திருப்பாற் கடலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே. ஜே. யேசுதாஸ்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Thiruppaarkadalil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

—BGM—

ஆண் : உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…

ஆண் : இரணியன் அகந்தை அழித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று இந்திர வில்லை முறித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

—BGM—

ஆண் : கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே…
அறியாயோ நீயே…
அவள் கொடுமையை ஒழிக்க மறந்துவிட்டாயோ…
ஸ்ரீமந் நாராயணா…

ஆண் : தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ…
மறந்தாயோ நீயே…
உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே…
வருவாயோ நீயே…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

—BGM—

ஆண் : தோளிலந்த சாரங்கம் எடுத்து…
வரவேண்டும் நீயே…
கணை தொடுத்திட வேண்டும்…
அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே…

ஆண் : அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து…
வாராய் திருமாலே…
உன் அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து…
காப்பாய் பெருமாளே…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

—BGM—

ஆண் : ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று…
வீறுடன் வாருங்கள்…
நாராயணனெனும் தலைவனின் துணையால்…
போர்க்களம் வாருங்கள்…

ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்…
வேல் கொண்டு வாருங்கள்…
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்…
தேவர்கள் வாருங்கள்…

ஆண் : ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா…
வருவாய் திருமாலே…
துணை தருவாய் பெருமாளே…

—BGM—


Notes : Thiruppaarkadalil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. திருப்பாற் கடலில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading