெனப்பு வந்தாச்சு…
அட மச்சான்… ஆஆஆ ஒஒ…

பெண் : மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து…
ஜால்னா நெனப்பு வந்தாச்சு…
ஆயா கட இடியாப்பம் நான்…
பாயா கறியும் நீயாச்சு…
ஆயா கட இடியாப்பம் நான்…
பாயா கறியும் நீயாச்சு…

பெண் : வாவா மச்சான் வா மச்சான்…
வாவா மச்சான் வா மச்சான்…
வாவா மச்சான் ஒண்ணா சேந்து…
வாராவதிக்கே போகல்லாம்…

பெண் : வா வாத்யாரே ஊட்டாண்டே…
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்…

பெண் : ஜாம்பஜார் ஜக்கு…
நான் சைதாப் பேட்டே கொக்கு…
ஜாம்பஜார் ஜக்கு…
நான் சைதாப் பேட்டே கொக்கு…


Notes : Vaa Vathiyare Song Lyrics in Tamil. This Song from Bommalattam (1968). Song Lyrics penned by Alangudi Somu. வா வாத்யாரே பாடல் வரிகள்.


சிந்து நதியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்டி.எம். சௌந்தரராஜன், L.R. ஈஸ்வரி & ஜே.வி.ராகவுலுஎம்.எஸ். விஸ்வநாதன்கை கொடுத்த தெய்வம்

Sindhu Nadhiyin Song Lyrics in Tamil


ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…

BGM

ஆண் : சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

ஆண் : கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்…
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்…
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்…
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு…
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு…
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…
ஆண் & பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…

ஆண் : மமதா வேதம் மாயனி மதுபாசம்…
ஆண் & பெண் : மமதாஅவேதம் மாயனி மதுபாசம்…
மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம்…

BGM

ஆண் : நீ கண் கனராகம்…
பெண் : நீ மதி அனுராகம்…
ஆண் : மன ஈ வைபோகம்…
பெண் : பகுதன் அலையோகம்…

ஆண் : வளபுலபுகுலாசம்…
பெண் : நரபுல தராசம்…
ஆண் : வஹிதின அவகாசம்…
பெண் : சா நலிவுலு ஆவேசம்…

BGM

ஆண் : சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்…
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…
சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்…
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…

ஆண் : வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்…
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்…
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM


Notes : Sindhu Nadhiyin Song Lyrics in Tamil. This Song from Kai Kodutha Deivam (1964). Song Lyrics penned by Mahakavi Subramania Bharathiyar. சிந்து நதியின் பாடல் வரிகள்.


மன்னவன் வந்தானடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Mannavan Vandhaanadi Song Lyrics in Tamil


குழு : கலை மகள் துணை கொண்டு…
கலை வென்று புகழ் கொண்ட…
காவலன் வாழ்க வாழ்க…

BGM

குழு : மலை மகள் வரம் கொண்டு…
மலை போன்ற பலம் கொண்ட…
மன்னவன் வாழ்க வாழ்க…

BGM

குழு : திருமகள் அருள் கொண்டு பொருள் கொண்ட…
திருவருட்செல்வரே வாழ்க வாழ்க…

BGM

குழு : இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற…
தலைவனே வாழ்க வாழ்க…

BGM

குழு : குடி மக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற…
கொற்றவா வாழ்க வாழ்க…

—BGM—

குழு : நின் கொடி வாழ்க படை வாழ்க…
குடி வாழ்க குலம் வாழ்க…
நலமும் பல்லாண்டு வாழ்க…

BGM

பெண் : மன்னவன் வந்தானடி தோழி…

BGM

பெண் : மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி…

பெண் : மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்…
மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்…
மன்னவன் வந்தானடி தோழி…

BGM

பெண் : செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்…
வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன்…
செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்…
வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன்…

பெண் : மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்…
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்…
இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்…

பெண் : மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி…

BGM

பெண் : தூவிய பூவினில் மேனிகள் ஆடிட…
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்…
மன்னவன் வந்தானடி…

ஆண் : தத்தித் தாங்கிட தக தரிகிடதோம்…
தித் தாங்கிட தக தரிகிடதோம்…
தகதித் தாங்கிட தக தரிகிடதோம்…
தித் தாங்கிட தக தரிகிடதோம்…

ஆண் : தக தரிகிடதோம் தக தரிகிடதோம்…
தக தரிகிடதோம் தக தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா…

பெண் : ஸ ரி க ம ப த நி…
ஸரிகமபதநி சுரமோடு ஜதியொடு…
நாத கீத ராக பாவம்தான் பெறவே…
மன்னவன் வந்தானடி…

ஆண் : தக்க தின்னம் தரித தகஜனுத துக்கு தரித…
துக்கு தகிட தத்திங்கு தக ஜனக்கு தத்தீம்…
தத் தகிட கிடதக தரிகிட தோம்…
தக தகிட கிடதக தரிகிட தோம்…
தா கிட தத்தோம் கிட தத்தோம் கிட தத்தோம் தத் தா…

பெண் : காதற்க் கவிதை கடலெனப் பெருகிட…
மாதர் மனமும் மயிலென நடமிடவே…
மன்னவன் வந்தானடி…

ஆண் : ததரி ததன தஜணு தஜணு…
ஜணு தஜுணு தத்திமி…
ஜுணு தகதிமி தரிகிட…
தித் தாங்கிட தக தரிகிட தகதா…
ஜுணு தாங்கிட தக தரிகிட தகதா…
தகதித் தாங்கிட தக தரிகிட தகதா தத் தா…

பெண் : திருமலர் மணமுற குறுநகை நலம் பெற…
மலர் விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே…
மன்னவன் வந்தானடி…

ஆண் : திரிகிட தரிகிட தரிகிட திரிகிட…
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட…
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட திரிகிட தரிகிட தத் தா…

பெண் : தித்தித்தால் அது செம்பொற்க் கிண்ணம்…
தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்…

ஆண் : ததின்ன தங்க ததின்ன தங்க…
ததின்ன தாங்கிட தரிகிட…
ததின்ன தங்க ததின்ன தாங்கிட…
தக தரிகிட தகதா…

பெண் : சித்தத்தால் ஒரு காதற்ச் சின்னம்…
தத்தித் தாவிய பாவையின் முன்னம்…
என் மன்னவன்…

BGM

ஆண் : தத்தித்தா கிடதக தரிகிட தோம்…
தித்தா கிடதக தரிகிட தோம்…
தா கிடதக தரிகிட தோம்…
கிடதக தரிகிட தோம் தாங்கிட தோம் தத்திம்…
தகத தகஜம் தகிட தகஜுணு தகிட தத்தா…

பெண் : விரைவினில் நீ நீ…
மண மலர் தா தா…
திருமாற்ப் பா பா…
தாமதமா மா…
மயில் எனைப் பார் கா…

பெண் : விரைவினில் நீ மண மலர் தா…
திருமாற்ப் பா தாமதமா…
மயில் எனைப் பார்…
நி த ப ம க நீதபமக நிதபமக…
ஸ சதமது தரவா…

ஆண் : தரிகிட ஜம் தீங்கிட தாங்கிட தக…
தரிகிட தகதா…

பெண் : ரீ ரிகமப தனிஸா…
ஆண் : தஜ்ஜம் தஜ்ஜம் தஜம் தரிகிட தா…

பெண் : கா கருனையின் தலைவா…
ஆண் : தாங்கிட தத்தீம் கிடதத்தீம் கிடதத்தீம் ததா…

பெண் : மா மதி மிகு முதல்வா…
ஆண் : தரிகிட தோம் த தரிகிட தோம் த தரிகிட தா…

பெண் : பா பரம் பொருள் இறைவா…
தா தனிமையில் வரவா…
நீ இறையருள் பெறவா…
ஆளும் புவி ஏழும் கடல் ஏழும்…
நடமாடும் படி வாராய் அருள் தாராய்…

ஆண் : தரிகிட திம் திரிகிடதா…

பெண் : ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும்…
படி வாராய் தாராய்…
அனுதினம் உனை வழிபடும் வளம்…
இனி ஒரு தலைவனை பணிவதில்லை…
மன்னவன் வந்தானடி…

ஆண் : தகதித் தாங்கிட தக தரிகிட தக…
ததித் தாங்கிட தக தரிகிட தக…
தரிகிட தோம் தரிகிட தோம்…
தரிகிட தோம் தரிகிட தோம் தா…


Notes : Mannavan Vandhaanadi Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. மன்னவன் வந்தானடி பாடல் வரிகள்.


ஆதி சிவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாகே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Aadhi Sivan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…
ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…

BGM

பெண் : வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே…
திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே…
வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே…
திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே…

பெண் : அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்…
அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம்…
அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே…
அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…

பெண் : நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா…
அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா…
நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா…
அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா…

பெண் : பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா…
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா…
அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா…
அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா…

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

ஆண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே…
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே…

ஆண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே… ஏ…


Notes : Aadhi Sivan Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. ஆதி சிவன் பாடல் வரிகள்.


சித்தமெல்லாம் எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி. எம். சௌந்தரராஜன்கே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Sitthamellaam Enakku Song Lyrics in Tamil


ஆண் : பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா…
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை…
வைத்தாய்ப் பெண்ணை தென்பால்…
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்…
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…

ஆண் : அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை…
அந்த அம்மையில்லாமல் இந்தப்பிள்ளை இல்லை…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…

BGM

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக…
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…

ஆண் : பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக…
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக…
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக…
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக…
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே…

BGM

ஆண் : கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே…
கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…
கண்ணைத் திறந்து வைத்த கருப் பொருளே…
கோவில் கதவைத் திறந்தழைத்த திருவருளே…

ஆண் : வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே…
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே…
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே இறைவா…

ஆண் : சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…


Notes : Sitthamellaam Enakku Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. சித்தமெல்லாம் எனக்கு பாடல் வரிகள்.


திருப்பரங்குன்றத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பூவை செங்குட்டுவன்ராஜலட்சுமி & பி. சுசீலாகே.வி.மகாதேவன்கந்தன் கருணை

Thirupparang Kundrathil Song Lyrics in Tamil


BGM

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…
திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : பழநியிலே இருக்கும் கந்தப் பழம்…
நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்…
பழநியிலே இருக்கும் கந்தப் பழம்…
நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்…

பெண் : பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்…
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்…
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்…
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

BGM

பெண் : சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு…
உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு…
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு…
உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு…

பெண் : உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை…
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை…
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை…
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

பெண் : திருச்செந்தூரிலே வேலாடும்…
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்…

பெண் : திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…


Notes : Thirupparang Kundrathil Song Lyrics in Tamil. This Song from Kandhan Karunai (1967). Song Lyrics penned by Poovai Senguttuvan. திருப்பரங்குன்றத்தில் பாடல் வரிகள்.


கல்வியா செல்வமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்சரஸ்வதி சபதம்

Kalviya Selvama Veerama Song Lyrics in Tamil


ஆண் : கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…

ஆண் : ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…

ஆண் : கல்வியா செல்வமா வீரமா…

BGM

ஆண் : கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா…
கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா…
பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா…
கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா…
பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ் சேருமா…

ஆண் : கற்றாலும் பெற்றாலும் பலம் ஆகுமா…
கற்றாலும் பெற்றாலும் பலம் ஆகுமா…
வீரம் காணாத வாள் என்றும் வாழ்வாகுமா…
வீரம் காணாத வாள் என்றும் வாழ்வாகுமா…

ஆண் : கல்வியா செல்வமா வீரமா…

BGM

ஆண் : படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா…
பணம் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா…
படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா…
பணம் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா…

ஆண் : படித்தவன் படைத்தவன் யாராயினும்…
படித்தவன் படைத்தவன் யாராயினும்…
பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா…
பலம் படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா…

ஆண் : கல்வியா செல்வமா வீரமா…

BGM

ஆண் : ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது…
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது…
ஒன்றுக்குள் ஒன்றாக கருவானது…
அது ஒன்றினில் ஒன்றாக பொருளானது…

ஆண் : ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது…
ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது…
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரயேது…
மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் நிகரயேது…

ஆண் : கல்வியா செல்வமா வீரமா…

BGM

ஆண் : மூன்று தலை முறைக்கும் நிதி வேண்டுமா…
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா…
மூன்று தலை முறைக்கும் நிதி வேண்டுமா…
காலம் முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா…

ஆண் : தூங்கும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா…
தூங்கும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா…
இவை மூன்றும் துணை நிற்கும் நலம் வேண்டுமா…
இவை மூன்றும் துணை நிற்கும் நலம் வேண்டுமா…

ஆண் : கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…

ஆண் : கல்வியா செல்வமா வீரமா…


Notes : Kalviya Selvama Veerama Song Lyrics in Tamil. This Song from Saraswathi Sabatham (1966). Song Lyrics penned by Kannadasan. கல்வியா செல்வமா பாடல் வரிகள்.