ஆளான நாள் முதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்புஷ்பவனம் குப்புசாமி & சௌம்யா ராவ்இளையராஜாகாதல் கவிதை

Aalana Naal Mudhala Song Lyrics in Tamil


BGM

பெண் : மச்சான்… ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…
மாமா நான் உங்களுக்கே…
வாக்கப்பட ஆச பட்டேன்…

பெண் : வேணான்னு சொல்லுறீகளே…
சும்மா வெறும் வாய மெல்லுறீகளே…
ஆடியில கட்டிகிட்டா…
சித்திரைக்கு புள்ள வரும்…

பெண் : ஆகாது ஆகாது மச்சானே…
இது தோதான தை மாசம் மச்சானே…
ஆகாது ஆகாது மச்சானே…
இது தோதான தை மாசம் மச்சானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன்ன நான் கட்டிக் கொள்ள…
எப்பவும் நெனச்சதில்ல…
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள…
முங்குறவன் யாரும் இல்ல…

ஆண் : வேணான்டி விட்டு விடடி…
நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி…
தாலி கட்டி கூடிகிட்டா…
சாமி குத்தம் ஆகுமுன்னு…
மேலூரு குறிகாரன் சொன்னான்டி…

ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…
மேலூரு குறிகாரன் சொன்னான்டி…
அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…

பெண் : ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…
மாமா நான் உங்களுக்கே…
வாக்கப்பட ஆசபட்டேன்…

BGM

பெண் : புல்லறுக்கப் போகையிலே…
புல்லநுனி தண்ணியில…
ஒம் முகத்த பாத்துபுட்டே…
வூடு வந்து சேந்து புட்டேன்…
ஏம் பாசம் தெரியாது மாமா…
ஆண் : ஆஹா…

பெண் : இது அனுமாரு நெஞ்சில்ல ராமா…
ஆண் : ஆஹா…

பெண் : எம் பாசம் தெரியாது மாமா…
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா…

ஆண் : கொல்லையிலே மாங்கா மரம்…
கொத்து கொத்து காச்சிருக்கு…
காவக்காரன் தூங்கையிலே…
கைய எட்டி மாம்பழத்த…
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்…

ஆண் : அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்…
அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்…
அடி அனில் பிள்ள கடிச்சாதான் ருசிக்கும்…

பெண் : பூவெடுத்து மால கட்டி ராசா…
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா…
உன்ன நெனச்சே பொறந்தேன்… வளந்தேன்…
ராசா… என் ராசா…

ஆண் : யம்மா… உன்ன நான் கட்டிக் கொள்ள…
எப்பவும் நெனச்சதில்ல…
கல்லக் கட்டி தண்ணிக்குள்ள…
முங்குறவன் யாரும் இல்ல…

BGM

ஆண் : காளக் கண்ணு வாங்கிக் கட்டி…
பால் கறக்க ஆசபட்டேன்…
கோழிக் குஞ்சு குட்டி போட…
கோயிலுக்கு நேந்துகிட்டேன்…

ஆண் : முட்டாளா இருக்கேடி மானே…
அடி ஒட்டாதே என் வாழ்க்கதானே…
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே…
அடி ஒட்டாதே என் வாழ்க்கதானே…

பெண் : ஆஹா… ஒத்தைக்கொத்த சண்டையின்னா…
ஓடிப் போற ஆம்பள நீ…
செத்துப் போன பாம்ப பாத்தே…
சத்தம் போட்ட வீரனும் நீ…
ஆண் : ஏய்…

பெண் : நீ மட்டும் சரி தானா மாமா…
ஆண் : ஆ…

பெண் : என் நெனப்பத்தான் நீ பாரு மாமா…
ஆண் : க்கும்ம் ஏ…

பெண் : நீ மட்டும் சரி தானா மாமா…
என் நெனப்பத்தான் நீ பாரு மாமா…

ஆண் : ஒன் வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாரேன்…
நான் ஆம்பளதான் வீரத்த நீ பாரேன்…
நான் நெனச்சா மலைய வளைப்பேன்…
வாரேன்… நான் வாரேன்…

பெண் : மச்சான்… ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…

ஆண் : உன்ன நான் கட்டிக் கொள்ள…
எப்பவும் நெனச்சதில்ல…

பெண் : வேணான்னு சொல்லுறீகளே…

ஆண் : அடி வேணான்டி விட்டு விடடி…
தாலி கட்டி கூடிகிட்டா…
சாமி குத்தம் ஆகுமடி…

பெண் : ஆகாது ஆகாது மச்சானே…

ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…

பெண் : ஆகாது ஆகாது மச்சானே…

ஆண் : அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி…


Notes : Aalana Naal Mudhala Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. ஆளான நாள் முதலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading