கடவுளே கடவுளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பலாஷ் சென்டி. இமான்கச்சேரி ஆரம்பம்

Kadavule Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

ஆண் : அர்ச்சனைப்பூக்கள் எல்லாம்…
உன் முகம் மேல் தூவ…
பூத்திடும் நாள் முதலாய்…
காத்துக்கொண்டே இருக்கும்…

ஆண் : ஆலய மணி ஓசை…
உந்தன் செவி நுழைய…
யார் வந்து அடித்தாலும்…
ஜோராய் தலை ஆட்டும்…

ஆண் : நான் இன்று காண்பதெல்லாம்…
பொய் இல்லை மெய்தானம்மா…
தட்சணை தருவதற்கே…
உயிரைத் தந்தாயம்மா…

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

—BGM—

ஆண் : கண்ணை பார்த்ததும் வேகமாய்…
மின்னல் அடித்தது நெஞ்சிலே…
தோளில் சிறகுகள் இன்றியே…
தேகம் பறக்குது விண்ணிலே…

ஆண் : இந்த புது உயிரே நீ தந்ததாய்…
என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுதே…
ஓர் எருதாய் எருதாய் அலைந்து வந்தேன்…
உன் இமையின் அழைப்பால் கரையில் வந்தேன்…
உன் விரலில் என் மனசும் மோதிரமாகியதே…

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

—BGM—

ஆண் : ஓஹோ… மண்ணை முதல் முறை பார்த்திட…
தாயின் கருவறை சொன்னது…
என்னை முதல் முறை பார்த்திட…
உந்தன் கரு விழி சொன்னது…

ஆண் : மலை உயரத்திலே நதி தோன்றுமே…
அது சேரும் இடம் கடல் ஆகுமே…
இது உயிரும் உயிரும் பேசும் மொழி…
இதை விடவும் சிறந்தது எந்த மொழி…

ஆண் : என் உயிரை உன் பாதத்தில்…
காணிக்கை ஆக்குகிறேன்…

ஆண் : கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…

ஆண் : அர்ச்சனைப்பூக்கள் எல்லாம்…
உன் முகம் மேல் தூவ…
பூத்திடும் நாள் முதலாய்…
காத்துக்கொண்டே இருக்கும்…

ஆண் : ஆலய மணி ஓசை…
உந்தன் செவி நுழைய…
யார் வந்து அடித்தாலும்…
ஜோராய் தலை ஆட்டும்…

ஆண் : நான் இன்று காண்பதெல்லாம்…
பொய் இல்லை மெய்தானம்மா…
தட்சணை தருவதற்கே…
உயிரைத் தந்தாயம்மா…

—BGM—


Notes : Kadavule Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. கடவுளே கடவுளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading