எங்கெங்கோ கால்கள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Engengo Kalgal Song Lyrics in Tamil


ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ…
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ…
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

—BGM—

ஆண் : காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே…
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே…

ஆண் : எதனை கொண்டு நாம் வந்தோம்…
எதனை கொண்டு போகின்றோம்…
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

—BGM—

ஆண் : காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ…
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ…

ஆண் : வாழ்க்கை எங்கு போய் சேரும்…
காலம் செய்யும் தீர்மானம்…
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ…
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ…
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு…

—BGM—


Notes : Engengo Kalgal Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Pazhani Barathi. எங்கெங்கோ கால்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading