ஓராயிரம் யானை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி. உன்னிகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாநந்தா

Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

—BGM—

ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை…
இடியோசை ஒன்றே அறிந்தாயே…
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து…
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்…

ஆண் : ஒரு ராஜா வருந்தாமல்…
அட புத்தன் ஜனனம் இல்லை…
மனம் நொந்து நொறுங்காமல்…
அட சித்தன் பிறப்பதும் இல்லை…
வாழ்ந்தாய் தீயின் மடியில்…
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

—BGM—


Notes : Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Na. Muthukumar. ஓராயிரம் யானை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading