Tag Archives: யுகபாரதி

ரங்கராட்டினம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅந்தோனி தாசன்யுவன் ஷங்கர் ராஜாகுருதி ஆட்டம்

Ranga Rattinam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே ரங்கராட்டினம் போலே…
உன வட்டம் போடுதே காலு…
லட்சம் வானவில் நீதான்…
என தத்தி தாவுறேன் மேலே…

ஆண் : கண்ணே நீ ஒரு ராசாத்தி…
உன பாக்கும்போதே பசி தூக்கம் போச்சே…
கொஞ்சி நானுமே தாலாட்ட…
வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே…

ஆண் : அடியாத்தி உன் வார்த்த…
நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்…
துணையாக சேர்ந்தாலே…
புல்லும் ஆவேன் பூந்தோட்டம்…

ஆண் : ரங்க ராட்டினம் போலே…
உன வட்டம் போடுதே காலு…
லட்சம் வானவில் நீதான்…
என தத்தி தாவுறேன் மேலே…

BGM

ஆண் : ஆயிரம் பெற பார்த்தாலும்…
ஆசைதான் உன் மேலே…
தாவணி போட்ட என் ராணி…
காட்டுற வாழ் நாள…

ஆண் : காலுல கோலம் நீ போட…
பூமியே பூஞ்சோல…
சாடையா பேசும் உன் பேச்சு…
பீச்சுதே சீம்பால…

ஆண் : தூங்குனா கூட…
மனசோட வீசுற தூரல…
காதல தாண்டி…
எனக்கேதும் இல்லை வேலை…

ஆண் : அடியாத்தி உன் வார்த்த…
நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்…
துணையாக சேர்ந்தாலே…
புல்லும் ஆவேன் பூந்தோட்டம்…

BGM

ஆண் : ஹே ரங்க ராட்டினம் போலே…
உன வட்டம் போடுதே காலு…
லட்சம் வானவில் நீதான்…
என தத்தி தாவுறேன் மேலே…

ஆண் : கண்ணே நீ ஒரு ராசாத்தி…
உன பாக்கும் போதே பசி தூக்கம் போச்சே…
கொஞ்சி நானுமே தாலாட்ட…
வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே…

BGM


Notes : Ranga Rattinam Song Lyrics in Tamil. This Song from Kuruthi Aattam (2022). Song Lyrics penned by Yugabharathi. ரங்கராட்டினம் பாடல் வரிகள்.


கோலி குண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & கல்யாணி நாயர்வித்யாசாகர்எம் மகன்

Goligundu Kanu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

ஆண் : ஆளத் தின்னும் கன்னம்…
அலட்டிக்காத கையி…
சோளத்தட்ட காலு…
சொக்க வைக்கும் வாயி…
தேனீ தொட்ட உன்னை…
தேடி வந்தேன் தாயி…

ஆண் : ஏய்…நீ எதுக்குப் பொறந்தியோ…
என் உசிர வாங்குற…
சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…
வா… நான் உனக்கு வளந்தவ…
ஏன் காஞ்சி வெதும்புற…

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

BGM

ஆண் : சீரான ரோசாவே சீம்பாலு சீசாவே…
நெட்டி முறிப்பதும் எட்டி இருப்பதும் என்ன கணக்கு…

பெண் : தேனான ராசாவே தேக்காத கூசாவே…
தொட்டுப் பறிப்பதும் கட்டி அணைப்பதும் செல்ல கிறுக்கு…

ஆண் : வேப்பல கூட இப்ப தித்திக்குது தேனா…
பாப்பா நீ பாதி கொடுத்தா… ஹேய்…

பெண் : கேக்கல சோறு தண்ணி கேட்டுக்க நீ மாமா…
உன் பேச்சை யாரும் எடுத்தா…

ஆண் : அருகம் புல்லு நா…
ஆடாக வேணுமா…

பெண் : இலவம் பஞ்சு நா…
இடிபாடு ஆகுமா…

ஆண் : நீ சாமியா பூதமா…
ஒண்ணும் புரியல…
ரெண்டும் புரியல ஏய்…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…

ஆண் : ஏய்… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

BGM

ஆண் : பத்தாய நெல் போல…
நின்னாயே முன்னால…
வம்பு வளக்குது வம்பு வளக்குது…
அந்த சிரிப்பு…

பெண் : வெள்ளாவி கண்ணால…
சுட்டாயே தன்னால…
கொள்ளையடிக்குது கொள்ளையடிக்குது…
கள்ள நெருப்பு…

ஆண் : கண்ணுல கொட்டிக்கிட்ட சீயக்காயப் போல…
ஐயோ நீ உறுத்துறியே…

பெண் : தண்ணில சிந்திவிட்ட சீமையெண்ண போல…
என்னை நீ ஒதுக்குறியே…

ஆண் : ஏ… நீ சகடையா…
எதுக்கென்ன உருட்டுற…

பெண் : மாசக் கடைசியா…
ஏன் என்னை விரட்டுற…

ஆண் : நீ வசதியா வறுமையா…
அங்கு குறையுது இங்கு நிறையுது ஏன்…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…

ஆண் : சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

ஆண் : ஆளத் தின்னும் கன்னம்…
அலட்டிக்காத கையி…
சோளத்தட்ட காலு…
சொக்க வைக்கும் வாயி…
தேனீ தொட்ட உன்னை…
தேடி வந்தேன் தாயி…

ஆண் : ஏய்…நீ எதுக்குப் பொறந்தியோ…
என் உசிர வாங்குற…
சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…
வா… நான் உனக்கு வளந்தவ…
ஏன் காஞ்சி வெதும்புற…


Notes : Goligundu Kanu Song Lyrics in Tamil. This Song from Em Magan (2006). Song Lyrics penned by Yugabharathi. கோலி குண்டு பாடல் வரிகள்.


கூடவே வர மாதிரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅல்போன்ஸ் ஜோசப்டி. இமான்கயல்

Koodavae Varamaadhiri Song Lyrics in Tamil


ஆண் : கூடவே வர மாதிரி தெரியுதே…
நீ என்ன சொல்ல போரியோ…

ஆண் : ஈரக்கொல நடுங்குதே…
மூச்சும் பேசும் ஒடுங்குதே…
காரமுள்ள காத்தடிக்க…
கண்ணு முழி பிதுங்குதே…
கலங்குதே கலங்குதே…
ஓஹோ ஓஹோ தாரா ராரா… ஆஆ…

ஆண் : நீ என்ன சொல்ல போரியோ…
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்…


Notes : Koodavae Varamaadhiri Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. கூடவே வர மாதிரி பாடல் வரிகள்.


பறவையா பறக்குறோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண்டி. இமான்கயல்

Paravayaa Parakkurom Song Lyrics in Tamil


BGM

ஆண் : பறவையா பறக்குறோம்…
காத்துல மிதக்குறோம்…
போற வழியில பூவா சிரிக்கிறோம்…
குழு : சிரிக்கிறோம் சிரிக்கிறோம்…

ஆண் : இந்த ஊரு உலக உறவா நினைக்கிறோம்…
குழு : நினைக்கிறோம் நினைக்கிறோம்…

ஆண் : ஏ வீடு வாசல் வீதி ஒன்னும் வேணா…
ஏ காடு மேடு கடலத் தாண்டி போவோம்…
சூரியன் போல நாங்க சுழலுவோம்…
சோகம் வந்தா குப்பையில வீசுவோம்…

ஆண் : பூமி பந்து மேல ஒத்தையடி பாத போடுவோம்…
அந்த வானவில் எங்களுக்கு ஜோடி…
நிதம் வட்ட நிலா கூட சில்லு ஆடி…
மேகம் ஏறி வெரசா நடப்போமே…
அந்த மின்னல் கொடிய கயிறா திரிப்போமே…

BGM

ஆண் : பறவையா பறக்குறோம்…
காத்துல மிதக்குறோம்… ஹே…

BGM

ஆண் : ஏ ஆடு மாடு கோழி எங்க கூட்டு…
அத போல வாழ தேவையில்ல நோட்டு…
கண்டத வாங்கி சேர்க்க நினைக்கல…
ஒரு தந்திரம் போட்டு ஊர கெடுக்கல… ஹே ஹே…

ஆண் : நாளை என்ன ஆகும்…
எண்ணி வாழ மாட்டோம்…
இந்த சின்ன்ஞ்சிறு பிஞ்சிகளப் போல…
நாங்க உள்ள வர துள்ளி விளையாட…
காலம்பூரா கவலை கிடையாது… ஹே ஹே…
நாங்க போற பாதை எதுவும் முடியாதே…

ஆண் : பறவையா பறக்குறோம்…
காத்துல மிதக்குறோம்…


Notes : Paravayaa Parakkurom Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. பறவையா பறக்குறோம் பாடல் வரிகள்.


அஞ்சனா அஞ்சனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆலப் ராஜுஎஸ்.எஸ். தமன்வந்தான் வென்றான்

Anjana Anjana Song Lyrics in Tamil


ஆண் : இன்று முதல் நான் புதிதானேன்…
உன் இனிய சிரிப்பினால் முகில் ஆனேன்…
கொட்டும் மழை போல் சுகம் ஆனேன்…
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன்…
உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன்…

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
அன்பே அன்பே அஞ்சனா…
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா…
குழு : சனா…

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா…
குழு : சனா…

ஆண் : ஆ போடு போடு…
ஆ தந்தனத்தான் போடு…
நீ அந்தரத்தில் ஆடு…
ஆ துள்ளி விளையாடு…

ஆண் : ஆ தொட்டு தொட்டு பாடு…
எதுக்கு கட்டுப்பாடு…
நீ வந்து வந்து தேடு…
ஆ கிட்ட கிட்ட சூடு…

ஆண் : நீ முட்டி முட்டி மூடு…
மொத்தத்தில் என்னை நாடு…
உனது விழியோடு என்னை மறந்தேனே…

ஆண் : உண்மையானேன் ஏ உண்மையானேன் ஏ…
உன்னைபோலே ஏ அன்மையானேன் ஏ…
வெண்மை ஆனேன் ஏ வெண்மை ஆனேன் ஏ…
மெல்ல நானும் தன்மை ஆனேன்ஏ ஏய்…

குழு : காதல் காதல் வந்தாலே…
தண்ணீரும் கூட தீப்போலே…
தன்னாலே மாறும் மண் மேலே…
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே…

குழு : ஆகாயம் உந்தன் கால் கீழே…
பூ கோலம் போடும் அன்பாலே…
வேதாளம் ஒன்று உன்னுல்ளே…
விளையாடி போகும் செல்லுள்ளே… ஏ…

BGM

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…

BGM

ஆண் : ஒரு சின்ன பார்வையில்…
நான் விடுதலை விடுதலை அடைந்தேனே…
உனது அன்பு வார்த்தையில்…
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே…

ஆண் : ஹே கேளு கேளு…
நீ என்ன வென்று கேளு…
நீ எப்பொழுதும் கேளு…
நா சொல்லுவதை கேளு…

ஆண் : சொல்லாதையும் கேளு…
நெருங்கி வந்து கேளு…
உனதருகில் மொழியாய் வருவேனே…

ஆண் : உண்மையானேன் உண்மையானேன்…

BGM

ஆண் : சிறகில்லை ஆயினும்…
நான் இறகென இறகென பறந்தேனே…
காணவில்லை ஆயினும்…
நான் முழுவதும் முழுவதும் கலைந்தேனே…

ஆண் : ஹே பாரு பாரு…
நீ பக்கம் வந்து பாரு…
நீ பாடி பாடி பாரு…
ஆ பத்திரமா பாரு…

ஆண் : பாதரசம் பாரு…
பதுக்கவில்லை பாரு…
சில நொடிகளில் என்ன நான் தருவேனே…

ஆண் : உண்மையானேன் ஏ உண்மையானேன் ஏ…
உன்னைபோலே ஏ அன்மையானேன் ஏ…
வெண்மை ஆனேன் ஏ வெண்மை ஆனேன் ஏ…
மெல்ல நானும் தன்மை ஆனேன்ஏ ஏய்…

குழு : காதல் காதல் வந்தாலே…
தண்ணீரும் கூட தீப்போலே…
தன்னாலே மாறும் மண் மேலே…
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே…

குழு : ஆகாயம் உந்தன் கால் கீழே…
புது கோலம் போடும் அன்பாலே…
வேதாளம் ஒன்று உன்னுல்ளே…
விளையாடி போகும் செல்லுள்ளே…

BGM

ஆண் : அஞ்சனா அஞ்சனா…
இல்லை நானே அஞ்சனா…


Notes : Anjana Anjana Song Lyrics in Tamil. This Song from Vandhaan Vendraan (2011). Song Lyrics penned by Yugabharathi. அஞ்சனா அஞ்சனா பாடல் வரிகள்.


எங்க புள்ள இருக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபல்ராம்டி. இமான்கயல்

Yenga Pulla Irukka Song Lyrics in Tamil


ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…

ஆண் : ஒத்தையா வேகுறேன்…
மொத்தமா நோகுறேன்…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…

ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…

BGM

ஆண் : அரிதான பொருளாக தெரிந்தாயடி…
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி…
எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி…
சுழல் போல அதை நீயே இழுத்தாயடி…

ஆண் : பொத்தி வச்ச ஓன் நினைப்பு…
பொத்துக்கிட்டு கொட்டுதடி…
சுத்தி விட்ட ராட்டினமா என் மனசு சுத்துதடி…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…

ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…

BGM

ஆண் : எனக்கான வரம்போல பிறந்தாயடி…
தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி…
இனிமேலும் இவன் வாழ முடியாதடி…
இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி…

ஆண் : உன்ன இவன் கண்ணுமுழி…
பெத்தவளா காணுதடி…
உன்ன எண்ணி அப்படியே…
செத்திடவும் தோணுதடி…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…

ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…

ஆண் : ஒத்தையா வேகுறேன்…
மொத்தமா நோகுறேன்…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…

BGM


Notes : Yenga Pulla Irukka Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. எங்க புள்ள இருக்க பாடல் வரிகள்.


எங்கிருந்து வந்தாயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்கயல்

Yengirindhu Vandhaayo Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…

பெண் : அதை நானும் அறியும் முன்னே…
அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…

பெண் : எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…

பெண் : அதை நானும் அறியும் முன்னே…
அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…

BGM

பெண் : வாசத்தண்ணி தெளிக்கையில…
வந்து நீயும் நனைக்கிறியே…
துணிமணிய துவைக்கையிலே…
என்ன நீயும் புளியிறியே…

பெண் : ஆஞ்சி வச்ச கீர போல…
நினைப்புல தான் கரையிரியே…
அம்மி வச்ச தேங்கா சில்லா…
அடி மனச நசுக்குறியே…

பெண் : அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…

பெண் : எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…

BGM

பெண் : நடக்கையில தொடர்ந்து வர…
நடு நடுவே மறஞ்சுடுர…
தலைமுடிய ஒதுக்கையில…
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுர…

பெண் : கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன…
கழுவிவிட மனமில்லையே…
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன…
ஒதர ஒரு வழி இல்லையே…

பெண் : அட நீயும் மறைந்தாயே…
மெல்லக் காற்றில் கரைந்தாயே…

BGM

பெண் : ம்ம் ம்ம்… உயிரோடு உறைந்தாயே…


Notes : Yengirindhu Vandhaayo Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. எங்கிருந்து வந்தாயோ பாடல் வரிகள்.


டீயாலோ டீயாலோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஒரத்தநாடு கோபுடி. இமான்கயல்

Deeyaalo Deeyaalo Song Lyrics in Tamil


BGM

குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ…
டீயாலோ டீயாலோ டீயாலோ…

ஆண் : அவ மேல ஆச வச்சான்…
அநியாய காதல் மச்சான்…
அழு மூஞ்சா போனா மச்சான்…

ஆண் : வருவான்னு பூச வச்சான்…
வழி மேல கண்ண வச்சான்…
மனசால தீ மிதிச்சான்…

ஆண் : ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான்…
அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான்…
விதை வைக்காம உள்ளூர விளஞ்சான்…
அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான்…

குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ…
டீயாலோ டீயாலோ டீயாலோ…

BGM

ஆண் : கரை ஏறி வந்த மீனு…
கருவாடா போகுமுன்னு…
புரியாம போச்சே நண்பா…

ஆண் : அறியாம சொன்ன சொல்லு…
பழி வாங்கி கொல்லுமுன்னு…
தெரியாம போச்சே நண்பா…

ஆண் : திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன்…
வழி இல்லாம இப்போ இங்கே உறஞ்சேன்…
விதி பந்தாட காத்தோட மறஞ்சேன்…
சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன்…

குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ…
டீயாலோ டீயாலோ டீயாலோ…

BGM

ஆண் : வருவாடா அந்த பொண்ணு…
வருந்தாம பிரேயர் பண்ணு…
வருங்காலம் வானவில்லு…

ஆண் : மனசோட சோகம் எல்லாம்…
மறஞ்சேதான் போகுமுன்னு…
முழுசா நீ நம்பி நில்லு…

ஆண் : அவ வரும்போது ஆனந்த சாரல்…
வழி எங்கேயும் வண்ண வண்ணத் தூரல்…
இது உசிரோட ஓயாதத் தேடல்…
அட ஒருபோதும் கெட்டதில்ல காதல்…

ஆண் : ஏ வருவாடா அந்த பொண்ணு…
வருந்தாம பிரேயர் பண்ணு…
வருங்காலம் வானவில்லு…

ஆண் : மனசோட சோகம் எல்லாம்…
மறஞ்சேதான் போகுமுன்னு…
முழுசா நீ நம்பி நில்லு…

குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ…
டீயாலோ டீயாலோ டீயாலோ…

BGM

குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ…
டீயாலோ டீயாலோ டீயாலோ…


Notes : Deeyaalo Deeyaalo Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. டீயாலோ டீயாலோ பாடல் வரிகள்.


காட்டுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆனந்த்அரோல் கோரெல்லிபசங்க 2

Kaattukulla Kannakkatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : காட்டுக்குள்ள கண்ண கட்டி…
விட்டதபோல் மல்லுக்கட்டி…
நோட்டு புக்கில் வேட்டு வச்சா…
தாங்கிடுமா தங்கக்கட்டி…

ஆண் : இங்கி பிங்கி பாங்கி சொல்ல…
இங்கும் அங்கும் தாவி செல்ல ஏது எல்ல…
டிங்கு டாங்கு பெல் அடிக்க லெப்ட்டு ரைட்டு…
போட நாங்க ரோபோட் இல்ல…

ஆண் : ஓடு ஓடு வேகத்துல…
ஓடியே ஆடு ஆடு தாளத்திலே…
பாடு பாடு பாட்டுகளை…
பாடியே கூடு கூடு கூட்டத்துல…

ஆண் : சா பூ த்ரீ நீ கெட்ட திரி…
சாயங்காலம் டியூஷன் இல்ல…
ஜோரா சிரி ஹா ஹா ஹா ஹா…

BGM

ஆண் : காட்டுக்குள்ள கண்ண கட்டி…
விட்டதபோல் மல்லுக்கட்டி…
நோட்டு புக்கில் வேட்டு வச்சா…
தாங்கிடுமா தங்கக்கட்டி…

BGM

ஆண் : கால் நிக்காம…
எங்கேயும் செல்லு காத்த போல…
நாள் பத்தாம…
எப்போதும் துள்ளி ஆட்டு வால…

ஆண் : குதிச்சிடும் குறும்புல…
உலகத்த மறந்திடு…
அடங்கியே கிடக்க நீ…
புல்ஸ்டாப் ஒன்னும் இல்ல…

ஆண் : பளிச்சினு சிரிச்சு நீ…
எரிச்சல கிளப்பிடு…
எதுக்குமே தயங்கினா…
சண்டேயும் லீவ் இல்ல…

ஆண் : தப்பு தப்புதான் ரூலு…
தட்டி கேக்க யார் ஆளு…
கிச்சு கிச்சு நீ மூட்டு…
உன் கண்ணக்கட்டு…
என்னத்துக்கு ஜிங்கு ஜக்கு ஏறக்கட்டு…

ஆண் : காட்டுக்குள்ள கண்ண கட்டி…
விட்டதபோல் மல்லுக்கட்டி…
நோட்டு புக்கில் வேட்டு வச்சா…
தாங்கிடுமா தங்கக்கட்டி…

ஆண் : இங்கி பிங்கி பாங்கி சொல்ல…
இங்கும் அங்கும் தாவி செல்ல ஏது எல்ல…
டிங்கு டாங்கு பெல் அடிக்க லெப்ட்டு ரைட்டு…
போட நாங்க ரோபோட் இல்ல…

ஆண் : ஓடு ஓடு வேகத்துல…
ஓடியே ஆடு ஆடு தாளத்திலே…
பாடு பாடு பாட்டுகளை…
பாடியே கூடு கூடு கூட்டத்துல…

ஆண் : சா பூ த்ரீ நீ கெட்ட திரி…
சாயங்காலம் டியூஷன் இல்ல…
ஜோரா சிரி ஹா ஹா ஹா ஹா…

BGM


Notes : Kaattukulla Kannakkatti Song Lyrics in Tamil. This Song from Pasanga 2 (2015). Song Lyrics penned by Yugabharathi. காட்டுக்குள்ள பாடல் வரிகள்.


வந்தாரு வந்தாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜெயமூர்த்திஎன்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Vandhaaru Vandhaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

ஆண் : பாரு இவரு மாசு…
படிக்காத காமராசு…
பதறாம ஊர பாதுகாக்கும்…
பக்காவான பாஸு…

ஆண் : பாசமான பேசு…
பண்பான ஜோதிபாசு…
பெரியோருக்காக பேசுகின்ற…
தம்பி மேல கேஸு…

ஆண் : ஊர நல்லா புரிஞ்சவரு…
இந்த உலகம் பூரா அறிஞ்சவரு…

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

BGM

ஆண் : ஊர தோள் மேல தாங்கும் ஆள் போல…
வாழ்ந்து வாராரே ரகளையில…
ஓவர் பேச்சால வேர்ல்ட் வார் போல…
கூட்டி கொள்வாரே எதிரிகள…

ஆண் : காதலர கண்டா கடுகா வெடிப்பாரு…
அவமானம் காதல் என்று அடியோட பிரிப்பாரு…
சாதி தவறில்ல அத காக்க நினைப்பாரு…
எதிராளி யாரும் இல்ல இருந்தாலும் ஜெயிப்பாரு…

ஆண் : சும்மா இருப்பாரு…
சுவரெங்கும் சிரிப்பாரு…
அம்மா அப்பா தெய்வமுன்னு…
அட்வைஸ் கொடுப்பாரு…

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

BGM

ஆண் : வீட்ட தாண்டாம பொண்ண காப்பாரு…
காட்டு தீ போல வளந்தவரு…
போட்டி போடாம வேல பாப்பாரு…
ஆட்டம் போடாத அலை இவரு…

ஆண் : வேதனைய சொன்னா அது தீர துடிப்பாரு…
விவகாரம் யாரும் செஞ்சா வெறி ஏற கொடுப்பாரு…
ஏழையின்னு வந்தா துணையாக இருப்பாரு…
பணம் காச பாத்திடாம பசியாற கொடுப்பாரு…

ஆண் : சும்மா இருப்பாரு…
சுவரெங்கும் சிரிப்பாரு…
சொக்க வைக்கும் அன்புலதான்…
சொந்தம் வளப்பாரு…

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

ஆண் : பாரு இவரு மாசு…
படிக்காத காமராசு…
பதறாம ஊர பாதுகாக்கும்…
பக்காவான பாஸு…

ஆண் : பாசமான பேசு…
பண்பான ஜோதிபாசு…
பெரியோருக்காக பேசுகின்ற…
தம்பி மேல கேஸு…

ஆண் : ஊர நல்லா புரிஞ்சவரு…
இந்த உலகம் பூரா அறிஞ்சவரு…

BGM


Notes : Vandhaaru Vandhaaru Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. வந்தாரு வந்தாரு பாடல் வரிகள்.