என்னைத் தொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Ennai Thottu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

ஆண் : முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்…
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்…

ஆண் & பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

—BGM—

பெண் : ஆஹா… தாழை மடல் சுற்றும் காற்றைக் கண்டேன்…
ஓஹோ… தள்ளாடி உள்ளத்தைத் தழுவக் கண்டேன்…
எந்தன் வாழை உடல் சற்று வாடக் கண்டேன்…
வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன்…

பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

ஆண் : ஆஹா… வஞ்சி நடை சற்று அஞ்சக் கண்டேன்…
ஓஹோ… வண்ணக் கனி இதழ் கொஞ்சக் கண்டேன்…
ஆஹா… பிஞ்சு கொடியிடை கெஞ்சக் கண்டேன்…
பெண்ணுக்குள் மண்ணோடு விண்ணைக் கண்டேன்…

ஆண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

—BGM—

ஆண் & பெண் : ஆஹா… மாலைக்கு மாலை மாயம் கண்டோம்…
ஓஹோ… வயதுக்கும் மனதுக்கும் நியாயம் கண்டோம்…
ஓஹோ… சோலைக் கிளி என்று மாறுகின்றோம்…
சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம்…

ஆண் & பெண் : என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…

—BGM—


Notes : Ennai Thottu Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. என்னைத் தொட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading