Category Archives: மின்சாரா கண்ணா

திமுக ஆண்டால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாமின்சாரா கண்ணா

Thi Mu Ka Song Lyrics in Tamil


BGM

ஆண் : திமுக ஆண்டால் என்ன…
தமக ஆண்டால் என்ன…
பாமக ஆண்டால் என்ன…
பாஜக ஆண்டால் என்ன…
அதிமுக ஆண்டால் என்ன…
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன…
உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு…
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
மின்னல்தான் பாயுது நீ முன்னால நின்னா…

பெண் : ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
எல்லாம் உன் கைபடத்தான் மின்னாதோ பொன்னா…

BGM

ஆண் : நேசி ஊரை நேசி…
நீ நேசித்தால்தான் ஊரும் இங்கு உன்னை நேசிக்கும்…
அட உன்னைப் பற்றி பாட்டெழுதி ஊரே வாசிக்கும்…

பெண் : ஈசி ரொம்ப ஈசி…
அன்பாய் தட்டிப்பாரு எந்த வீடும் வாசல் திறக்கும்…
நீ நட்புக்காக கையை நீட்டு வானம் வரைக்கும்…

ஆண் : ஹே பொன்னான உள்ளம் ஒன்று…
நின்னாலே முன்னாலே…
வாராதா வானம் கூட தன்னாலே பின்னாலே…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்துவிட்டோம் ஒன்னோடு ஒன்னா…

BGM

ஆண் : திமுக ஆண்டால் என்ன…
தமக ஆண்டால் என்ன…
பாமக ஆண்டால் என்ன…
பாஜக ஆண்டால் என்ன…
அதிமுக ஆண்டால் என்ன…
மதிமுக ஆண்டால் என்ன…
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன…
உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு…
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா…

குழு : ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா…

BGM


Notes : Thi Mu Ka Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Na. Muthukumar. திமுக ஆண்டால் பாடல் வரிகள்.


ஓ அங்கிள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோதேவாமின்சாரா கண்ணா

Oh Uncle Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி…
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்…
ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி…
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்…

{ ஆண் : ஓ அங்கிள் ஆண்ட்டி…
நான் உங்கள் வீட்டு பிள்ளையே…
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே…} * (2)

ஆண் : மலரின் உழைப்புகள் கனியாகும்…
மழையின் உழைப்புகள் நதியாகும்…
மூங்கில் உழைப்புகள் குழலாகும்…
மனிதன் உழைப்புகள் பணமாகும்…

ஆண் : ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி…
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்…

BGM

ஆண் : மதங்கள் சண்டையிடும் உலகத்தை திருத்தி…
அமைதி சொல்ல வேண்டும்…
மலர்கள் எடுத்து நாம் ஆயுதம் அழித்து…
அன்பை சொல்ல வேண்டும்…

ஆண் : அறிவாலே உந்தன் அறிவாலே…
பூமி உன் வசம் ஆக்கிவிடலாம்…
முடியாது என்று கிடையாது…
நீ முயன்றால் வெற்றி பெறலாம்…

ஆண் : மண்ணும் விண்ணும் தூரம் இல்லை…
தொட்டுக்கொள்ள பாதம் உண்டு…
தண்ணீரிலும் வானம் தோன்றுமே…

BGM

ஆண் : ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி…
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்…

BGM

ஆண் : நாளைக்கும் என்னும் சொல்லை நீ தள்ளி போடு…
இன்றைக்கே முடித்துவிடு…
விளக்கின் அடியிலும் இருட்டுகள் உண்டு…
வெளிச்சம் தேடி எடு…

ஆண் : அருவியிடம் மலை அருவியிடம்…
நாம் பாடங்களை கேட்டுக் கொள்ளலாம்…
குருவிகளை சிட்டுக்குருவிகளை…
நாம் மாணவராய் சேர்த்துக் கொள்ளலாம்…

ஆண் : மண்ணை முத்தம் இட்டதால்…
கன்னங்கள் சிவந்ததோ…
கேரட்டுக்கும் வெட்கம் வந்ததோ…

BGM

ஆண் : ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி…
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்…
ஓ அங்கிள் அங்கிள் அங்கிள் ஆண்ட்டி…
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஆண்ட்டி அங்கிள்…

{ ஆண் : ஓ அங்கிள் ஆண்ட்டி…
நான் உங்கள் வீட்டு பிள்ளையே…
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே… } * (2)

ஆண் : ஓ அங்கிள் அங்கிள் அங்கிள் ஆண்ட்டி…
ஓ ஆண்ட்டி ஆண்ட்டி ஆண்ட்டி அங்கிள்…

BGM


Notes : Oh Uncle Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Vaali. ஓ அங்கிள் பாடல் வரிகள்.


பாய் பிரெண்டை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மனோ & சுஜாதா மோகன்தேவாமின்சாரா கண்ணா

Boy Friendai Song Lyrics in Tamil


BGM

பெண் : பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு…
நிலவே என் நிலவே…
பார்த்து ரொம்ப நாளானதே…
நிலவே என் நிலவே…

பெண் : அவன் நடையோ தனியழகு…
உடையோ தனியழகு…
அப்படியோர் ஆணழகு…
ஆயிரத்தில் ஓரழகு…

ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்…
நிலவே சொல் நிலவே…
பாவை என்னை பார்க்கவில்லையே…
நிலவே கேள் நிலவே…

ஆண் : அவள் நடித்தால் தனியழகு…
துடித்தால் தனியழகு…
ஊடலிலே ஓரழகு…
கூடலிலே நூறழகு…

பெண் : பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு…
நிலவே என் நிலவே…

BGM

பெண் : உன் வாலிபம் பொல்லாதது…
உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன்…
நீ உதவ வரவில்லையே…

ஆண் : உன் மோகனம் பொன்னானது…
உனை விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன்…
நீ உனது வசம் இல்லையே…

பெண் : எனக்கென்றே தனியாக ஸ்வாசங்கள் கிடையாது…
இருவருக்கும் உயிர்காற்று ஒன்றேதான் எனும்போது…

ஆண் : இந்த உறவுகள் உடையாது…
இதை உடைப்பவன் கிடையாது…
இங்கு இரவுகள் ஆனால் விரகங்கள் நமது…
இதயத்தை குடையாது…

பெண் : பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு…
நிலவே என் நிலவே…

ஆண் : பாவை என்னை பார்க்கவில்லையே…
நிலவே கேள் நிலவே…

BGM

ஆண் : சந்திரோதயம் சூர்யோதயம்…
உன் இருவிழி கொடுத்த இரவல்களோ…
என உலகம் நினைக்கின்றதே…

பெண் : சந்தோஷமும் சங்கீதமும்…
நீ மருவிட விளையும் அருவிகளோ…
என் மனது நினைக்கின்றதே…

ஆண் : நாம் இதுபோல் தினம்தோறும்…
நனைந்தபடி இருப்போமா…
நான் யாரோ நீ யாரோ…
நமை நாமே மறப்போமா…

பெண் : உன் விரல் நகம் படும்போது…
இந்த வீணைக்கு வலிக்காது…
எனை தொட இனிமேல் நீ தினசரி மீட்டு…
எனக்கது சலிக்காது…

ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்…
நிலவே சொல் நிலவே…
பாவை என்னை பார்க்கவில்லையே…
நிலவே கேள் நிலவே…

பெண் : அவன் நடையோ தனியழகு…
உடையோ தனியழகு…
அப்படியோர் ஆணழகு…
ஆயிரத்தில் ஓரழகு…

ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்…
நிலவே சொல் நிலவே…

பெண் : பார்த்து ரொம்ப நாளானதே…
நிலவே என் நிலவே…


Notes : Boy Friendai Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Na. Muthukumar. பாய் பிரெண்டை பாடல் வரிகள்.


oodha-oodha-song-lyrics-in-tamil

ஊதா ஊதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & ஹரிணிதேவாமின்சாரா கண்ணா

Oodha Oodha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…

ஆண் : நான் பார்த்த ஊதா பூவே…
நலம்தானா ஊதா பூவே…
தேன் வார்த்த ஊதா பூவே…
சுகம்தானா ஊதா பூவே…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
இன்றும் என்றும் உதிரா பூ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…

பெண் : நீ பார்த்தால் ஊதா பூவே…
நலம் ஆகும் ஊதா பூவே…
தோள் சேர்த்தால் ஊதா பூவே…
சுகம் காணும் ஊதா பூவே…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
உன்னை நீங்கி வாழா பூ…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…

BGM

ஆண் : ஊதா ஊதா ஊதா பூவே…
ஊதா ஊதா ஊதா பூவே…

BGM

பெண் : ஓா் உயில் தீட்டி வைப்பேன்…
நான் உனக்காக என்று…
என்னுயிர் கூட இல்லை…
இனி எனக்காக என்று…

BGM

ஆண் : ஓர் நெடுஞ்சாலை தன்னை…
நான் கடந்தேனே அன்று…
என்னை நிலம் கேட்டதம்மா…
உன் நிழல் எங்கு என்று…

பெண் : உன்னில் நான்…
ஒரு பாதியென தெரியாதோ… ஓ…

ஆண் : ஓ அன்பே நீ…
அதை சொல்லுவதேன் புரியாதோ… ஓ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
உன் பேர் தவிர ஊதா பூ…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…

BGM

ஆண் : உன் மழை கூந்தல் மீது…
என் மனப்பூவை வைத்தேன்…
ஓர் உயிர் நூலை கொண்டு…
இரு உடல் சேர தைத்தேன்…

BGM

பெண் : உன் விழி பார்வை அன்று…
எனை விலைபேச கண்டேன்…
நீ எனை வாங்கும் முன்பு…
நான் உனை வாங்கி கொண்டேன்…

ஆண் : எந்தன் காதலி சொல்லுவதே…
இனி ஆணை…

பெண் : என்றும் தாவணி வென்றிடுமோ…
ஒரு ஆணை…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
நீதான் நீதான் வாடா பூ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…

ஆண் : நான் பார்த்த ஊதா பூவே…
நலம்தானா ஊதா பூவே…
தேன் வார்த்த ஊதா பூவே…
சுகம்தானா ஊதா பூவே…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
இன்றும் என்றும் உதிரா பூ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…


Notes : Oodha Oodha Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Vaali. ஊதா ஊதா பாடல் வரிகள்.


உன் பேர் சொல்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாமின்சாரா கண்ணா

Un Per Solla Song Lyrics in Tamil


பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…

BGM

ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

ஆண் : உன்தோள் சேர ஆசைதான்…
உன்னில் வாழ ஆசைதான்…
உனக்குள் உறைய ஆசைதான்…
உலகம் மறக்க ஆசைதான்…
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்…

பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

BGM

பெண் : கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே…
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே…

ஆண் : நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென…
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன…

பெண் : தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல…
காரணம் காதல்தானே…

ஆண் : பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான்…
உன்னைப் படைத்ததாலே…

பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

BGM

ஆண் : நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே…
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே…

பெண் : நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன்…
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்…

ஆண் : வானின்றி வெண்ணிலா இங்கில்லை…
நாம் இன்றி காதல் இல்லையே…

பெண் : காலம் கரைந்த பின்னும்…
கூந்தல் நரைத்த பின்னும்…
அன்பில் மாற்றம் இல்லையே…

ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

பெண் : உன்தோள் சேர ஆசைதான்…
உன்னில் வாழ ஆசைதான்…
உனக்குள் உறைய ஆசைதான்…
உலகம் மறக்க ஆசைதான்…
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்…

ஆண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

பெண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான்…


Notes : Un Per Solla Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Kalaikumar. உன் பேர் சொல்ல பாடல் வரிகள்.