அவள் பறந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி.பி. ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Aval Parandhu Song Lyrics in Tamil


—BGM—

{ ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே… } * (2)

—BGM—

ஆண் : என் காதுக்கு மொழியில்லை…
என் நாவுக்கு சுவையில்லை…
என் காதுக்கு மொழியில்லை…
என் நாவுக்கு சுவையில்லை…

ஆண் : என் நெஞ்சுக்கு நினைவில்லை…
என் நிழலுக்கும் உறக்கமில்லை…
என் நிழலுக்கும் உறக்கமில்லை…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

—BGM—

ஆண் : இந்த வீட்டுக்கு விளக்கில்லை…
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை…
இந்த வீட்டுக்கு விளக்கில்லை…
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை…

ஆண் : என் அன்புக்கு மகள் இல்லை…
ஒரு ஆறுதல் மொழியில்லை…
ஒரு ஆறுதல் மொழியில்லை…

ஆண் : அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

—BGM—

ஆண் : என் இதயத்தில் பூட்டி வைத்தேன்…
அதில் என்னையே காவல் வைத்தேன்…
அவள் கதவை உடைத்தாளே…
தன் சிறகை விரித்தாளே…
தன் சிறகை விரித்தாளே…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

ஆண் : அவள் எனக்கா மகளானாள்…
நான் அவளுக்கு மகனானேன்…
அவள் எனக்கா மகளானாள்…
நான் அவளுக்கு மகனானேன்…

ஆண் : என் உரிமைத் தாயல்லவா…
என் உயிரை எடுத்து கொண்டால்…
என் உயிரை எடுத்து கொண்டால்…

ஆண் : அவள் பறந்து போனாளே…
என்னை மறந்து போனாளே…
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை…
கவர்ந்து போனாளே…

—BGM—


Notes : Aval Parandhu Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. அவள் பறந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading