மதுரா நகரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபார் மகளே பார்

Madhura Nagaril Song Lyrics in Tamil


—BGM—

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…
மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்…

ஆண் & பெண் : கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…

—BGM—

ஆண் : மிதிலா நகரில் ஒரு மன்றம்…
பொன் மேனிகள் ஜானகி தங்கம்…

—BGM—

ஆண் : மிதிலா நகரில் ஒரு மன்றம்…
பொன் மேனிகள் ஜானகி தங்கம்…
மணி மாடத்திலே வந்து தோன்றும்…
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்…

பெண் : ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே…
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே…
ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே…
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே…

—BGM—

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…

—BGM—

பெண் : பிருந்தாவனம் என்பது தோட்டம்…
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்…

—BGM—

பெண் : பிருந்தாவனம் என்பது தோட்டம்…
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்…
வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம்…
பெரும் காதலிலே களியாட்டம்…

ஆண் : எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்…
உயர் காதலிலே அவன் மன்னன்…
எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்…
உயர் காதலிலே அவன் மன்னன்…

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…

—BGM—

ஆண் & பெண் : அந்தக் காட்சிகள் மாறியதேனோ…
நம் காதலை நாம் பெறத்தானோ…

ஆண் : அந்த தேவ மகள் இவள் தானோ…
பெண் : மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ…

ஆண் & பெண் : நாம் இன்பத்தில் ஆடிடும் மலர்கள்…
நல் இன்னிசை பாடிடும் குயில்கள்…

—BGM—

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…
கவி மன்னவர் காவியம் பொங்கும்…
அதில் காதலர் உள்ளம் மயங்கும்…

ஆண் & பெண் : மதுரா நகரில் தமிழ் சங்கம்…
அதில் மங்கல கீதம் முழங்கும்… ம்ம்ம்…

—BGM—


Notes : Madhura Nagaril Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. மதுரா நகரில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading