| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா. முத்துக்குமார் | சுவர்ணலதா | வித்யாசாகர் | தம்பி (2006) |
Poovanathil Maram Undu Song Lyrics in Tamil
பெண் : பூவனத்தில் மரமுண்டு…
மரம் நிறைய பூவுண்டு…
பூ நிறைய தேனுண்டு…
பூப்பறிக்கப் போவோமா…
பூ மகளே பெண்ணே வா…
—BGM—
பெண் : அன்னை மடித்தாலாட்டிலே…
திண்ணைக்கதை நாம் கேட்டதும்…
தந்தை மேலே ஏறிக்கொண்டு…
அம்பாரிகள் நாம் போனதும்…
பெண் : வெண்டைக்காயின் காம்பைக் கிள்ளி…
தங்கக்கம்மல் என்று சொல்லி…
தங்கைக் காதில் மாட்டிவிட்டு ரசித்ததுவும்…
பெண் : மொட்டைமாடி வெண்ணிலவில்…
வட்டமாக நாம் அமர்ந்து…
கூட்டாஞ்சோறு கையில் வாங்கி ருசித்ததுவும்…
எங்கள் வீடுபோல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா…
—BGM—
பெண் : காற்றில் மரம் ஆடக்கண்டு…
வீட்டில் சென்று ஒளிந்தோமன்று…
பேய்கள் எல்லாம் பொய்கள் என்று…
தந்தை சொல்ல பயமேதின்று…
பெண் : பள்ளிவிட்டுப் பசியுடன்…
துள்ளித்துள்ளி வீடுவந்து…
ஒன்றுமில்லை என்றவுடன் சண்டை போட்டதும்…
பெண் : காய்ச்சல் வந்து படுக்கையில்…
சொந்தம் எல்லாம் துடிக்கையில்…
அடிக்கடி காய்ச்சல் வரவேண்டிக்கொண்டதும்…
எங்கள் வீடு போல இந்த மண்ணில் சொர்க்கம் ஏதம்மா…
பெண் : பூவனத்தில் மரமுண்டு…
மரம் நிறைய பூவுண்டு…
பூ நிறைய தேனுண்டு…
பூப்பறிக்கப் போவோமா…
பூ மகளே கண்ணே வா…
—BGM—
Notes : Poovanathil Maram Undu Song Lyrics in Tamil. This Song from Thambi (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பூவனத்தில் மரமுண்டு பாடல் வரிகள்.
