ஊதா ஊதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & ஹரிணிதேவாமின்சாரா கண்ணா

Oodha Oodha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…

ஆண் : நான் பார்த்த ஊதா பூவே…
நலம்தானா ஊதா பூவே…
தேன் வார்த்த ஊதா பூவே…
சுகம்தானா ஊதா பூவே…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
இன்றும் என்றும் உதிரா பூ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…

பெண் : நீ பார்த்தால் ஊதா பூவே…
நலம் ஆகும் ஊதா பூவே…
தோள் சேர்த்தால் ஊதா பூவே…
சுகம் காணும் ஊதா பூவே…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
உன்னை நீங்கி வாழா பூ…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…

—BGM—

ஆண் : ஊதா ஊதா ஊதா பூவே…
ஊதா ஊதா ஊதா பூவே…

—BGM—

பெண் : ஓா் உயில் தீட்டி வைப்பேன்…
நான் உனக்காக என்று…
என்னுயிர் கூட இல்லை…
இனி எனக்காக என்று…

—BGM—

ஆண் : ஓர் நெடுஞ்சாலை தன்னை…
நான் கடந்தேனே அன்று…
என்னை நிலம் கேட்டதம்மா…
உன் நிழல் எங்கு என்று…

பெண் : உன்னில் நான்…
ஒரு பாதியென தெரியாதோ… ஓ…

ஆண் : ஓ அன்பே நீ…
அதை சொல்லுவதேன் புரியாதோ… ஓ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
உன் பேர் தவிர ஊதா பூ…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…

—BGM—

ஆண் : உன் மழை கூந்தல் மீது…
என் மனப்பூவை வைத்தேன்…
ஓர் உயிர் நூலை கொண்டு…
இரு உடல் சேர தைத்தேன்…

—BGM—

பெண் : உன் விழி பார்வை அன்று…
எனை விலைபேச கண்டேன்…
நீ எனை வாங்கும் முன்பு…
நான் உனை வாங்கி கொண்டேன்…

ஆண் : எந்தன் காதலி சொல்லுவதே…
இனி ஆணை…

பெண் : என்றும் தாவணி வென்றிடுமோ…
ஒரு ஆணை…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
நீதான் நீதான் வாடா பூ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ஊதும் வண்டு ஊதா பூ…
ஊதா ஊதா ஊதா பூ…
ஊத காற்றில் மோதா பூ…

ஆண் : நான் பார்த்த ஊதா பூவே…
நலம்தானா ஊதா பூவே…
தேன் வார்த்த ஊதா பூவே…
சுகம்தானா ஊதா பூவே…

ஆண் : ஊதா ஊதா ஊதா பூ…
இன்றும் என்றும் உதிரா பூ…

பெண் : ஊதா ஊதா ஊதா பூ…
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்…


Notes : Oodha Oodha Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Vaali. ஊதா ஊதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading