கோலி குண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & கல்யாணி நாயர்வித்யாசாகர்எம் மகன்

Goligundu Kanu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

ஆண் : ஆளத் தின்னும் கன்னம்…
அலட்டிக்காத கையி…
சோளத்தட்ட காலு…
சொக்க வைக்கும் வாயி…
தேனீ தொட்ட உன்னை…
தேடி வந்தேன் தாயி…

ஆண் : ஏய்…நீ எதுக்குப் பொறந்தியோ…
என் உசிர வாங்குற…
சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…
வா… நான் உனக்கு வளந்தவ…
ஏன் காஞ்சி வெதும்புற…

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

—BGM—

ஆண் : சீரான ரோசாவே சீம்பாலு சீசாவே…
நெட்டி முறிப்பதும் எட்டி இருப்பதும் என்ன கணக்கு…

பெண் : தேனான ராசாவே தேக்காத கூசாவே…
தொட்டுப் பறிப்பதும் கட்டி அணைப்பதும் செல்ல கிறுக்கு…

ஆண் : வேப்பல கூட இப்ப தித்திக்குது தேனா…
பாப்பா நீ பாதி கொடுத்தா… ஹேய்…

பெண் : கேக்கல சோறு தண்ணி கேட்டுக்க நீ மாமா…
உன் பேச்சை யாரும் எடுத்தா…

ஆண் : அருகம் புல்லு நா…
ஆடாக வேணுமா…

பெண் : இலவம் பஞ்சு நா…
இடிபாடு ஆகுமா…

ஆண் : நீ சாமியா பூதமா…
ஒண்ணும் புரியல…
ரெண்டும் புரியல ஏய்…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…

ஆண் : ஏய்… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

—BGM—

ஆண் : பத்தாய நெல் போல…
நின்னாயே முன்னால…
வம்பு வளக்குது வம்பு வளக்குது…
அந்த சிரிப்பு…

பெண் : வெள்ளாவி கண்ணால…
சுட்டாயே தன்னால…
கொள்ளையடிக்குது கொள்ளையடிக்குது…
கள்ள நெருப்பு…

ஆண் : கண்ணுல கொட்டிக்கிட்ட சீயக்காயப் போல…
ஐயோ நீ உறுத்துறியே…

பெண் : தண்ணில சிந்திவிட்ட சீமையெண்ண போல…
என்னை நீ ஒதுக்குறியே…

ஆண் : ஏ… நீ சகடையா…
எதுக்கென்ன உருட்டுற…

பெண் : மாசக் கடைசியா…
ஏன் என்னை விரட்டுற…

ஆண் : நீ வசதியா வறுமையா…
அங்கு குறையுது இங்கு நிறையுது ஏன்…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…

ஆண் : சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

ஆண் : கோலி குண்டு கண்ணு…
கோவப்பழ உதடு…
பாலப் போல பல்லு…
படிய வச்ச வகிடு…

ஆண் : ஆளத் தின்னும் கன்னம்…
அலட்டிக்காத கையி…
சோளத்தட்ட காலு…
சொக்க வைக்கும் வாயி…
தேனீ தொட்ட உன்னை…
தேடி வந்தேன் தாயி…

ஆண் : ஏய்…நீ எதுக்குப் பொறந்தியோ…
என் உசிர வாங்குற…
சே… நீ எதுக்கு வளந்தியோ…
என் வயசத்தாங்குற…

பெண் : ஏய்… நான் உனக்கு பொறந்தவ…
ஏன் பாஞ்சி பதுங்குற…
வா… நான் உனக்கு வளந்தவ…
ஏன் காஞ்சி வெதும்புற…


Notes : Goligundu Kanu Song Lyrics in Tamil. This Song from Em Magan (2006). Song Lyrics penned by Yugabharathi. கோலி குண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading