மாங்குயிலே பூங்குயிலே (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகரகாட்டக்காரன்

Maanguyile Poonguyile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

ஆண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

—BGM—

ஆண் : தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச…
வெங்கலத்துச் செம்பு…
அத தொட்டெடுத்துத் தலையில் வச்சா…
பொங்குதடி தெம்பு…

ஆண் : பட்டெடுத்து உடுத்தி வந்த…
பாண்டியரு தேரு…
இப்போ கிட்ட வந்து கிளருதடி…
என்னப் படு ஜோரு…

ஆண் : கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா…
பொண்ணு மனசத் தொட்டு பறிச்சா…
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா…
கண்ணு வலைதான் விட்டு விரிச்சா…

ஆண் : ஏறெடுத்துப் பாத்து… யம்மா…
நீரெடுத்து ஊத்து…
சீரெடுத்து வாரேன்… யம்மா…
சோ்த்து என்னைத் தேத்து…

ஆண் : முத்தையன் படிக்கும்…
முத்திரைக் கவிக்கு…
நிச்சயம் பதில்…
சொல்லணும் மயிலு…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

—BGM—

ஆண் : ஒன்ன மறந்திருக்க…
ஒரு பொழுதும் அறியேன்… யம்மா…
கன்னி மொகத்த விட்டு…
வேறெதையும் தெரிய…

ஆண் : வங்கத்துல வெளஞ்ச மஞ்சள்…
கெழங்கெடுத்து ஒரசி… யம்மா…
இங்குமங்கும் பூசிவரும்…
எழிலிருக்கும் அரசி…

ஆண் : கூடியிருப்போம் கூண்டுக் கிளியே…
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே…
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்…
சம்மதமுன்னு சொல்லு கிளியே…

ஆண் : சாமத்தில வாரேன்… யம்மா…
சாமந்திப்பூத் தாரேன்…
கோவப்பட்டுப் பாத்தா… யம்மா…
வந்த வழி போறேன்…

ஆண் : சந்தனம் கரைச்சிப் பூசனும் எனக்கு…
முத்தையன் கணக்கு…
மொத்தமும் உனக்கு…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…

ஆண் : முத்து முத்துக் கண்ணால…
நான் சுத்தி வந்தேன் பின்னால…

ஆண் : மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…


Notes : Maanguyile Poonguyile Song Lyrics in Tamil. This Song from Karakattakkaran (1989). Song Lyrics penned by Gangai Amaran. மாங்குயிலே பூங்குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading