ஆசை மகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்தேவாவானவில்

Aasai Magane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

ஆண் : கரிச காட்டு கள்ளியிலே…
நீ மொளைச்சவண்டா…
உன்ன கல் சுமந்தாச்சும்…
படிக்க வைப்பான் உன் அப்பன்டா…

ஆண் : வெட்டருவா வேணாம்…
வேல்கம்பும் வேணாம்…
கத்தியெல்லாம் தூரபோட்டு…
புத்தைகத்தை தூக்கு…

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

—BGM—

ஆண் : ஆட்டு ஈரல் சுட்டுத்தாரேன்…
அச்சு வெல்லம் தொட்டுத்தாரேன்…
நாட்டு கோழி சாறு எறக்கி…
நல்லெண்ணெய்யும் ஊத்தித்தாரேன்…
.
ஆண் : புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தும்…
புத்திக்குள்ள சேரணுமே…
நீ பொன்னு மெடல் வாங்கணுமே…

—BGM—

ஆண் : உனக்கு வந்த புகழால்…
எனக்கு முறுக்கு மீசை ஏறனுமே…
ஊர் கிறுக்கு பிடிச்சு போகணுமே…

ஆண் : மகனே உன் உச்சந்தலையில்…
எண்ணெய் வச்சி தேக்கிறேன்டா…
மகனே உன் படிப்புக்காக…
என்னை நானே தேக்கிறேன்டா…

ஆண் : நீ சுடச்சுட சுடச்சுட படிடா…
நீ சூரியனை எழுப்பி விடுடா…
நீ சுடச்சுட சுடச்சுட படிடா…
நீ சூரியனை எழுப்பி விடுடா…

ஆண் : அன்பு மகன் வாழ்க…
ஆறும் ஊரும் வாழ்க…
உன் ஐ எ எஸ் ஓரத்தில்…
அப்பன் பேரும் வாழ்க…

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

—BGM—

ஆண் : காட்டு வெயிலில் பஞ்சம் பொழச்சோம்…
கலப்பை வித்து கஞ்சி குடிச்சோம்…
எருமை தயிரு சோறு போட்டு…
உன்ன மட்டும் ஊட்டி வளத்தோம்…

ஆண் : மொத்தம் எல்லாம் செலவழிச்சாலும்…
மிச்சம் இருப்பது நீ அல்லவா…
நீ வெதைக்கு வச்ச நெல் அல்லவா…

—BGM—

ஆண் : நாட்டரங்காலில் நான் உன்ன விதைச்சேன்…
நாளை விளைச்சல் நீயல்லவா…
நீ நாட்டுக்கெல்லாம் உணவல்லவா…

ஆண் : மழை பார்க்கும் மானாவாரி…
வருஷம் ஒரு நாள் விளையுமடா…
மழைக்கால இரவும்கூட…
மறு நாள் நிச்சயம் விடியுமடா…

ஆண் : நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா…
அந்த சரஸ்வதி வருவா வாடா…
நீ சத்தியத்தை நம்பி நம்பி போடா…
அந்த சரஸ்வதி வருவா வாடா…

ஆண் : அன்பு மகன் வாழ்க…
ஆறும் ஊரும் வாழ்க…
உன் ஐ எ எஸ் ஓரத்தில்…
அப்பன் பேரும் வாழ்க…

ஆண் : ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…

ஆண் : கரிச காட்டு கள்ளியிலே…
நீ மொளைச்சவண்டா…
உன்ன கல் சுமந்தாச்சும்…
படிக்க வைப்பான் உன் அப்பன்டா…

ஆண் : வெட்டருவா வேணாம்…
வேல்கம்பும் வேணாம்…
கத்தியெல்லாம் தூரபோட்டு…
புத்தைகத்தை தூக்கு…

—BGM—


Notes : Aasai Magane Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஆசை மகனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading