நீரோடும் வைகையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Neerodum Vaikaiyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…

பெண் : நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…

பெண் : தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

—BGM—

ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

—BGM—

பெண் : மகளே உன்னைத் தேடி நின்றாளே…
மங்கை இந்த மங்கல மங்கை…

ஆண் : வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை…
உன் மழலையின் தந்தை…

ஆண் : நான் காதலென்னும் கவிதை சொன்னேன்…
கட்டிலின் மேலே…

பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்…
தொட்டிலின் மேலே…

ஆண் : நான் காதலென்னும் கவிதை சொன்னேன்…
கட்டிலின் மேலே…

பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்…
தொட்டிலின் மேலே…

ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ…
ஆரிரோ ஆராரோ…

—BGM—

ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

—BGM—

பெண் : குயிலே என்று கூவி நின்றேனே உன்னை…
என் குலக்கொடி உன்னை…

ஆண் : துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே…
உன் தோள்களில் இங்கே…

பெண் : உன் ஒரு முகமும் திருமகளின்…
உள்ளமல்லவா…

ஆண் : உங்கள் இரு முகமும்…
ஒரு முகத்தின் வெள்ளமல்லவா…

ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ…
ஆரிரோ ஆராரோ…

—BGM—

ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…

ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…

பெண் : ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…


Notes : Neerodum Vaikaiyile Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. நீரோடும் வைகையிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading