Category Archives: கரகாட்டக்காரன்

Mundhi Mundhi Vinaayagane Song Lyrics in Tamil

முந்தி முந்தி விநாயகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாகரகாட்டக்காரன்

Mundhi Mundhi Vinaayagane Song Lyrics in Tamil


BGM

ஆண் : முந்தி முந்தி விநாயகனே…
முப்பது முக்கோடி தேவர்களே…
முந்தி முந்தி விநாயகனே…
முப்பது முக்கோடி தேவர்களே…

ஆண் : வந்து வந்து எம்மை காரும்மையா…
வந்து வந்து எம்மை காரும்மையா…
வந்தனம் வந்தனம் தந்தோமையா…
வந்தனம் வந்தனம் தந்தோமையா…

BGM

பெண் : சக்தி உள்ள சிவ குருவே…
நித்தம் கொடுத்தே வணக்கமையா…
சக்தி உள்ள சிவ குருவே…
நித்தம் கொடுத்தே வணக்கமையா…

பெண் : பக்தியுடனே பதம் பணிந்தேன்…
பக்தியுடனே பதம் பணிந்தேன்…
நிச்சயம் வெற்றியே தாறுமையா…
நிச்சயம் வெற்றியே தாறுமையா…

BGM

ஆண் : வானத்துல சுத்துதடி ஒன்பது நவக்கிரகம்…
பூமியிலே எடுத்து வந்தே தலையிலாத கரகம்…
ஊரு உலகம் மெச்சிவரும் உத்தமபாளைய சரகம்…
உள்ளமுள்ள ஜனங்க இந்த பட்டகேட்டு கேரங்கும்…

BGM

பெண் : தேனி பெரியகுளம் தென் மதுரை ஜில்லா…
வெள்ளி மெடலு பல வாங்கி வந்தே நல்லா…
தேவி சரஸ்வதி பேர சொல்லி படுச்சேன்…
தேசாதி தேசமெல்லா மேடை ஏறி ஜெயிச்சேன்…

BGM

ஆண் : கோடை இடி முழக்கம் கொட்டு மேளம் கேட்டு…
கூட ஒலிக்குதடி நானும் பாடும் பாட்டு…
சோடை சோணக்கமில்லை மேடை ஏறும் காலு…
வாடி பழக்கமில்லை வாலிபமான ஆளு…

BGM

பெண் : என்ன எதிர்த்து நின்னு ஜெயிக்கும் ஆளு யாரு…
பொன்னனான காலுக்கொரு பதில சொல்லிபாரு…
பொண்ணெல்லாம் பூவு இந்த ஆம்பளைங்க யாரு…
தன்ன மறந்து நின்னு தவிக்கும் வாழ நாறு…

BGM


Notes : Mundhi Mundhi Vinaayagane Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. முந்தி முந்தி விநாயகனே பாடல் வரிகள்.


பாட்டாலே புத்தி சொன்னார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாகரகாட்டக்காரன்

Pattale Puthi Sonnar Song Lyrics in Tamil


ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்…
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்…
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…

BGM

ஆண் : காளையர்கள் காதல் கன்னியரை…
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்…
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்…
இருப்பதை பாடச் சொன்னார்கள்…

ஆண் : கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின்…
மெட்டு போடசொன்னார்கள்…
தெருவோரம் சேர்ந்திட…
திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்…

ஆண் : நான் படும் பாடுகள் அந்த ஏடுகள்…
அதில் எழுதினாலும் முடிந்திடாது…

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்…
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…

BGM

ஆண் : பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து…
அதுதான் நல்லதென்றார்கள்…
படத்தில் முதல் பாடலை பாட வைத்து…
அது நல்ல ராசி என்றார்கள்…

ஆண் : எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்…
நான் விற்றேன் இதுவரையில்…
அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா…
என அரியேன் உண்மையிலே…

ஆண் : எனக்குதான் தலைவர்கள் என் ரசிகர்கள்…
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்…

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்…
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…

ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்…
பாட்டாலே பக்தி சொன்னார்…
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்…
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்…


Notes : Pattale Puthi Sonnar Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Ilaiyaraaja. பாட்டாலே புத்தி சொன்னார் பாடல் வரிகள்.


மாரியம்மா மாரியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராஇளையராஜாகரகாட்டக்காரன்

Mariyamma Mariyamma Song Lyrics in Tamil


ஆண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…

பெண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…

ஆண் : தலை மேல மணி மகுடம்…
என் தாயி தந்த பூங்கரகம்…

பெண் : நிலையாக நிலைக்க வைக்கும்…
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்…

ஆண் : உன்ன நெனச்சபடி…
உண்மை ஜெயிக்கும்படி…
வேண்டும் வரம் தா மாரியம்மா…

பெண் : காவல் நீதான் காளியம்மா…

ஆண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…

பெண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…

BGM

பெண் : மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா…
காத்தும் கனலும் நீயம்மா…

ஆண் : வானத்தபோல் நின்னு பாரம்மா…
வந்தேன் தேடி நானம்மா…

பெண் : இந்த மனம் முழுதும் நீதானே…
வந்த வழி துணையும் நீதானே…

ஆண் : தங்க திருவடிய தொழுதோமே…
இங்கு மனம் உருக அழுதோமே…

பெண் : சீரேஸ்வரி காமேஸ்வரி…
வேறாரு நீதானே காப்பு…

ஆண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…

பெண் : கரு மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…

BGM

ஆண் : வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும்…
வாழ்வே வளமே பாக்கட்டும்…

பெண் : நீ எங்க தாய் என்று காணட்டும்…
நிழலும் நிஜமா மாறட்டும்…

ஆண் : சக்தி முழுதும் தந்து காப்பாயே…
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே…

பெண் : பக்தி மனம் விரும்பும் என் தாயே…
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே…

ஆண் : சாட்சி சொல்லும் தாயே துணை…
தீயெல்லாம் பூவாக மாறட்டும்…

பெண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…

ஆண் : கரு மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…

பெண் : தலை மேல மணி மகுடம்…
என் தாயி தந்த பூங் கரகம்…

ஆண் : நிலையாக நிலைக்க வைக்கும்…
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்…

பெண் : உன்ன நெனச்சபடி…
உண்மை ஜெயிக்கும்படி…
வேண்டும் வரம் தா மாரியம்மா…

ஆண் : காவல் நீதான் காளியம்மா…

ஆண் & பெண் : மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…


Notes : Mariyamma Mariyamma Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. மாரியம்மா மாரியம்மா பாடல் வரிகள்.


ஊரு விட்டு ஊரு வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & கங்கை அமரன்இளையராஜாகரகாட்டக்காரன்

Ooruvittu Ooruvanthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கேட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…

ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…

ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கேட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…

BGM

ஆண் : அண்ணாச்சி என்ன…
எப்போதும் நீங்க…
தப்பாக என்ன வேணாம்…

ஆண் : பொன்னாலே கெட்டு…
போவேனோ என்று…
ஆராய்ச்சி பண்ண வேணா…

ஆண் : ஊருல ஒலகத்தில…
எங்க கதை போல்…
ஏதும் நடக்கலியா…

ஆண் : வீட்டையும் மறந்துபுட்டு…
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா…

ஆண் : மன்மத லீலையை…
வென்றவர் உண்டோ…
குழு : இல்ல இல்ல…

ஆண் : மங்கை இல்லாதொரு…
வெற்றியும் உண்டோ…
குழு : இல்ல இல்ல…

ஆண் : மன்மத லீலையை…
வென்றவர் உண்டோ…
மங்கை இல்லாதொரு…
வெற்றியும் உண்டோ…

ஆண் : காதல் ஈடேற…
பாடு என் கூட…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…

ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…

BGM

ஆண் : ஆணா பொறந்த எல்லாரும் பொண்ண…
அன்பாக எண்ண வேணும்…
வீணா திரிஞ்ச ஆனந்தம் இல்ல…
வேறென்ன சொல்ல வேணும்…

ஆண் : வாழ்கைய ரசிக்கணும்னா…
வஞ்சிக் கொடி…
வாசனை பட வேணும்…

ஆண் : வாலிபம் இனிகனும்ன…
பொண்ண கொஞ்சம்…
ஆசையில் தொட வேணும்…

ஆண் : கண்ணிய தேடுங்க…
கற்பனை வரும்…
குழு : ஆமா ஆமா மா…

ஆண் : கண்டதும் ஆயிரம்…
காவியம் வரும்…
குழு : ஆமா ஆமா மா…

ஆண் : கண்ணிய தேடுங்க…
கற்பனை வரும்…
கண்டதும் ஆயிரம்…
காவியம் வரும்…

ஆண் : காதல் இல்லாம…
பூமி இங்கேது…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கெட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…

ஆண் : விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…

ஆண் : அய்யயோ…
விட்டுடு தம்பி…
இது வேணாம் தம்பி…
இத்தனை பேறு…
வீடு உங்களை நம்பி…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கெட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…


Notes : Ooruvittu Ooruvanthu Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. ஊரு விட்டு ஊரு வந்து பாடல் வரிகள்.


இந்த மான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாகரகாட்டக்காரன்

Indha Maan Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்த மான்…
உந்தன் சொந்த மான்…
பக்கம் வந்துதான்…
சிந்து பாடும்…

பெண் : இந்த மான்…
உந்தன் சொந்த மான்…
பக்கம் வந்துதான்…
சிந்து பாடும்…

ஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே…
கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே…
என்னுயிரே…

பெண் : இந்த மான்…
உந்தன் சொந்த மான்…
பக்கம் வந்ததான்…

BGM

ஆண் : வேல் விழி போடும் தூண்டிலே…
நான் விழலானேன் தோளிலே…

பெண் : நூலிடை தேயும் நோயிலே…
நான் வரம் கேட்கும் கோயிலே…

ஆண் : அன்னமே… ஆஆஆ… ஆஆ…
அன்னமே எந்தன் சொர்ணமே…
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே…
கன்னமே மது கிண்ணமே…
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே…

பெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே…
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே…

பெண் : இந்த மான்…
உந்தன் சொந்த மான்…
ஆண் : பக்கம் வந்துதான்…
சிந்து பாடும்…

பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே…
ஆண் : கண்மணியே…
பெண் : சந்திக்க வேண்டும் தேவனே…
ஆண் : என்னுயிரே…

BGM

பெண் : பொன்மணி மேகலை ஆடுதே…
உன் விழிதான் இடம் தேடுதே…

ஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே…
இன்பத்தில் வேதனை ஆனதே…

பெண் : என்னத்தான்… ஆஆஆ… ஆஆ…
என்னத்தான் உன்னை எண்ணிதான்…
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்…
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்…
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்…

ஆண் : மோகம்தான் சிந்தும் தேகம்தான்…
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்…

ஆண் : இந்த மான்…
பெண் : உந்தன் சொந்த மான்…
ஆண் : பக்கம் வந்துதான்…
பெண் : சிந்து பாடும்…

பெண் : இந்த மான்…
ஆண் : எந்தன் சொந்த மான்…
பெண் : பக்கம் வந்துதான்…
ஆண் : சிந்து பாடும்…

பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே…
ஆண் : கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே…
பெண் : என்னவனே…


Notes : Indha Maan Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. இந்த மான் பாடல் வரிகள்.


குடகு மலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாகரகாட்டக்காரன்

Kudagu Malai Song Lyrics in Tamil


ஆண் : குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…
குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…

ஆண் : ஏதோ நினைவுதான்…
உன்ன சுத்தி பறக்குது…
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது…
ஒத்த வழி என் வழிதானே… மானே…

ஆண் : குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…

BGM

ஆண் : மானே மயிலே… மரகத குயிலே…
தேனே நான் பாடும் தேமாங்கே…
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே…
காதில் கேட்டாயோ என் வாக்கே…

ஆண் : உன்ன எண்ணி நான்தான்…
ஒரு ஊர்கோலம் போனேன்…
தன்னந்தனியாக நிக்கும்…
தேர் போல ஆனேன்…

ஆண் : பூ பூத்த சோலையிலே…
பொன்னான மாலையிலே…
நீ வந்த வேளையிலே… மயிலே…

ஆண் : நீர் பூத்த கண்ணு ரெண்டு…
நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு…

பெண் : குடகு மலை காற்றில் ஒரு…
பாட்டு பாடுது இந்த பைங்கிளி…
குடகு மலை காற்றில் ஒரு…
பாட்டு பாடுது இந்த பைங்கிளி…

BGM

பெண் : மறந்தால்தானே நினைக்கனும் மாமா…
நினைவே நீதானே நீதானே…
மனசும் மனசும் இணைஞ்சது மாமா…
நெனச்சு தவிச்சேனே நான்தானே…

பெண் : சொல்லி விட்ட பாட்டு…
தேக்கு காத்தோட கேட்டேன்…
தூது விட்ட ராசா…
மனம் தடுமாற மாட்டேன்…

பெண் : ஊரென்ன சொன்னா என்ன…
ஒன்னாக நின்னா என்ன…
உன் பேரை பாடி நிப்பேன் மாமா…

பெண் : தூங்காம உன்ன எண்ணி…
துடிச்சாளே இந்த கன்னி…
வா மாமா…

ஆண் : குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…

பெண் : ஏதோ நினைவுதான்…
உன்ன சுத்தி பறக்குது…
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது…

ஆண் : ஒத்த வழி என் வழிதானே… மானே…

பெண் : குடகு மலை காற்றில்…
ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி…

ஆண் : குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…


Notes : Kudagu Malai Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. குடகு மலை பாடல் வரிகள்.


மாங்குயிலே பூங்குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகரகாட்டக்காரன்

Maanguyile Poonguyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…
உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

பெண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…
உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

ஆண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…

பெண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…

பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

BGM

ஆண் : காலைத் தழுவி நிக்கும்…
கனகமணிக் கொலுசு… யம்மா…
நானாக மாற இப்போ…
நெனைக்குதம்மா மனசு…

பெண் : உள்ளே இருக்குறீக…
வெளிய என்ன பேச்சு… ஐயா…
ஒன்னும் புரியவில்ல…
மனசு எங்கே போச்சு…

ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான்…
வந்து விழுந்த நல்ல வெததான்…
சந்திரனத்தான் சாட்சியும் வச்சு…
சொன்ன கத தான் நல்ல கததான்…

பெண் : தோல தொட்டு ஆள… ஐயா…
சொர்க்கத்துல சேர…
மால வந்து ஏற… பொண்ணு…
சம்மதத்தக் கூற…

ஆண் : சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு…
முத்தையன் கணக்கு…
மொத்தமும் உனக்கு…

பெண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…
ஆண் : உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

BGM

பெண் : மாமரத்து கீழே நின்னு…
மங்கையவ பாட…
அந்த மங்கை குரலில்…
மனம் மயங்கியது யாரு…

ஆண் : பூமரத்துக் கீழிருந்து…
பொண்ணூ அவ குளிக்க…
அந்த பூமரத்து மேலிருந்து…
புலம்பியது யாரு…

பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு…
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்…
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும்…
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்…

ஆண் : கூரைப் பட்டுச் சேலை… யம்மா…
கூட ஒரு மால…
வாங்கி வரும் வேள… பொண்ணு…
வாசமுள்ள சோல…

பெண் : தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு…
தேடுது மனசு பாடுது வயசு…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…

பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

ஆண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…

பெண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒண்ணு கேளு…

பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…


Notes : Maanguyile Poonguyile Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. மாங்குயிலே பூங்குயிலே பாடல் வரிகள்.


மாங்குயிலே பூங்குயிலே (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகரகாட்டக்காரன்

Maanguyile Poonguyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

ஆண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

BGM

ஆண் : தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச…
வெங்கலத்துச் செம்பு…
அத தொட்டெடுத்துத் தலையில் வச்சா…
பொங்குதடி தெம்பு…

ஆண் : பட்டெடுத்து உடுத்தி வந்த…
பாண்டியரு தேரு…
இப்போ கிட்ட வந்து கிளருதடி…
என்னப் படு ஜோரு…

ஆண் : கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா…
பொண்ணு மனசத் தொட்டு பறிச்சா…
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா…
கண்ணு வலைதான் விட்டு விரிச்சா…

ஆண் : ஏறெடுத்துப் பாத்து… யம்மா…
நீரெடுத்து ஊத்து…
சீரெடுத்து வாரேன்… யம்மா…
சோ்த்து என்னைத் தேத்து…

ஆண் : முத்தையன் படிக்கும்…
முத்திரைக் கவிக்கு…
நிச்சயம் பதில்…
சொல்லணும் மயிலு…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

BGM

ஆண் : ஒன்ன மறந்திருக்க…
ஒரு பொழுதும் அறியேன்… யம்மா…
கன்னி மொகத்த விட்டு…
வேறெதையும் தெரிய…

ஆண் : வங்கத்துல வெளஞ்ச மஞ்சள்…
கெழங்கெடுத்து ஒரசி… யம்மா…
இங்குமங்கும் பூசிவரும்…
எழிலிருக்கும் அரசி…

ஆண் : கூடியிருப்போம் கூண்டுக் கிளியே…
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே…
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்…
சம்மதமுன்னு சொல்லு கிளியே…

ஆண் : சாமத்தில வாரேன்… யம்மா…
சாமந்திப்பூத் தாரேன்…
கோவப்பட்டுப் பாத்தா… யம்மா…
வந்த வழி போறேன்…

ஆண் : சந்தனம் கரைச்சிப் பூசனும் எனக்கு…
முத்தையன் கணக்கு…
மொத்தமும் உனக்கு…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

ஆண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…


Notes : Maanguyile Poonguyile Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. மாங்குயிலே பூங்குயிலே பாடல் வரிகள்.