உன் பேர் சொல்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாமின்சாரா கண்ணா

Un Per Solla Song Lyrics in Tamil


பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…

—BGM—

ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

ஆண் : உன்தோள் சேர ஆசைதான்…
உன்னில் வாழ ஆசைதான்…
உனக்குள் உறைய ஆசைதான்…
உலகம் மறக்க ஆசைதான்…
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்…

பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

—BGM—

பெண் : கண்ணில் கடைக் கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே…
கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே…

ஆண் : நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென…
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென்ன…

பெண் : தூக்கத்தில் உன்பேரை நான் சொல்ல…
காரணம் காதல்தானே…

ஆண் : பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன்தான்…
உன்னைப் படைத்ததாலே…

பெண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

—BGM—

ஆண் : நீயும் என்னைப் பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே…
மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே…

பெண் : நீயும் கோவில் ஆனால் சிலையின் வடிவில் வருகிறேன்…
நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன்…

ஆண் : வானின்றி வெண்ணிலா இங்கில்லை…
நாம் இன்றி காதல் இல்லையே…

பெண் : காலம் கரைந்த பின்னும்…
கூந்தல் நரைத்த பின்னும்…
அன்பில் மாற்றம் இல்லையே…

ஆண் : உன் பேர் சொல்ல ஆசைதான்…
உள்ளம் உருக ஆசைதான்…
உயிரில் கரைய ஆசைதான்…
ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

பெண் : உன்தோள் சேர ஆசைதான்…
உன்னில் வாழ ஆசைதான்…
உனக்குள் உறைய ஆசைதான்…
உலகம் மறக்க ஆசைதான்…
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான்…

ஆண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான்…

பெண் : ஆசைதான் உன்மேல் ஆசைதான்…


Notes : Un Per Solla Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Kalaikumar. உன் பேர் சொல்ல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading