| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதா | தேவா | வானவில் |
Oh Penne Thamizh Penne Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
—BGM—
ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
ஆண் : கலவையில் என்ன கலந்தானோ…
பிரம்மன் உன்னை படைக்க…
கடலில் நுரையினை எடுத்தானோ…
அழகே உன்னை வடிக்க…
இதழில் பழரசம் வடித்தானோ…
தினமும் நான் சுவைக்க…
ஆண் : அடடா அடடா அழகிதுவா…
அலைகடல் மோதும் இடை இதுவா…
அடடா அடடா அழகிதுவா…
அலைகடல் மோதும் இடை இதுவா…
ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
—BGM—
ஆண் : காற்றும் வெயிலும் துடித்தாலும்…
கடலின் அளவு குறைவதில்லை…
பல பல கோடி உயிர் துகித்தாலும்…
இன்னும் காதலும் குறைவதில்லை…
—BGM—
பெண் : கடலின் நீலம் இல்லாமல்…
வானம் வண்ணம் பெறுவதில்லை…
மனம் உடைந்தாலும் காதல் இல்லா வண்ணம்…
வாழ்வுக்கு வண்ணம் இல்லை…
ஆண் : கடலுக்கு கீழும் பூகம்பம் நடக்கும்…
காதலர் வாழ்வோடும் பூகம்பம் வெடிக்கும்…
பெண் : கடலின் தற்கொலை அதிகம்தான்…
காதலின் கதையும் அதுவேதான்…
கடலின் தற்கொலை அதிகம்தான்…
காதலின் கதையும் அதுவேதான்…
ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
—BGM—
பெண் : கடலில் ஓடி கலப்பதிற்க்கு…
காற்றில் நதிகள் ஊற்றெடுக்கும்…
அட காதல் கரை சேர்ந்து கலப்பதிற்க்கு…
மண்ணில் உயிர்கள் பிறபெடுக்கும்…
—BGM—
ஆண் : மூன்று பாகம் கடல் இருந்தும்…
நிலத்தில் தாகம் தீரவில்லை…
நம் வழிதோறும் காதல் இருந்தாலும்…
இன்னும் வாழ்க்கை நிறையவில்லை…
—BGM—
பெண் : மீனவருகெல்லாம் கடல்தான் தெய்வம்…
மானிடர்கெல்லாம் காதல்தான் தெய்வம்…
ஆண் : கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ…
காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு…
பெண் : கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ…
காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு…
ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
ஓஹோ… பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
ஆண் : கலவையில் என்ன கலந்தானோ…
பிரம்மன் உன்னை படைக்க…
கடலில் நுரையினை எடுத்தானோ…
அழகே உன்னை வடிக்க…
இதழில் பழரசம் வடித்தானோ…
தினமும் நான் சுவைக்க…
ஆண் : அடடா அடடா அழகிதுவா…
அலைகடல் மோதும் இடை இதுவா…
அடடா அடடா அழகிதுவா…
அலைகடல் மோதும் இடை இதுவா…
ஆண் : ஓ பெண்ணே தமிழ் பெண்ணே…
செங்கடல் முத்து உன் கண்ணே…
Notes : Oh Penne Thamizh Penne Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. ஓ பெண்ணே தமிழ் பெண்ணே பாடல் வரிகள்.
