Tag Archives: ஆர்.வி.உதயகுமார்

அன்ப சுமந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபொன்னுமணி

Anba Sumanthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
என்னை தவிக்க விடலாமா…

BGM

ஆண் : வான் மழையில் தான் நனைந்தால்…
பால் நிலவும் கரைந்திடுமா…
தீயினிலே நீயிருந்தால் நிலவொளிதான்…
சுகம் தருமா…

ஆண் : மரக்கிளையில் ஒரு குருவி கூடுக்கட்டி வாழ்ந்ததே…

BGM

ஆண் : அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்ததே…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
என்னை தவிக்க விடலாமா…

BGM

ஆண் : நீ அரைச்ச சந்தனமே…
வாசனைதான் மாறலையே…
நேசமென்னும் கோட்டையிலே…
காவல் இன்னும் தீரலையே…

ஆண் : பேசாமல் போனதென்ன பாச புறா விண்ணிலே…

BGM

ஆண் : வீசாமல் வீசும் இங்கே பாசப்புயல் மண்ணிலே…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
என்னை தவிக்க விடலாமா…

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…


Notes : Anba Sumanthu Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. அன்ப சுமந்து பாடல் வரிகள்.


ராக்குயிலே கண்ணுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஹம்சலேகாபுதிய வானம்

Raakuyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

ஆண் : ஆதரவா என் தோள் தரவா…
கெஞ்சுது கெஞ்சுது தேகம்…
மாசு இல்லா மாமனுக்கு…
சம்மதம் தந்திட வேணும்…
மந்திரம் சொல்லிட வேணும்…

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

BGM

பெண் : சக்கரை பேச்சு பேசி…
உங்க வித்தைய காட்ட வேண்டாம்…
பத்தர மாத்து தங்கம்…
என முத்திர போட வேண்டாம்…
தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா…

BGM

ஆண் : சத்திய பேச்சுக்காரன்…
நான் சொல்லுறேன் கேளு மானே…
நம்பிக்கை ஓட்டு கேட்டா…
என் உசிர கூடதாறேன்…
உன்னை காக்கும் காவல்காரன் நான்தானடி…

பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல…
விலகிப் போச்சு மாமா…

ஆண் : வா குயிலே செந்தேன் மலரே…
விளக்கம் ஒண்ணு தாரேன்…
அட விளங்கிப் போகும் மானே…

ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

BGM

ஆண் : நித்திரை போச்சு மானே…
என் வித்தைய காட்டலாமா…
பத்தினி தோட்டம்தானே…
நான் ஒத்திகை பார்க்கலாமா…
பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதா… ஆஆ…

BGM

பெண் : மங்கைய பார்த்து பார்த்து…
ஒரு மன்மத காத்து வீசும்…
வஞ்சனை ஏதும் இல்ல…
இனி பஞ்சணைதானே எல்ல…
வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா…

ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே…

பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து…
கதைய சொல்லித் தாரேன்…
நீ காவல்காரன்தானே…

ஆண் : ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்…
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்…

ஆண் : ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்…
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்…

ஆண் : ராக்குயிலே…
பெண் : ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…
ஆண் : ராக்குயிலே…
பெண் : ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…


Notes : Raakuyile Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaanam (1988). Song Lyrics penned by RV Udayakumar. ராக்குயிலே கண்ணுல பாடல் வரிகள்.


உரக்க கத்துது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். ஜானகிஇளையராஜாஎஜமான்

Urakka Kathuthu Kozhi Song Lyrics in Tamil


BGM

பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…

பெண் : இழுத்து போத்திட்டு படுத்தா…
என்ன வாட்டும் உங்க நெனப்பு…
கிணத்து தண்ணில குளிச்சா…
தினம் ஆறிடுமா கொதிப்பு…

பெண் : வானவராயா வந்து பாருமய்யா…
வாளிபராயா வந்து கேளுமையா…

பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…

BGM

பெண் : கம்மன் கருத்து கிட்ட வருது…
கொல்ல புறமா கொஞ்ச வருது…
பஞ்சி நெருப்ப சுத்தி வருது…
பத்தி கிடதான் பக்கம் வருது…

பெண் : சொக்குதுங்க வெடல புள்ள…
என்ன சத்தியமா யாரும் தொடல…
கண்டவக கண்ணு படல…
ஒன்னும் மத்தவங்க சொல்லி தரல…

பெண் : ஆத்து பக்கம் குளிச்சா…
ஆத்து தண்ணி சுடுது…
கூர பாயில் படுத்தா…
தூக்கம் எல்லாம் கெடுதே…
ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா…

பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…

BGM

பெண் : மஞ்ச ரதமே மெல்ல மெல்ல வா…
வஞ்சி இடுப்ப கிள்ள கிள்ள வா…
பிஞ்சி மனச சொந்தம் கொள்ள வா…
கொஞ்சம் கொஞ்சமா சொல்லி தரவா…

பெண் : உன்னதான் தெனம் நெனச்சேன்…
இங்க கொதிக்குது உள்ள பதமா…
உள்ளுக்குள் உள்ள நெருப்ப…
வந்து அணைக்கணும் தொட்டு இதமா…

பெண் : நேச பட்டு தினமும்…
நேந்து கிட்டேன் பலமா…
ஆச பட்டு நேசமா…
ஓரங்கட்டு வேசமா…
ஏக்கத்த மாத்தையா என்ன தேத்தையா…

பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…

பெண் : இழுத்து போத்திட்டு படுத்தா…
என்ன வாட்டும் உங்க நெனப்பு…
கிணத்து தண்ணில குளிச்சா…
தினம் ஆறிடுமா கொதிப்பு…

பெண் : வானவராயா வந்து பாருமய்யா…
வாளிபராயா வந்து கேளுமையா… ஓஓ…

பெண் : உரக்க கத்துது கோழி…
தண்ணி இறைச்சி கொட்டுது வாளி…
இருட்டுக்கு எத்தன வேலி…
வந்து இறுக்கி கட்டனும் தாலி…


Notes : Urakka Kathuthu Kozhi Song Lyrics in Tamil. This Song from Yajaman (1993). Song Lyrics penned by R.V. Udayakumar. உரக்க கத்துது பாடல் வரிகள்.


முச்சத்து மாடப்புறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்மனோ & கே. எஸ். சித்ராஇளையராஜாபெரிய குடும்பம்

Muchathu Maadapura Song Lyrics in Tamil


BGM

பெண் : முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…

பெண் : சொக்குற எம் மனச மாமனுக்கு காதுல ஓதிடுமா…
முத்த மழையினில் ஆடை கட்ட…
முந்திரித் தோப்பினில் வேலி கட்ட…
தாமதம் ஏன் என்று கேளடி தாலி கட்ட… ஓ…

ஆண் : முற்றத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
சொக்குற எம் மனச…
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா…

BGM

குழு : தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம்…
தந்ததத் தம்தம் தந்ததத் தம்…
தந்ததத் தம்தம் தந்ததத் தம்தம்…
தந்ததத் தம்தம் தந்ததத் தம்…

BGM

பெண் : கட்டளைக்கு தினம் கட்டுப்படுகிற கட்டழகி எனக்கு…
உன் கட்டுக் கதை எதற்கு… ஓஹொ…

BGM

பெண் : தொட்டுத் தழுவிட சுற்றி வருகிற கட்டிக் கரும்புனக்கு…
வீண் அச்சம் இனி எதற்கு…

ஆண் : நீருக்கும் வேருக்கும் பேதம் இல்லை…
வேறெதும் நான் பேச வார்த்தை இல்லை…

பெண் : ஆருயிர் காவலனே உன் காவல் தேடித்தான்…
தேயுது வான் பிறையே…

ஆண் : ஆடிடும் காவிரியே நீ வந்து கூடத்தான்…
பாடுது வாலிபமே…

பெண் : வா வாடிடுதே வாச முல்லை…
நீ தொடத் தாமதம் ஏன்…

ஆண் : ஓ… முற்றத்து மாடப் புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
சொக்குற எம் மனச…
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா…

BGM

ஆண் : வெட்கம் வருகையில் பத்து நிலவென…
வட்ட முகம் சிவக்க அந்த வெட்டி நிலவெதற்கு…

BGM

ஆண் : முத்தக் கடலுக்குள் முத்துக் குளித்திட திட்டம் இட்ட பிறகு…
வீண் வெட்டிக் கதை எதற்கு…

பெண் : ராமனும் சீதைக்கு மாலை இட…
மந்திரம் சொல்லிடும் வேளை எது…

ஆண் : கேளடி தாமரையே உன் நாணம் காணத்தான்…
வாழ்ந்திடும் சூரியனே…

பெண் : ஆனந்த சூரியனே உன்னோடு சேரத்தான்…
பூத்திடும் தாமரையே…

ஆண் : நான் என்னை இங்கே தந்துவிட்டேன்…
நம்புடி சுந்தரியே…

பெண் : முச்சத்து மாடப்புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…
சொக்குற எம் மனச…
மாமனுக்கு காதுல ஓதிடுமா…

ஆண் : முத்த மழையினில் ஆடை கட்ட…
முந்திரித் தோப்பினில் வேலி கட்ட…
நித்தம் தவிக்கிற சிட்டுக்குத் தாலி கட்ட… ஓ…

பெண் : முச்சத்து மாடப் புறா…
காதலுக்கு தூதொண்ணு போய் வருமா…

ஆண் : சொக்குற எம் மனச…
சுந்தரிக்கு காதுல ஓதிடுமா…


Notes : Muchathu Maadapura Song Lyrics in Tamil. This Song from Periya Kudumbam (1995). Song Lyrics penned by R.V. UdhayaKumar. முச்சத்து மாடப்புறா பாடல் வரிகள்.


தென்றல் வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிவித்யாசாகர்சுபாஷ்

Thendral Vandhu Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

ஆண் : இது கனவா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : இல்லை நினைவா…
பெண் : ஓஓ ஓ…

பெண் : புது உறவா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : சுகம் வரவா…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

BGM

பெண் : மொட்டு மலர் ஒன்று மோகம் கொண்டதின்று…
கிட்ட வந்த வண்டு மெல்ல சத்தமிட்டதா…

ஆண் : நந்தவன வண்டு மோகம் அது உண்டு…
மஞ்சள் வெயில் போல உன்னை சுட்டுவிட்டதா…

பெண் : பருவ புயலிலே உடையும் நழுவுதே… ஆஆ…
ஆண் : பொழியும் பனியிலே இதயம் இளகுதே…

பெண் : இவள் வசமா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : கனி ரசமா…
ஆண் : ஆஆ ஆ…

ஆண் : இனம் புரியா…
பெண் : ஓஓ …
ஆண் : பரவசமா… ஹ்ம்ம்…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

BGM

ஆண் : சிட்டெறும்பு ஒன்று சாரல் மழை கண்டு…
செம்பவழ சிற்றிடையில் வட்டமிட்டதா…

பெண் : செவ்விதழை கண்டு செய்ததென்ன வம்பு…
சித்தம் கெட்டு பட்டு உடல் வெட்கமிட்டதா…

ஆண் : விரும்பி அணைக்கவே விருந்து இனித்ததா…
பெண் : குறும்பு மழையிலே எறும்பு நனைந்ததா…

ஆண் : கனிசுலையா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : புது சுவையா…
பெண் : ஆஆ ஆ…

பெண் : இதழ் வழியா…
ஆண் : ஓஓ …
பெண் : அடை மழையா… ஹ்ம்ம்…

பெண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

ஆண் : தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

பெண் : இது கனவா…
ஆண் : ஓஓ ஓ…
பெண் : இல்லை நினைவா…
ஆண் : ஓஓ ஓ…

ஆண் : புது உறவா…
பெண் : ஓஓ ஓ…
ஆண் : சுகம் வரவா…


Notes : Thendral Vandhu Song Lyrics in Tamil. This Song from Subash (1966). Song Lyrics penned by R. V. Udayakumar. தென்றல் வந்து பாடல் வரிகள்.


அந்த வானத்தப் போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்இளையராஜாஇளையராஜாசின்ன கவுண்டர்

Antha Vanatha Pola Song Lyrics in Tamil


ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…

ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து…
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…

ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…

BGM

ஆண் : மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி…
வாரி வாரித் தூற்றும் இனி யாரு உனக்கு நாதி…
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி…
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி…
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா…

ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…

ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…

BGM

ஆண் : நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு…
துன்பம் வந்த போதும் அதைத் துடைப்பதிங்கு யாரு…
கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு…
கடவுள் போட்ட கோடு அதைத் திருத்தப் போவதாரு…
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனைதான் தீர்ந்திடுமா…

ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…

ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…

ஆண் : மஞ்சளிலே ஒரு நூலெடுத்து…
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…

ஆண் : அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…


Notes : Antha Vanatha Pola Song Lyrics in Tamil. This Song from Chinna Gounder (1992). Song Lyrics penned by R.V. UdhayaKumar. அந்த வானத்தப் போல பாடல் வரிகள்.


கண்ணு பட போகுதையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்இளையராஜாஇளையராஜாசின்ன கவுண்டர்

Kannupada Poguthaiya Song Lyrics in Tamil


குழு : ஊரு கண்ணு உறவு கண்ணு…
நாய் கண்ணு நரி கண்ணு…
நோய் கண்ணு நொல்ல கண்ணு…
நல்ல கண்ணு கொல்லி கண்ணு…
கண்ட கண்ணு முண்ட கண்ணு…
கரிச்சி கொட்டும் எல்லா கண்ணும்…
கண்ட பிணி தொலையட்டும்…
கடுகு போல வெடிக்கட்டும்…
நல்லதெல்லாம் நடக்கட்டும்…
நாடும் காடும் செழிக்கட்டும்…

BGM

ஆண் : கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே…
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே…
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே… ஹே…

குழு : கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே…
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
ஆண் : ஆமா…

BGM

ஆண் : சாட்சிகளை செட் அப் பண்ணும்…
வேலை இங்கு இல்லே…
இல்லே வக்கீலும் பொய்ய சொல்லுற…
வாதம் இங்கு வந்ததில்லே…

ஆண் : ஏடெடுத்து படிச்சதில்லே…
எவருக்கும் நீ கொறைஞ்சதில்லே…
வாக்கெடுப்பு நடந்ததில்லே…
எதிலும் எப்போவும் தோத்ததில்லே…

ஆண் : வீதியில ஒரு வீரன்…
மனு நீதியில நல்ல சோழன்…
வீதியில ஒரு வீரன்…
மனு நீதியில நல்ல சோழன்…

ஆண் : இந்த ஊருக்குள்ள நீதான் ஐயா…
எங்களுக்கு தோழன்…
இந்த ஊருக்குள்ள நீதான் ஐயா…
எங்களுக்கு தோழன்… ஹோய்…

குழு : கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே…
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…

குழு : நாத்து நாடும் வேளையிலே பாட்டு ஒன்னு வேணும்…
பாட்டுக்குள்ளே மாமனுக்கு செய்தி சொல்ல வேணும்…
ஏர் பிடிக்கும் கை பிடிச்சு நான் நடக்க வேணும்…
அந்த ஏழுமலை சாமி வந்து ஆதரிக்க வேணும்…

BGM

ஆண் : ஏர் எடுத்து நீ நடந்தா…
மாலை வந்து தோளில் விழும்…
தோளிருக்கும் துண்டும் அங்கே…
உன் கதைய சொல்ல வரும்…

ஆண் : முத்தான பரம்பரைதான்…
குப்பனும் சுப்பனும் அண்ணன் தம்பிதான்…
எல்லோரும் ஒரு முறைதான்…
ஏழையும் சாலையும் சரிசமன்தான்…

ஆண் : ஐயாவோட மானம்…
அந்த காவேரி மானை மீறும்…
ஐயாவோட மானம்…
அந்த காவேரி மானை மீறும்…

ஆண் : அந்த காவேரி மானு பரம்பரைக்கே…
உன்னாலதான் பேரு…
காவேரி மானு பரம்பரைக்கே…
உன்னாலதான் பேரு…

குழு : கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே…
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
ஆண் : ஆமா…

ஆண் : கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே…
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…


Notes : Kannupada Poguthaiya Song Lyrics in Tamil. This Song from Chinna Gounder (1992). Song Lyrics penned by R.V. UdhayaKumar. கண்ணு பட போகுதையா பாடல் வரிகள்.


சிந்து நதி செம்மீனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபொன்னுமணி

Sindhu Nathi Semeene Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

ஆண் : தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…
தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…

ஆண் : கதை பேசும் கண்ணோடு…
கலங்காதே பெண் மானே…
துணை நானே பொன் மானே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

BGM

ஆண் : காக்கை சிறகிலே தீண்டி…
கதைகள் நூறு கூறவா…
பாசம் வைத்த பால் நிலாவை…
கையில் நானும் ஏந்தவா…

ஆண் : மாமன் தொட்ட பூந்தேரே…
மனதில் நீயும் ஏங்காதே…
ஏக்கத்தோடு நீ போனால்…
ஏழை நெஞ்சு தாங்காதே…

ஆண் : நீயும் வாழத்தானே நானும் வாழ்கிறேனே…
வீசும் தென்றலே…
பேசு தென்றலே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

BGM

ஆண் : வாழை நாரிலே தாலி போட்ட காலம் வேறம்மா…
சாமி சாட்சியாக நானும் தந்த வாக்கு மாறுமா…

ஆண் : நாணத்தோடு பூச்சூடி…
நாளும் எந்தன் பேர் பாடி…
ஆடி பாடும் காத்தாடி…
மறந்ததென்ன ஆத்தாடி…

ஆண் : தேடி தேடித்தானே நானும் வாழ்கிறேனே…
வீசும் தென்றலே…
பேசு தென்றலே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…

ஆண் : தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…
தென்னங்கீற்றில் ராகம் தேடும் தென்மாங்கே…

ஆண் : கதை பேசும் கண்ணோடு…
கலங்காதே பெண் மானே…
துணை நானே பொன் மானே…

ஆண் : சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…


Notes : Sindhu Nathi Semeene Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. சிந்து நதி செம்மீனே பாடல் வரிகள்.


முகம் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிவித்யாசாகர்சுபாஷ்

Mugam Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

பெண் : சுகம் என்ன யோகம் என்ன…
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன…

ஆண் : விடை என்ன விளக்கம் என்ன…
விரல் பின்ன நாணம் என்ன…

பெண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

பெண் : முகம் என்ன மோகம் என்ன…
ஆண் : விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

BGM

பெண் : விரல்கள் தீண்ட மெழுகாய் ஆனேன்…
விலகி இருந்தால் என்ன…

ஆண் : உறவை தேடும் உயிரை நானும்…
உருகி கிடந்தால் என்ன…

பெண் : இது ஆசை பேச்சா என்ன…
நான் வாங்கும் மூச்சா என்ன…

ஆண் : இள வேனில் காற்றா என்ன…
இவள் தேனின் ஊற்றா என்ன…

பெண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

ஆண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

பெண் : சுகம் என்ன யோகம் என்ன…
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன…

BGM

ஆண் : மார்பில் நீந்தும் நிலவே உன்னை…
வானம் மறந்தால் என்ன…

பெண் : இதய கதவை திறந்தேன் மெல்ல…
நானும் கரைந்தால் என்ன…

ஆண் : வரும் கால வரலாற்றிலே…
இனி நாமும் கலந்தால் என்ன…

பெண் : இதை மீறும் காதல் இல்லை…
என பாடம் உரைத்தால் என்ன…

ஆண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

பெண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

ஆண் : சுகம் என்ன யோகம் என்ன…
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன…

பெண் : விடை என்ன விளக்கம் என்ன…
விரல் பின்ன நாணம் என்ன…

ஆண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

ஆண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…


Notes : Mugam Enna Song Lyrics in Tamil. This Song from Subash (1966). Song Lyrics penned by R. V. Udayakumar. முகம் என்ன பாடல் வரிகள்.


சின்ன கிளி வண்ண கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசின்ன கவுண்டர்

Chinnakili Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே…

பெண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே…

பெண் : யாரு யாரு அது யாரு…
அவர் பேரு பேரு என்ன பேரு…
யாரு யாரு அது யாரு…
அவர் பேரு பேரு என்ன பேரு…

பெண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே…

BGM

ஆண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே…

ஆண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே…

ஆண் : யாரு யாரு அது யாரு…
அவ பேரு என்ன அத கூறு…
யாரு யாரு அது யாரு…
அவ பேரு என்ன அத கூறு…

ஆண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே…


Notes : Chinnakili Song Lyrics in Tamil. This Song from Chinna Gounder (1992). Song Lyrics penned by R.V. UdhayaKumar. சின்ன கிளி வண்ண கிளி பாடல் வரிகள்.