ஆகாயம் பூக்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபி.உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்சிற்பிவிண்ணுக்கும் மண்ணுக்கும்

Aagayam Pookal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…

பெண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…

ஆண் : ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்…
சுவாசிக்கும் கார்காலம்…
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு…
கை கோர்த்து கல்யாணம்…

ஆண் : குட்டை வால் ஓணான் வேலிக்குள்…
குதித்தாடும் உற்சாகம்…
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்…
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்…

பெண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…

BGM

ஆண் : சோளக்கதிர் முற்றும் பருவத்தில்…
கிளி மூக்கில் சந்தோஷம்…
சூரியனின் ரேகை மோதாமல்…
சொட்டும் பனி சங்கீதம்…

BGM

பெண் : சோளக்கதிர் முற்றும் பருவத்தில்…
கிளி மூக்கில் சந்தோஷம்…
சூரியனின் ரேகை மோதாமல்…
சொட்டும் பனி சங்கீதம்…

ஆண் : கொப்பளித்த நீரை யானைகள்…
துப்புவதில் குற்றாலம்…

பெண் : குட்டி கங்கை ஒவ்வொரு புல்லிலும்…
குடி ஏறும் விடியற் காலம்…

ஆண் : குறவை மீன் தாவி தழுவாமல்…
கூழாங்கல் மென்மையில்லையடி…
குன்றின் மேல் வானை குத்தியொரு…
குடை செய்ய ஆசையுள்ளதடி…

பெண் : வானம் மழை தூவும் பருவத்தில்…
வருடும் புது மண் வாசம்…
வாய்க்கால் வழியோடும் தண்ணீரில்…
கப்பல் விட உத்தேசம்…

ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
பெண் : அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…

BGM

ஆண் : ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே…
அமரும் ஒரு மீன்கொத்தி…
அரை பவுனில் செய்து தருவோமா…
அதற்கும் ஒரு மூக்குத்தி…

BGM

பெண் : ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே…
அமரும் ஒரு மீன்கொத்தி…
அரை பவுனில் செய்து தருவோமா…
அதற்கும் ஒரு மூக்குத்தி…

ஆண் : அதிகாலை சூரியன் வானத்தில்…
மணி பார்க்கும் கடிகாரம்…

பெண் : அலங்காரம் செய்கிற வானில்…
ஏழு வண்ண உதட்டு சாயம்…

ஆண் : வல்லாரை லேகியம் இல்லாமல்…
வானவில் ஞாபகம் தோன்றுதடி…
கல்லூரி சென்று படிக்காமல்…
கத்தாழை வைத்தியம் பார்க்குதடி…

பெண் : நதியோர ஈச்சங் கீற்றின்…
நாக்கு ரொம்ப நீளம்…
நாணல் ஏன் வளைந்ததென்று…
நக்கல் பண்ணி பேசும்…

ஆண் : ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
பெண் : அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…

ஆண் : ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்…
சுவாசிக்கும் கார்காலம்…
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு…
கை கோர்த்து கல்யாணம்…

பெண் : குட்டை வால் ஓணான் வேலிக்குள்…
குதித்தாடும் உற்சாகம்…
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்…
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்…


Notes : Aagayam Pookal Song Lyrics in Tamil. This Song from Vinnukum Mannukum (2001). Song Lyrics penned by Viveka. ஆகாயம் பூக்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading