காதல் மீதில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்ஹரிஹரன்இளையராஜாகாதல் கவிதை

Kadhal Meethu Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : வாசம் மிக்க மலர்களைக் கொண்டு…
வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம்…
என் நெஞ்சில் வாசம் செய்பவள்…
எங்கும் வாசம் செய்கிறாள்…
எங்கோ வாசம் செய்கிறாள்…

—BGM—

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…

ஆண் : பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே…
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…

—BGM—

ஆண் : எண்ணங்கள் நீயில்லையா…
உன் எண்ணத்தில் நானில்லையா…
என் பாடல் உனதில்லையா…
அது உன் காதில் விழவில்லையா…

ஆண் : அன்னை மனம் கொண்ட பெண்ணே…
உன்னை தினம் காண மனம் ஏங்கும்…
என்னை ஒரு பிள்ளை என எண்ணி விடு…
எந்தன் மனம் தூங்கும்…

ஆண் : ஓ… நீயாக இதயத்தை தந்தாயே…
காணாமல் ஏனோ நீ சென்றாயே…
நானும் பாட…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம்தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள்தானே…

—BGM—

ஆண் : நானாக நான் இல்லையே திருநாளில்லை நீ இல்லையேல்…
தேடாமல் தானில்லையே உன் ஊரில்லை பேரில்லையே…

ஆண் : நீ பறந்த பாதை தன்னை வானம் எங்கும்…
தேடும் வானம் பாடி…
நான் அலைந்த சேதி எல்லாம் காற்று வந்து…
சொல்லும் உன்னைத் தேடி…

ஆண் : நேராக நீ வந்து சொல்வாயா…
நீ இல்லை என்றேனும் சொல்வாயா…
நானும் வாழ…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…
தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே…
காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே…

ஆண் : பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே…
பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே…

ஆண் : காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே…
காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே…

Notes : Kadhal Meethu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. காதல் மீதில் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading