இதழெனும் மடலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளைய பாரதிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாகாவலுக்குக் கெட்டிக்காரன்

Ithazhenum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

—BGM—

பெண் : காம தேவனின் கலைகள் யாவுமே…
பாவை மேனியில் படைத்திடவே…

ஆண் : காதல் ராஜியம் உதயமாகவே…
ராஜ மோகினி வரம் தரவே…

பெண் : வாள் ஏந்தும் உந்தன் தோளோடு…
தேனூற்றில் வந்து நீராடு…

ஆண் : ஆடை மேகமே பாரம் ஆகுமே…
தேக தாகமே வாட்டுதே…

பெண் : போதும் போதுமே தேவ தேவனே…
தாகம் தீரவே வேண்டுமே…

ஆண் : மோகப் பூங்கொடி நாணம் ஏனடி…
தேவை தீரவே ஓடி வா…

பெண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…
விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

பெண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…
மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

—BGM—

ஆண் : காதல் தேசமே நமது ஆனதே…
கனவு யாவுமே இனித்திடுதே…

பெண் : மோக மூச்சிலே கருகிப் போகுதே…
பாவை மேனியே தினம் தினமே…

ஆண் : ஏந்திழையே உன்னை ஏந்திடவே…
ஏங்கிடுதே என் வாலிபமே…

பெண் : காமன் பாணமே தோற்கும் போதிலே…
பூவை மேனியும் தாங்குமா…

ஆண் : நீயும் நானுமே சேரும் நேரமே…
நாணம் இன்னுமே வேண்டுமா…

பெண் : நாணம் என்பது நாளும் உள்ளது…
விலகி ஓடினால் என்னாவது…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…

பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…

ஆண் : இதயம் திருடவே…
இளமை துடிக்குதே…

பெண் : மனமும் தவிக்குதே…
துடிக்குதே தவிக்குதே…

ஆண் : இதழெனும் மடலிலே…
இன்பம் எழுதிடும் கவிதையே…

பெண் : விடிகிற வரையிலே…
விழியில் விரகம் பெருகுதே…


Notes : Ithazhenum Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. இதழெனும் மடலிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading