நதி வெள்ளம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ராகுல் நம்பியார்யுவன் ஷங்கர் ராஜாதங்கமீன்கள்

Nathi Vellam Song Lyrics in Tamil


ஆண் : அப்பாக்களை பிரியா மகள்கள்…
அதிர்ஷ்டசாலிகள்…
மகள்களை பிரியா அப்பாக்கள்…
பாக்கியவான்கள்…
ஆனால் அப்படி எல்லாம் தந்து விட…
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை…

—BGM—

ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…

ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…

ஆண் : அடி என் கண்ணின் இரு கருவிழிகள்…
உன் முகத்தை தேடுதடி…
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி…

ஆண் : என் காட்டில் ஒரு மழை வந்ததும்…
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே…
இடி மின்னல் விழுந்து காடே எறிந்ததடி…

ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…

ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…

—BGM—

ஆண் : அலைந்திடும் மேகம் அதைப் போல…
இந்த வாழ்க்கையே…
காற்றின் வழியில் போகின்றோம்…

ஆண் : கலைந்திடும் கோலம் என்ற போதிலும்…
அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்…

ஆண் : உயிரே உன்னை பிரிந்தேன்…
உடனே நானும் இறந்தேன்…
உடல் தான் அங்கு வாழும்…
நீதானே எந்தன் உயிரே…

ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…

ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…

—BGM—

ஆண் : மலர் ஒன்று விழுந்தால்…
அதை ஏந்த பலர் ஓடுவார்…
இலைகள் விழுந்தால் சருகாகும்…

ஆண் : வரியவன் வாழ்க்கை…
இலை போல என்ற போதிலும்…
சருகுகள் ஒரு நாள் உரமாகும்…

ஆண் : உயிரே உன்னை பிரிந்தேன்…
உடனே நானும் இறந்தேன்…
உடல்தான் அங்கு வாழும்…
நீதானே எந்தன் உயிரே…

ஆண் : நதி வெள்ளம் மேலே…
என் மீனே மீனே…
நீ நீந்திய பொன் நினைவுகள்…
நெஞ்சில் நிழலாடும்…

ஆண் : முன் அந்தி நிலவில்…
என் மானே மானே…
நீ ஓடிய மென் சுவடுகள்…
மீண்டும் உனைக் கேட்கும்…

—BGM—


Notes : Nathi Vellam Song Lyrics in Tamil. This Song from Thangameenkal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. நதி வெள்ளம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading