மன்னவன் வந்தானடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாகே. வி. மகாதேவன்திருவருட்செல்வர்

Mannavan Vandhaanadi Song Lyrics in Tamil


குழு : கலை மகள் துணை கொண்டு…
கலை வென்று புகழ் கொண்ட…
காவலன் வாழ்க வாழ்க…

BGM

குழு : மலை மகள் வரம் கொண்டு…
மலை போன்ற பலம் கொண்ட…
மன்னவன் வாழ்க வாழ்க…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : திருமகள் அருள் கொண்டு பொருள் கொண்ட…
திருவருட்செல்வரே வாழ்க வாழ்க…

BGM

குழு : இயல் இசை நாடகம் முத்தமிழ் காக்கின்ற…
தலைவனே வாழ்க வாழ்க…

BGM

குழு : குடி மக்கள் மனம் போல முடியாட்சி காண்கின்ற…
கொற்றவா வாழ்க வாழ்க…

—BGM—

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : நின் கொடி வாழ்க படை வாழ்க…
குடி வாழ்க குலம் வாழ்க…
நலமும் பல்லாண்டு வாழ்க…

BGM

பெண் : மன்னவன் வந்தானடி தோழி…

BGM

பெண் : மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி…

பெண் : மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்…
மாயவனோ தூயவனோ நாயகனோ நான் அறியேன்…
மன்னவன் வந்தானடி தோழி…

BGM

பெண் : செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்…
வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன்…
செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்…
வண்ண சந்தத்திலே கவிதைச் சரம் கொடுப்பேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்…
மூன்று தமிழ் மாலை சூட்டிடுவேன்…
இனி முப்பொழுதும் கற்பனையில் அற்புதமாய் வாழ்ந்திருக்கும்…

பெண் : மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி…

BGM

பெண் : தூவிய பூவினில் மேனிகள் ஆடிட…
நாயகன் நாயகி பாவனை காட்ட வரும்…
மன்னவன் வந்தானடி…

ஆண் : தத்தித் தாங்கிட தக தரிகிடதோம்…
தித் தாங்கிட தக தரிகிடதோம்…
தகதித் தாங்கிட தக தரிகிடதோம்…
தித் தாங்கிட தக தரிகிடதோம்…

ஆண் : தக தரிகிடதோம் தக தரிகிடதோம்…
தக தரிகிடதோம் தக தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம்…
தரிகிடதோம் தரிகிடதோம் தத்தா…

பெண் : ஸ ரி க ம ப த நி…
ஸரிகமபதநி சுரமோடு ஜதியொடு…
நாத கீத ராக பாவம்தான் பெறவே…
மன்னவன் வந்தானடி…

ஆண் : தக்க தின்னம் தரித தகஜனுத துக்கு தரித…
துக்கு தகிட தத்திங்கு தக ஜனக்கு தத்தீம்…
தத் தகிட கிடதக தரிகிட தோம்…
தக தகிட கிடதக தரிகிட தோம்…
தா கிட தத்தோம் கிட தத்தோம் கிட தத்தோம் தத் தா…

பெண் : காதற்க் கவிதை கடலெனப் பெருகிட…
மாதர் மனமும் மயிலென நடமிடவே…
மன்னவன் வந்தானடி…

ஆண் : ததரி ததன தஜணு தஜணு…
ஜணு தஜுணு தத்திமி…
ஜுணு தகதிமி தரிகிட…
தித் தாங்கிட தக தரிகிட தகதா…
ஜுணு தாங்கிட தக தரிகிட தகதா…
தகதித் தாங்கிட தக தரிகிட தகதா தத் தா…

பெண் : திருமலர் மணமுற குறுநகை நலம் பெற…
மலர் விழி சிவந்திட கனி இதழ் கனிந்திடவே…
மன்னவன் வந்தானடி…

ஆண் : திரிகிட தரிகிட தரிகிட திரிகிட…
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட…
திரிகிட தரிகிட தரிகிட திரிகிட திரிகிட தரிகிட தத் தா…

பெண் : தித்தித்தால் அது செம்பொற்க் கிண்ணம்…
தத்தித் தாவிடும் தங்கக் கிண்ணம்…

ஆண் : ததின்ன தங்க ததின்ன தங்க…
ததின்ன தாங்கிட தரிகிட…
ததின்ன தங்க ததின்ன தாங்கிட…
தக தரிகிட தகதா…

பெண் : சித்தத்தால் ஒரு காதற்ச் சின்னம்…
தத்தித் தாவிய பாவையின் முன்னம்…
என் மன்னவன்…

BGM

ஆண் : தத்தித்தா கிடதக தரிகிட தோம்…
தித்தா கிடதக தரிகிட தோம்…
தா கிடதக தரிகிட தோம்…
கிடதக தரிகிட தோம் தாங்கிட தோம் தத்திம்…
தகத தகஜம் தகிட தகஜுணு தகிட தத்தா…

பெண் : விரைவினில் நீ நீ…
மண மலர் தா தா…
திருமாற்ப் பா பா…
தாமதமா மா…
மயில் எனைப் பார் கா…

பெண் : விரைவினில் நீ மண மலர் தா…
திருமாற்ப் பா தாமதமா…
மயில் எனைப் பார்…
நி த ப ம க நீதபமக நிதபமக…
ஸ சதமது தரவா…

ஆண் : தரிகிட ஜம் தீங்கிட தாங்கிட தக…
தரிகிட தகதா…

பெண் : ரீ ரிகமப தனிஸா…
ஆண் : தஜ்ஜம் தஜ்ஜம் தஜம் தரிகிட தா…

பெண் : கா கருனையின் தலைவா…
ஆண் : தாங்கிட தத்தீம் கிடதத்தீம் கிடதத்தீம் ததா…

பெண் : மா மதி மிகு முதல்வா…
ஆண் : தரிகிட தோம் த தரிகிட தோம் த தரிகிட தா…

பெண் : பா பரம் பொருள் இறைவா…
தா தனிமையில் வரவா…
நீ இறையருள் பெறவா…
ஆளும் புவி ஏழும் கடல் ஏழும்…
நடமாடும் படி வாராய் அருள் தாராய்…

ஆண் : தரிகிட திம் திரிகிடதா…

பெண் : ஆளும் புவி ஏழும் கடல் ஏழும் நடமாடும்…
படி வாராய் தாராய்…
அனுதினம் உனை வழிபடும் வளம்…
இனி ஒரு தலைவனை பணிவதில்லை…
மன்னவன் வந்தானடி…

ஆண் : தகதித் தாங்கிட தக தரிகிட தக…
ததித் தாங்கிட தக தரிகிட தக…
தரிகிட தோம் தரிகிட தோம்…
தரிகிட தோம் தரிகிட தோம் தா…


Notes : Mannavan Vandhaanadi Song Lyrics in Tamil. This Song from Thiruvarutchelvar (1967). Song Lyrics penned by Kannadasan. மன்னவன் வந்தானடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading