சபரி மலையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Sabarimalaiyil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

—BGM—

ஆண் : பாலெனச் சொல்லுவது உடலாகும்…
அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்…
வெண்ணை திரண்டதுந்தன் அருளாகும்…
இந்த நெய்யபிஷேகம் எங்கள் அன்பாகும்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

—BGM—

ஆண் : வாசமுடைய பன்னீர் அபிஷேகம்…
எங்கள் மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம்…
இனிய பஞ்சாம்ருதத்தில் அபிஷேகம்…
அதில் இன்பத்தைக் கூட்டுதையா உன் தேகம்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

—BGM—

ஆண் : உள்ளத்தில் வெண்மை தன்னை கையிலெடுத்து…
அதில் உன் பெயரை குழைத்து நெற்றியில் இட்டு…
உருகும் விபூதியினால் அபிஷேகம்…
ஹரி ஓம் என்று சந்தனத்தில் அபிஷேகம்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…


Notes : Sabarimalaiyil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. சபரி மலையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading