Tag Archives: பக்தி பாடல்கள்

பக்தி பாடல்கள்

எங்க கருப்பசாமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownவீரமணிதாசன்Unknownபக்தி பாடல்கள்

Enga Karuppasami Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

BGM

ஆண் : அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்…
குழு : அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்…
குழு : முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன்…

ஆண் : சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்…
குழு : சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி… சாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

BGM

ஆண் : ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்…
குழு : ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான்…

ஆண் : சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்…
குழு : சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்…
குழு : வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான்…

ஆண் : பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்…
குழு : பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

BGM

ஆண் : அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்…
குழு : அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம்…

ஆண் : பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்…
குழு : பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்…
குழு : தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான்…

ஆண் : ஒய்… மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்…
குழு : மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பண்ண சாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பண்ணசாமி…

BGM

ஆண் : வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்…
குழு : வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும்…

ஆண் : இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்…
குழு : இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்…
குழு : கற்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார்…

ஆண் : ஒய்… கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்…
குழு : கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்…

ஆண் : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி சாமி…
குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

BGM

ஆண் : எங்க கருப்பன் வரான் எங்க…
குழு : கருப்பசாமி
ஆண் : கார்மேகம் போல வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : அந்தா வரான் இந்தா வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : நாகவல்லி கொண்டு வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஒய்… முன்கோப காரன் வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : அருவாளு தூக்கி வரான்…
கருப்பசாமி…

ஆண் : ஜெவ்வாது வாசகாரன்…
குழு : கருப்பசாமி…
ஆண் : வெள்ளிப் பிரம்பு கொண்டு வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஒய்… வேகமாக ஆடி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : வேகமாக ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : வாட்ட சாட்டமாக வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : பம்பாநதி தீரத்திலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : கருப்பன் வரும் வேளையிலே…
குழு : கருப்பசாமி…

ஆண் : பம்பாநதி குளிச்சி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : கருப்பசாமி ஆடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : கரண்ட அளவு தண்ணியிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : தள்ளிக் கொண்டு வாரானப்பா…
குழு : கருப்பசாமி…

ஆண் : சாமி முட்டளவு தண்ணியிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : முழுங்கி கொண்டு வாரானப்பா…
குழு : கருப்பசாமி…

ஆண் : அரையளவு தண்ணியிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : துள்ளிக் கொண்டு ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : கழுத்தளவு தண்ணியிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : கருப்பசாமி நீந்தி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : அந்தளவு தண்ணியிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : அங்காரமா ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : எங்க கருப்பன் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : எங்க கருப்பன் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஒய் பம்பையிலே குளிச்சி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : பாங்காக வரான் ஐயா…
குழு : கருப்பசாமி…

ஆண் : அந்தா வரான் இந்தா வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : பெரியான வட்டம் வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : சிரியான வட்டம் வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : ஒய் கரிமலையை ஏறி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : பகவதியை வணங்கி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : கரியிலாந்தோடு வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : இலவம் தாவளம் கடந்து வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : சாமி முக்குழிய தாண்டி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : அழுதாமேடு உச்சி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : சாமி அழுதையிலே குளிச்சி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : காளை கட்டி தொட்டு வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : சாமி பூங்காவனம் புகுந்து வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : எரிமேலி வாரானய்யா…
குழு : கருப்பசாமி…
ஆண் : வாவர் சாமி கூட வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : எரிமேலி வந்து இறங்கிய கருப்பன்…
சுற்றும் முற்றும் பார்த்து…
எம்பெருமான் கருப்பனுக்கு மலர்கள் என்றால்…
கொள்ளை ப்ரியம்…

ஆண் : அவர் மலர்களால் சல்லடை கட்டி…
வருகின்ற வேளையில்… அஹா அஹா…
காண கண்கோடி வேண்டும்…
அவை என்னென்ன மலர்கள் என்று கேட்டால்…

ஆண் : எடுத்து வைக்கும் கால்களுக்கு…
குழு : சாமந்தி சள்ளடையாம்…
ஆண் : முன்னே வைக்கும் கால்களுக்கு…
குழு : முல்லைப் பூ சள்ளடையாம்…

ஆண் : பின்னே வைக்கும் கால்களுக்கு…
குழு : பிச்சி பூ சள்ளடையாம்…
ஆண் : அள்ளி வைக்கும் கால்களுக்கு…
குழு : அரளி பூ சள்ளடையாம்…

ஆண் : துள்ளி வைக்கும் கால்களுக்கு…
குழு : துளசியால சள்ளடையாம்…
ஆண் : வீசி வைக்கும் கால்களுக்கு…
குழு : வீரத்தாலே ச்ள்ளடையாம்…
ஆண் : துள்ளி வைக்கு கால்களுக்கு…
குழு : அருகம்புல் சள்ளடையாம்…

BGM

ஆண் : ஒய் உச்சந்தல கட்டி வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : புளியாட்டும் ராஜா வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : சபரிமலை காவல்காரன்…
குழு : கருப்பசாமி…
ஆண் : ஆங்காரமாய் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : தமிழ் நாட்டு எல்லையிலே…
குழு : கருப்பசாமி…
ஆண் : தாண்டி தாண்டி வாரானய்யா…
குழு : கருப்பசாமி…

ஆண் : செங்கோட்ட கருப்ப வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : தென்காசி சுடல வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஆம்பூரு சுடல வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : சாத்தானறு சுடல வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : அங்காரமாய் வாரானய்யா…
குழு : கருப்பசாமி…
ஆண் : ஆவேசமாய் வாராரய்யா…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஒய் போராடி வாராரய்யா…
குழு : கருப்பசாமி…
ஆண் : காவலாளி வாராரய்யா…
குழு : கருப்பசாமி…

ஆண் : பாபநாசம் கோட்டைகுள்ளே…
குழு : கருப்பசாமி…
ஆண் : வணப் பேச்சி கூட வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : தேவர்கள் மலர் சொரியும் சொரிமுத்து அய்யனார்…
கோவில் வந்து இறங்கிய எம்பெருமான் கருப்பன்…
யார் யாரை வணங்குகிறான் என்று கேட்டால்…

ஆண் : என்னன்னேன் சேட்டனடா…
குழு : சாமியே…
ஆண் : திரு மகாலிங்க சாமியரே…
குழு : ஐயப்போ…

ஆண் : தட்சனாமூர்த்தி சாமி…
குழு : சாமியே…
ஆண் : ஒய் சங்கிலி பூதத்தாரே…
குழு : ஐயப்போ…

ஆண் : பாதாள பூதத்தாரே…
குழு : சாமியே…
ஆண் : மேல் வாச பூதத்தாரே…
குழு : ஐயப்போ…

ஆண் : சுடர் மாடன் சாமியரே…
குழு : சாமியே…
ஆண் : ஒய் தலைவனான சாமியரே…
குழு : ஐயப்போ…

ஆண் : உண்டில் மாடன் சாமியரே…
குழு : சாமியே…
ஆண் : பள்ளி மாடன் சாமியரே…
குழு : ஐயப்போ…

ஆண் : உக்ரகாளி தாயாரே…
குழு : சாமியே
ஆண்
: வன பேச்சி தாயாரே…
குழு : ஐயப்போ…

ஆண் : ஜக்கம்மா தாயாரே…
குழு : சாமியே…
ஆண் : வண்டி மலச்சி தாயாரே…
குழு : ஐயப்போ…

ஆண் : பட்டராயன் சாமியரே…
குழு : சாமியே…
ஆண் : ஒய் கரடி மாடன் சாமியரே…
குழு : சாமியே…
ஆண் : அக்ஸ்தியின் மாமுனியும்…
குழு : ஐயப்போ…

ஆண் : ஆங்காரமாய் காட்சி தந்தார்…
குழு : ஐயப்போ…
ஆண் : அக்ஸ்தியின் மாமுனியும்…
குழு : ஐயப்போ…

ஆண் : ஆங்காரமாய் காட்சி தந்தார்…
குழு : ஐயப்போ…
ஆண் : அக்ஸ்தியின் மாமுனியும்…
குழு : ஐயப்போ…

ஆண் : இப்படியாக தரிசித்து கொண்டு வந்த…
எம்பெருமான் கருப்பன்…
இந்த ஐயப்பன் மலர் பூஜை வருவதற்கு…
ஆவல் கொண்டு கண்ணிமாரையும்…
சாமி மாரையும் ஐயப்ப மாரையும்…
மாளிகைபுரத்தம்மனையும் ஆன்மீக நெஞ்சங்களையும்…
வாழ்த்தி அருள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு…
இந்த ஐயப்பன் பூஜைக்கு கருப்பன் வருகிறான்…
ஆங்காரமாய் பரவசமாய் உதிரமாய் ஓடி வருகிறான்…

BGM

ஆண் : எங்க கருப்பசாமி…
குழு : கருப்பசாமி…
ஆண் : எங்க கருப்பசாமி…
குழு : கருப்பசாமி…

ஆண் : கருப்பன் வரான் கருப்பன் வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : ஆங்காரமாய் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஆங்காரமாய் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி
ஆண் : கருப்பன் வரான் கருப்பன் வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : ஆங்காரமாய் ஓடி வரான்…
குழு : கருப்பசாமி… …
ஆண் : ஒய் ஆவேசமாய் தேடி வரான்…
குழு : கருப்பசாமி…

ஆண் : கருப்பன் வரான் கருப்பன் வரான்…
குழு : கருப்பசாமி…
ஆண் : கருப்பன் வரான் கருப்பன் வரான்…
குழு : கருப்பசாமி…

குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

குழு : எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி…

ஆண் : ஸ்வாமியே சரணம் ஐயப்போ…
கருப்பண்ண ஸ்வாமியே சரணம் ஐயப்போ…
சத்குரு நாதனே சரணம் ஐயப்போ…


Notes : Enga Karuppasami Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. எங்க கருப்பசாமி பாடல் வரிகள்.


Jesus Christ Song Lyrics in Tamil

காப்பவரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
மோகன் சி லாசரஸ்பி. உத்தாரா உன்னிகிருஷ்ணன்ஸ்வீட்டன் ஜே பால்இயேசு பாடல்கள்

Kappavarae Song Lyrics in Tamil


BGM

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : போக்கையும் வரத்தையும் காப்பவரே…
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா…
போக்கையும் வரத்தையும் காப்பவரே…
பொழுதெல்லாம் காத்து நடத்துமையா…

பெண் : இரவும் பகலும் காப்பவரே…
எப்போதும் காத்து நடத்துமையா…
இரவும் பகலும் காப்பவரே…
எப்போதும் காத்து நடத்துமையா…
எப்போதும் காத்து நடத்துமையா…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : உறங்காமல் தூங்காமல் காப்பவரே…
உமக்காக வாழ உதவுமய்யா…
உறங்காமல் தூங்காமல் காப்பவரே…
உமக்காக வாழ உதவுமய்யா…

பெண் : தீமைகள் விலக்கியே காப்பவரே…
தீயவன் செயல்களை முடக்குமையா…
தீமைகள் விலக்கியே காப்பவரே…
தீயவன் செயல்களை முடக்குமையா…
தீயவன் செயல்களை முடக்குமையா…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

BGM

பெண் : ஆவி ஆத்மாவை காப்பவரே…
பரிசுத்த வாழ்வை தாருமையா…
ஆவி ஆத்மாவை காப்பவரே…
பரிசுத்த வாழ்வை தாருமையா…

பெண் : வழுவாமல் தினமும் காப்பவரே…
வருகையில் உம்மோடு சேருமையா…
வழுவாமல் தினமும் காப்பவரே…
வருகையில் உம்மோடு சேருமையா…
வருகையில் உம்மோடு சேருமையா…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…

பெண் : காப்பவரே என்னை காப்பவரே…
சோதனைக்கு விலக்கி காப்பவரே…
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமே…
எந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே…


Notes : Kappavarae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Mohan C Lazarus. காப்பவரே பாடல் வரிகள்.


ஸ்வாமியே சரணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Swameyea Saranam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : இருமுடி தாங்கிய தலையொரு கோடி…
கோடியுமே உனைத்தேடி…
அருள் பெற திருத்தலம் வந்தோம் நாடி…

குழு : இருமுடி தாங்கிய தலையொரு கோடி…
கோடியுமே உனைத்தேடி…
அருள் பெற திருத்தலம் வந்தோம் நாடி…

ஆண் : எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி…
ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா…

குழு : எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி…
ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

{ குழு : ஐயப்ப திந்தகதோம் தையதோம்…
ஸ்வாமி திந்தகதோம்…
ஸ்வாமி திந்தகதோம் தையதோம்…
ஐயப்ப திந்தகதோம்…} * (7)

குழு : ஐயப்ப திந்தகதோம் தையதோம்…
ஸ்வாமி திந்தகதோம்…
ஸ்வாமியே சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா… சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி…
அங்கிருந்திரண்டு கல் எடுத்து…
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து…

குழு : அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி…
அங்கிருந்திரண்டு கல் எடுத்து…
அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து…

ஆண் : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி…
வந்தோம் ஆனந்தம் தொடுத்து…

குழு : கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி…
வந்தோம் ஆனந்தம் தொடுத்து…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி…
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு…
பம்பா விளக்கினை நகர்த்தி…

குழு : பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி…
பக்தியுடன் உணவருந்தி அங்கொரு…
பம்பா விளக்கினை நகர்த்தி…

ஆண் : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட…
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்…

குழு : சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட…
ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்…
ஸ்வாமி நின் வாசலைத் தேடி…
உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி…

குழு : தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில்…
ஸ்வாமி நின் வாசலைத் தேடி…
உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி…

ஆண் : பதினெட்டுப் படிக்கண்டு…
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி…

குழு : பதினெட்டுப் படிக்கண்டு…
கோவிலில் சென்று பரவசமானவர் கோடி…

குழு : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

ஆண் : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
குழு : ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…

ஆண் : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
குழு : ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…

ஆண் : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…
குழு : அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா…
ஆண் : ஸ்வாமியே…

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஆண் : சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா…
ஆண் : ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா…

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஆண் : சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா…
ஆண் : சரணம் ஐயப்பா… சரணம் ஐயப்பா…

குழு : ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…


Notes : Swameyea Saranam Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. ஸ்வாமியே சரணம் பாடல் வரிகள்.


மாதா உன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅச்சாணி

Maatha Un Kovilil Song Lyrics in Tamil


பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

பெண் : தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

BGM

பெண் : மேய்ப்பன் இல்லாத மந்தை…
வழி மாறுமே… ஏஏ…

பெண் : மேய்ப்பன் இல்லாத மந்தை…
வழி மாறுமே… ஏஏ…
மேரி உன் ஜோதி கண்டால்…
விதி மாறுமே…

பெண் : மெழுகு போல் உருகினோம்…
கண்ணீரை மாற்ற வா மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

BGM

பெண் : காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே…
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே…
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே…
அருள் தரும் திருச்சபை…
மணியோசை கேட்குமோ மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…

BGM

பெண் : பிள்ளை பெறாத பெண்மை தாயானது…
பிள்ளை பெறாத பெண்மை தாயானது…
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது…
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…

பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்… ஹ்ஹீம்ம்ம் ஹீம்ம்ம்…


Notes : Maatha Un Kovilil Song Lyrics in Tamil. This Song from Achchani (1978). Song Lyrics penned by Vaali. மாதா உன் பாடல் வரிகள்.


கண்கள் உம்மை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் வெஸ்லிநேகாஎஸ். ஜெயசிங்இயேசு பாடல்கள்

Kangal Ummai Thaeduthae Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

பெண் : எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

BGM

பெண் : என் இன்ப நேசமே என் இயேசுராஜனே…
உம்மைதான் என் கண்கள் தேடுதே…
என் இன்ப நேசமே என் இயேசுராஜனே…
உம்மைதான் என் கண்கள் தேடுதே…

பெண் : எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

BGM

பெண் : தேனிலும் இனிமையே நேசரின் நேசமே…
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே…
தேனிலும் இனிமையே நேசரின் நேசமே…
உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே…

பெண் : எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

BGM

பெண் : சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே…
உம்மை காணவே என் மனது துடிக்குதே…
சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே…
உம்மை காணவே என் மனது துடிக்குதே…

பெண் : எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…
எத்தனை எத்தனை இன்பம்…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…

பெண் : கண்கள் உம்மை தேடுதே…
காத்திருந்து ஏங்குதே…
உம சத்தம் கேட்டிட…
என் இதயம் துடிக்குதே…


Notes : Kangal Ummai Thaeduthae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Wesley. கண்கள் உம்மை பாடல் வரிகள்.


தேடுகின்ற கண்களுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்அம்பிலிஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Thedivarum Kannukalil Song Lyrics in Tamil


BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…

BGM

பெண் : வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி…
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : கண்ணனும் நீ கணபதி நீ…
கந்தனும் நீயே…
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்…
விஷ்ணுவும் நீயே…

பெண் : கண்ணனும் நீ கணபதி நீ…
கந்தனும் நீயே…
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்…
விஷ்ணுவும் நீயே…

பெண் : அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே…
என்மேல் அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடிவந்தாயே…
ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே…
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே…

பெண் : தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே…
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே…

பெண் : அன்பு கொண்டு தந்தைக்கவன்…
செய்யும் பணியிலே…
நாங்கள் ஆண்டு தோறும் வந்து நிற்போம்…
உந்தன் நிழலிலே…
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…

BGM

பெண் : வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி…
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM


Notes : Thedivarum Kannukalil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. தேடுகின்ற கண்களுக்குள் பாடல் வரிகள்.


என் கருவை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஆரோன் பாலாஆரோன் பாலாஆரோன் பாலாஇயேசு பாடல்கள்

En Karuvai Kandeer Ayya Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…

BGM

ஆண் : எலும்புகள் உருவாகல…
நரம்புகள் உருவாகல…
தசைகள் உருவாகல…
தரிசனம் உருவானதே…
தாய் கருவிலே தரிசனம் உருவானதே…

ஆண் : எலும்புகள் உருவாகல…
நரம்புகள் உருவாகல…
தசைகள் உருவாகல…
தரிசனம் உருவானதே…
தாய் கருவிலே தரிசனம் உருவானதே…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…

BGM

ஆண் : அழியாமல் அணைத்துக் கொண்டீர்…
கலையாமல் காத்துக் கொண்டீர்…
குறைவின்றி பிறக்கச் செய்தீர்…
பத்திரமாய் என்னை சுமந்தீரே…
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே…

ஆண் : அழியாமல் அணைத்துக் கொண்டீர்…
கலையாமல் காத்துக் கொண்டீர்…
குறைவின்றி பிறக்கச் செய்தீர்…
பத்திரமாய் என்னை சுமந்தீரே…
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…

ஆண் : என் தாய் உருவாகும் முன்னே…
என் கருவை கண்டீரையா…
என் பெயர் உருவாகும் முன்னே…
பெயர் சொல்லி அழைத்தீரையா…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…

ஆண் : எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்…
சொல்ல வார்த்தையே இல்ல…
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்…
வேறு ஆசையே இல்ல…
வேறு ஆசையே இல்ல…
வேறு ஆசையே இல்ல…


Notes : En Karuvai Kandeer Ayya Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Aaron Bala. என் கருவை பாடல் வரிகள்.


சபரி மலையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Sabarimalaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

BGM

ஆண் : பாலெனச் சொல்லுவது உடலாகும்…
அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்…
வெண்ணை திரண்டதுந்தன் அருளாகும்…
இந்த நெய்யபிஷேகம் எங்கள் அன்பாகும்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

BGM

ஆண் : வாசமுடைய பன்னீர் அபிஷேகம்…
எங்கள் மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம்…
இனிய பஞ்சாம்ருதத்தில் அபிஷேகம்…
அதில் இன்பத்தைக் கூட்டுதையா உன் தேகம்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

BGM

ஆண் : உள்ளத்தில் வெண்மை தன்னை கையிலெடுத்து…
அதில் உன் பெயரை குழைத்து நெற்றியில் இட்டு…
உருகும் விபூதியினால் அபிஷேகம்…
ஹரி ஓம் என்று சந்தனத்தில் அபிஷேகம்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…


Notes : Sabarimalaiyil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. சபரி மலையில் பாடல் வரிகள்.


அன்பு வடிவாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி சுசீலாஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Anbu Vadivaaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…

BGM

ஆண் : பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே…
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே…
பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே…
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே…
கள்ளமின்றி பாடுபட்டேன் சிவபெருமானே…
நீ கை நிறைய அள்ளித் தந்தாய் சிவபெருமானே…

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…

BGM

பெண் : கோகுல பாலகனே கண்ண பெருமானே…
எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே…
கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே…
எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே…

பெண் : கோகுல பாலகனே கண்ண பெருமானே…
எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே…
கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே…
எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே…

BGM

பெண் : ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே…
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே…
ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே…
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே…
நன்றி என்று சொல்லுகின்றோம் கண்ண பெருமானே…
உன்னை நாள் முழுதும் பக்தி செய்வோம் கண்ண பெருமானே…

ஆண் : சிவபெருமானே…
பெண் : கண்ண பெருமானே…
ஆண் : சிவபெருமானே…
பெண் : கண்ண பெருமானே…

ஆண் & பெண் : ஹரி ஓம்… ஹரி ஓம்…
ஹரி ஓம்… ஹரி ஓம்…


Notes : Anbu Vadivaaga Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. அன்பு வடிவாக பாடல் வரிகள்.


திருப்பாற் கடலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே. ஜே. யேசுதாஸ்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Thiruppaarkadalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…

ஆண் : இரணியன் அகந்தை அழித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று இந்திர வில்லை முறித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே…
அறியாயோ நீயே…
அவள் கொடுமையை ஒழிக்க மறந்துவிட்டாயோ…
ஸ்ரீமந் நாராயணா…

ஆண் : தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ…
மறந்தாயோ நீயே…
உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே…
வருவாயோ நீயே…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : தோளிலந்த சாரங்கம் எடுத்து…
வரவேண்டும் நீயே…
கணை தொடுத்திட வேண்டும்…
அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே…

ஆண் : அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து…
வாராய் திருமாலே…
உன் அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து…
காப்பாய் பெருமாளே…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று…
வீறுடன் வாருங்கள்…
நாராயணனெனும் தலைவனின் துணையால்…
போர்க்களம் வாருங்கள்…

ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்…
வேல் கொண்டு வாருங்கள்…
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்…
தேவர்கள் வாருங்கள்…

ஆண் : ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா…
வருவாய் திருமாலே…
துணை தருவாய் பெருமாளே…

BGM


Notes : Thiruppaarkadalil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. திருப்பாற் கடலில் பாடல் வரிகள்.