இதுக்குத்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமதுஸ்ரீ & நரேஷ் ஐயர்தேவாதிருமகன்

Ithukku Thana Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இதுக்குத்தானா இதுக்குத்தானா…
மண்ணு மிதிச்சதும்…
என்னக் குழச்சதும் இதுக்குத்தானா…

பெண் : இதுக்குத்தானா ஏய் இதுக்குத்தானா…
என் நெத்தி கொதிச்சதும்…
நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

ஆண் : இதுக்குத்தானே இதுக்குத்தானே…
ஆச வளத்ததும் மீச மொளச்சதும்…
இதுக்குத்தானே…

ஆண் : இதுக்குத்தானே ஏ இதுக்குத்தானே…
சட்டி ஒடச்சதும் கட்டிப்புடுச்சதும் இதுக்குத்தானே…

—BGM—

ஆண் : கண்ணுக்கும் கண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
தண்ணிக்கும் மண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

பெண் : சட்டிக்கும் மூடிக்கும் சிஞ்சக் சிஞ்சக்
வேட்டிக்கும் சேலைக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

ஆண் : மண்ணப் பெனஞ்சேன் பானையாச்சு…
பொண்ணப் பெனஞ்சேன் காதலாச்சு…
மனசுக்குள்ள சூள போட்டு சுட்டு முடிச்சாச்சே…

பெண் : தரையில் கெடந்த ஒட்டுச் சகதி…
தலையில் சொமக்கும் பானையாச்சே…
தயாத்து முடிஞ்ச அர்னாக்கயிறு…
தாலிக் கொடியாச்சே…

ஆண் : மொத்தமா பாத்ததும் புத்தியே ஓடல…
என்னமோ கேக்கணும் ஒண்ணுமே தோணல…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

ஆண் : இதுக்குத்தானே இதுக்குத்தானே…
ஆச வளத்ததும் மீச மொளச்சதும்…
இதுக்குத்தானே…

ஆண் : இதுக்குத்தானே ஏ இதுக்குத்தானே…
சட்டி ஒடச்சதும் கட்டிப்புடுச்சதும் இதுக்குத்தானே…

—BGM—

ஆண் : வானுக்கும் மண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
ஆணுக்கும் பொண்ணுக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

பெண் : பூவுக்கும் நாருக்கும் சிஞ்சக் சிஞ்சக்…
பொட்டுக்கும் நெத்திக்கும் சிஞ்சக் சிஞ்சக்…

ஆண் : கனிஞ்ச பழத்தக் காட்டாதே…
காட்டி காட்டி பூட்டாதே…
யானையப் புடுச்சு பானைக்குள் அடச்சு…
மறைக்கப் பாக்காதே…

பெண் : வெந்த மண்ணா நான் கெடக்கேன்…
தேனு ஊத்தி நனைக்காதே…
விருப்பம் போல வளஞ்சு கொடுக்க…
என்ன கொடைக்காதே…

ஆண் : வயித்த தவர எல்லாம் பசிக்க…
எத நான் எடுக்க பசிய தணிக்க…

பெண் : கொய்யாப்பழம் வேணுமா…
கோவப்பழம் வேணுமா…
நவ்வாப்பழம் வேணுமா…
புளியம் பழம்…

பெண் : இதுக்குத்தானா இதுக்குத்தானா…
மண்ணுமிதிச்சதும் என்னக் குழச்சதும்…
இதுக்குத்தானா…

பெண் : இதுக்குத்தானா ஏய் இதுக்குத்தானா…
என் நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா…

—BGM—


Notes : Ithukku Thana Song Lyrics in Tamil. This Song from Thirumagan (2007). Song Lyrics penned by Vairamuthu. இதுக்குத்தானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading