மருவத்தூர் ஓம் சக்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ்.சித்ராதேவாஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

Maruvathor Om Sakthi Song Lyrics in Tamil


பெண் : ஓம் சக்தி… ஓம் சக்தி…

BGM

பெண் : மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி…
உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி…
கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி…
மாயவரம் அபயாம்பிகா…

பெண் : மதுரை நகர் மீனாட்சி காஞ்சீபுரம் காமாட்சி…
காசி விசாலாக்ஷி திருக்கடவூர் அபிராமி…
சிதம்பரத்து சிவகாமி ஸ்ருங்கேரி சாரதாம்பா…
திருவாரூர் கமலாம்பிகா…

பெண் : நாகாம்பா யோகாம்பா லலிதாம்பா ஜெகதாம்பா…
பாலாம்பா நீலாம்பா கனகாம்பா சௌடாம்பா…
சிவகாளி நவகாளி திருசூலி சுபநீலி…
ஸ்ரீதேவி பூதேவி ஜயதேவி மலையரசி…

பெண் : அம்மாயி பொம்மாயி அன்பாயி குழுமாயி…
பொன்னாயி பூவாயி வேலாயி வீராயி…

பெண் : ஆரல்வாய் இசக்கி அம்மா…
வாடி ஆரணி படவேட்டம்மா…
திருவாங்கூர் மேகவல்லி…
தாயி திருக்கூடல் மதுரவல்லி…

பெண் : புதுக்கோட்டை புவனேஸ்வரி…
நங்கநல்லூர் ராஜேஸ்வரி…
மண்ணடியில் மல்லீஸ்வரி…
மாதேஸ்வரம் மாதேஸ்வரி…

பெண் : அலங்காரக் கல்யாணி நாமக்கல் அரசாணி…
அங்காளி செங்காளி சந்தோஷி மாதா…
மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே…
செல்லாயி சிலம்பாயி கண்ணாத்தா வா வா…

பெண் : கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி…
கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி…
வலங்கைமான் திருமாரி வழி காட்டும் திருப்பாச்சி…
உமையாம்பா தேனாம்பா மலையம்மா வேலம்மா…
திருவத்தூர் வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா…
மகராசியே எங்கள் பாளையத்தம்மா…

பெண் : விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி…
காரைக்குடியம்மா பொற்கூடையம்மா…

பெண் : ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி…
பாஞ்சாலி ராக்காயி பைரவி சாம்பவி…
திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி…
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி…

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி…
வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி…
உயிர் காக்க வா சக்தி…

BGM

பெண் : எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி…
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா…
சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா…
கோயமுத்தூரின் கொணியம்மாவே…
சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா…
கொல்லிம்லை வாழும் எட்டுகைய‌ம்மா…

பெண் : வாகேஸ்வ‌ரி பாகேஸ்வ‌ரி வைதிஸ்வ‌ரி யோகேஸ்வ‌ரி…
ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே…
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி…
ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே…

பெண் : ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி…
காசிநகர் அன்னை அண்ணபூரணி…
மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி…
திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி…

பெண் : திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி…
சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா…

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி…
வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி…
உயிர் காக்க வா சக்தி…

BGM

பெண் : தங்குச்செடித்தெரு காளிகாம்பவே…
தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே…
நாட்டரசன் கொட்டை நாச்சியம்மாவே…
அத்தா கருப்புரு பெட்டிகாளி…

பெண் : பேச்சி பாரை உள்ள பேச்சியம்மாவே…
பட்டிஸ்வரன் கோயில் கோமதியம்மா…
மேல்மலையனூர் அங்களாம்மா…
அடி கங்கையம்மா தாயே தூளசியம்மா…
வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா…

பெண் : உப்பிலியம்மாவே குலசியம்மா…
செண்ணியம்மா அடி கொண்ணியம்மா…
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா…

பெண் : உத்துபாலையம்மா சேப்பார்தம்மா…
அடி சீந்தாமணியம்மா நருழியம்மா…
குரங்கினியம்மாவே கோலவிழியம்மா…
சுந்தரி சௌந்தரி சோலையம்மா…

பெண் : அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா…
அடங்காத பேய்யோட்ட‌ மாயம்மா வா வா…

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி…
ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி…
வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி…
உயிர் காக்க வா சக்தி…

BGM

பெண் : குலசேகரபட்டின முத்தம்மாவே…
குற்றாலசத்தி பாரசக்தி தாயே…
பரமகுடி வாழும் முத்தாலம்மாவே…
பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே…

பெண் : கொடியிடையம்மா திருவுடையம்மா…
காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா…
திருவக்கரையின் வக்கிரகாளி…
சிருவாச்சுராலே என் மதுரகாளி…

பெண் : சேலத்து ராஜகாளியம்மாவே…
சிந்தல்கரையில் வாழ்பவள் நீயே…
சொட்டானிக்கரையின் பகவதியம்மா…
திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா…

பெண் : பம்பை மதி செண்டை இது சிந்தும்…
உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே…
மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே…
உடைப்பட்டுசிதறும் உருமாறிப்போகும்…

பெண் : என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி…
உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி…
கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது…
காற்றுக்கு வேலி கிடையாது வாடி…

பெண் : தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும்…
இனம் நன்மைப்பெறஅன்னை திருகையாலே…
அருள் வழங்கிடு தாயே…

பெண் : வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம்…
இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட…
கொதித்து எழுந்திடுவாயே…

பெண் : வரவேண்டும் வரவேண்டும்…
ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே…
பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம்…
உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி…

பெண் : மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த…
ஏவல்கள் செய்த இடங்சல்களை அடி…
தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட…
வெண்கரையம்மாவே வாடியம்மா…

பெண் : நீ வாடியே வாடி பூங்கொதையம்மா…
நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா…

பெண் : ஏணியம்பேடு அபிராம சுந்தரி…
ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி…
பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி…
அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி…

பெண் : திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி…
வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா…
பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கோட்டை மாரி…

பெண் : திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி…
புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி…

பெண் : இனிமேலும் தயங்காதே…
உலகம் தான் தாங்காதே…
விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி…

பெண் : அணியாயம் ஜெயிக்காதே…
ஜெயித்தாலும் நிலைக்காதே…
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே…

குழு : வாடியம்மா வாடியம்மா வாடியம்மா…
அம்மா அம்மா அம்மா அம்மா…
அம்மா அம்மா அம்மா அம்மா…
அம்மா அம்மா அம்மா அம்மா…


Notes : Maruvathor Om Sakthi Song Lyrics in Tamil. This Song from Sri Raja Rajeshwari (2001). Song Lyrics penned by Kalidasan. மருவத்தூர் ஓம் சக்தி பாடல் வரிகள்.