தேடுகின்ற கண்களுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்அம்பிலிஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Thedivarum Kannukalil Song Lyrics in Tamil


BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…

BGM

பெண் : வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி…
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கண்ணனும் நீ கணபதி நீ…
கந்தனும் நீயே…
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்…
விஷ்ணுவும் நீயே…

பெண் : கண்ணனும் நீ கணபதி நீ…
கந்தனும் நீயே…
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்…
விஷ்ணுவும் நீயே…

பெண் : அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே…
என்மேல் அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடிவந்தாயே…
ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே…
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே…

பெண் : தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே…
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே…

பெண் : அன்பு கொண்டு தந்தைக்கவன்…
செய்யும் பணியிலே…
நாங்கள் ஆண்டு தோறும் வந்து நிற்போம்…
உந்தன் நிழலிலே…
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…

BGM

பெண் : வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி…
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM


Notes : Thedivarum Kannukalil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. தேடுகின்ற கண்களுக்குள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading