அம்மம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளைய பாரதிமலேசியா வாசுதேவன்இளையராஜாகாவலுக்குக் கெட்டிக்காரன்

Ammamma Song Lyrics in Tamil


ஆண் : அம்மம்மா… இதயம் எரியும் கொடுமை நடந்ததே…
பூ மாலை… கனலில் விழுந்து கருகிப் போனதே…
தீயோடு தீயாகித் தீந்தாயே… அம்மம்மா…

ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே…
துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே…

ஆண் : கனவுகள்தான் கலைந்திடவே…
புது மலர்தான் பொசுங்கியதே…

ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே…
துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : சோறூட்டிப் பார்த்திருந்து…
சொந்தம் என ஆதரித்த…
தாயவளும் தீ கொண்டாள் என்ன சதியோ…

ஆண் : தாலாட்ட தாயும் இன்றி…
சொல்லி அழ யாரும் இன்றி…
ஏங்கி அழுதே இங்கே ஏழைக் கிளியே…

ஆண் : ஒளியே மறைந்தே கிடக்க…
உலகே இருளில் தவிக்க…
அடிமை உயிர் தான் மலிவா…
விடிவே எமக்கு இல்லையா…

ஆண் : விழியில் தெரியும் விடிவே…
அது தினமும் எழுதும் முடிவே…
இங்கு வெடித்திடும் நெருப்பினில்…
கொடுமைகள் எரிந்திடுமே…

ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே…
துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே…

BGM

ஆண் : ஆண்டாண்டு காலம் இங்கு…
அடிமை என வாழ்ந்ததெல்லாம்…
நாளை முதலே இங்கே மாறி விடலாம்…

ஆண் : வாதாடிப் பார்த்ததெல்லாம்…
வீணாகப் போனதென்ன…
வாளை எடுத்தால் இங்கே நீதி பெறலாம்…

ஆண் : துணிவே துணையாய் இனி வா…
புலியாய் எழுவாய் மனிதா…
தடையே தகரும் இனியே…
தருமம் ஜெயிக்கும் நிஜமே…

ஆண் : கொடுமைச் சிறையும் உடைக்க…
ஒரு சபதம் எடுத்து வருவேன்…
இனி விடிந்திடும் பொழுதுகள்…
நமக்கென விடியட்டுமே… ஏ…

ஆண் : எரியும் சிதையிலே நிலவும் கருகவே…
தனிமைச் சிறையிலே மனதும் உருகவே…
அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே…
துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே…

ஆண் : கனவுகள்தான் கலைந்திடவே…
புது மலர்தான் பொசுங்கியதே…


Notes : Ammamma Song Lyrics in Tamil. This Song from Kavalukku Kettikaran (1990). Song Lyrics penned by Ilaya Bharathi. அம்மம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading