எங்க புள்ள இருக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபல்ராம்டி. இமான்கயல்

Yenga Pulla Irukka Song Lyrics in Tamil


ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…

ஆண் : ஒத்தையா வேகுறேன்…
மொத்தமா நோகுறேன்…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…

ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…

—BGM—

ஆண் : அரிதான பொருளாக தெரிந்தாயடி…
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி…
எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி…
சுழல் போல அதை நீயே இழுத்தாயடி…

ஆண் : பொத்தி வச்ச ஓன் நினைப்பு…
பொத்துக்கிட்டு கொட்டுதடி…
சுத்தி விட்ட ராட்டினமா என் மனசு சுத்துதடி…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…

ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…

—BGM—

ஆண் : எனக்கான வரம்போல பிறந்தாயடி…
தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி…
இனிமேலும் இவன் வாழ முடியாதடி…
இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி…

ஆண் : உன்ன இவன் கண்ணுமுழி…
பெத்தவளா காணுதடி…
உன்ன எண்ணி அப்படியே…
செத்திடவும் தோணுதடி…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…

ஆண் : எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…

ஆண் : ஒத்தையா வேகுறேன்…
மொத்தமா நோகுறேன்…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…

—BGM—


Notes : Yenga Pulla Irukka Song Lyrics in Tamil. This Song from Kayal (2014). Song Lyrics penned by Yugabharathi. எங்க புள்ள இருக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading