இந்த மான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & கே.எஸ். சித்ராஇளையராஜாகரகாட்டக்காரன்

Indha Maan Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்த மான்…
உந்தன் சொந்த மான்…
பக்கம் வந்துதான்…
சிந்து பாடும்…

பெண் : இந்த மான்…
உந்தன் சொந்த மான்…
பக்கம் வந்துதான்…
சிந்து பாடும்…

ஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே…
கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே…
என்னுயிரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இந்த மான்…
உந்தன் சொந்த மான்…
பக்கம் வந்ததான்…

BGM

ஆண் : வேல் விழி போடும் தூண்டிலே…
நான் விழலானேன் தோளிலே…

பெண் : நூலிடை தேயும் நோயிலே…
நான் வரம் கேட்கும் கோயிலே…

ஆண் : அன்னமே… ஆஆஆ… ஆஆ…
அன்னமே எந்தன் சொர்ணமே…
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே…
கன்னமே மது கிண்ணமே…
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே…

பெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே…
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே…

பெண் : இந்த மான்…
உந்தன் சொந்த மான்…
ஆண் : பக்கம் வந்துதான்…
சிந்து பாடும்…

பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே…
ஆண் : கண்மணியே…
பெண் : சந்திக்க வேண்டும் தேவனே…
ஆண் : என்னுயிரே…

BGM

பெண் : பொன்மணி மேகலை ஆடுதே…
உன் விழிதான் இடம் தேடுதே…

ஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே…
இன்பத்தில் வேதனை ஆனதே…

பெண் : என்னத்தான்… ஆஆஆ… ஆஆ…
என்னத்தான் உன்னை எண்ணிதான்…
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்…
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்…
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்…

ஆண் : மோகம்தான் சிந்தும் தேகம்தான்…
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்…

ஆண் : இந்த மான்…
பெண் : உந்தன் சொந்த மான்…
ஆண் : பக்கம் வந்துதான்…
பெண் : சிந்து பாடும்…

பெண் : இந்த மான்…
ஆண் : எந்தன் சொந்த மான்…
பெண் : பக்கம் வந்துதான்…
ஆண் : சிந்து பாடும்…

பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே…
ஆண் : கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே…
பெண் : என்னவனே…


Notes : Indha Maan Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. இந்த மான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading