மேற்கே விதைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்தேவாசிட்டிசன்

Merkey Vidhaitha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மேற்கே விதைத்த சூரியனே…
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்…

—BGM—

ஆண் : மேற்கே விதைத்த சூரியனே…
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்…
தோன்றிட ஏதும் தடை இருந்தால்…
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்துவிட்டோம்…

ஆண் : இடர் நீங்கவே வந்த இருள் போகவே…
கையில் ஒளிசாட்டை எடுத்தால் என்ன…
விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா…
சில விண்மீன்கள் விழுந்தால் என்ன…

ஆண் : மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை…
கை வாளாய் எடுத்து…
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து…

—BGM—

ஆண் : கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு…
கல்லறைகள் அல்ல…
சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல…

ஆண் : ரெக்கை கட்டி ரெக்கை கட்டி வாடா…
வானம் உண்டு வெல்ல…
வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல…

—BGM—

ஆண் : இதயம் துணிந்து எழுந்த பின்னாலே…
இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே…

ஆண் : நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்…
விரல்களில் எரிமலை ஒன்று வெடிக்கட்டும்…
முட்டுங்கள் திறக்கும் என்னும் புதுமைகள் கேட்கட்டும்…

—BGM—

ஆண் : சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம்…
தீ வளர்த்து பார்ப்போம்…
விடியல் வரும் முன்னே இருள் எதிர்த்து கொள்வோம்…

ஆண் : குட்டுப்பட்ட குட்டுப்பட்ட கூட்டம்…
குனிந்த கதை போதும்…
பொறுமை நீளும் போது புழுவும் புலி ஆகும்…

—BGM—

ஆண் : தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா…
சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா…

ஆண் : புஜத்திலே வலுத்தவர் ஒன்றாய் திரட்டுவோம்…
நிஜத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்…
வறுமைக்கு பிறந்த கூட்டம் வயதை ஆளட்டும்…

ஆண் : மேற்கே விதைத்த சூரியனே…
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்…
தோன்றிட ஏதும் தடை இருந்தால்…
உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்…

ஆண் : இடர் நீங்கவே வந்த இருள் போகவே…
கையில் ஒளிசாட்டை எடுத்தால் என்ன…
விஸ்வ ரூபம் கொண்டு விண்ணை இடிப்போம் நண்பா…
சில விண்மீன்கள் விழுந்தால் என்ன…

ஆண் : மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை…
கை வாளாய் எடுத்து…
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து…

—BGM—

குழு : அச்சம் இல்லை அச்சம் இல்லையே…


Notes : Merkey Vidhaitha Song Lyrics in Tamil. This Song from Citizen (2001). Song Lyrics penned by Vairamuthu. மேற்கே விதைத்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading