கந்தன் இருக்கும் இடம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசபேஷ்தேவாகாதலே நிம்மதி

Kandan Irukkum Idam Song Lyrics in Tamil


ஆண் : க ச ட த ப ற ய ர ல வ ழ ள…
ங ஞ ந ண ம ன இலக்கணம்… ம்ம்ம்…

ஆண் : கசக்கி பிழிந்து உருட்டி பொரட்டி…
எடுப்பவதான் பெண் இனம்…
அவளே லவ் இனம் நம்ம லவ் இனம்…

ஆண் : கந்தா…
குழு : கந்தா…
ஆண் : கதிர் வேலா…
குழு : கதிர் வேலா…
ஆண் : தம்பி பாலா…
ஆண் : அவ வருவாளா…

—BGM—

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…

—BGM—

ஆண் : என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…

—BGM—

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…
சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம்…
என் சைட்ட வந்து பாத்துக்கடா வள்ளுவர் கோட்டம்…

ஆண் : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

குழு : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…

—BGM—

ஆண் : கோபப்படமாட்டா நம்ம கோயம்புத்தூரு பொண்ணு…
வீரமான பொண்ணு நம்ம வீரபாண்டி பொண்ணு…

—BGM—

ஆண் : திரும்பி கூட பார்க்கமாட்டா திருச்சிக்கார பொண்ணு…
சீக்கிரத்தில் சிரிக்கமாட்டா சிவகாசி பொண்ணு…

ஆண் : ஈரோடு பொண்ணுக்குத்தான் ஈரமான மனசுடா…
தர்மபுரி பொண்ணுக்கு தங்கமான மனசுடா…
கடலூர் பொண்ணுக்கு கரும்பு போல உதடுடா…
நாகர்கோயில் பொண்ணுக்கு நடக்கையிலும் கனவுடா…

ஆண் : ஜானு புள்ளடா இவன் ஆணு புள்ளடா…
சைட் அடிக்கத்தான் இவன் பொறந்திருக்கான்டா…
பாலு பூத்து பக்கத்தில பால் வடிய பார்த்து நின்னான்…
நைனா இவ நைனா…

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…

குழு : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
அண்ணன் காதலி இருக்குமிடம் போயஸ்தோட்டம்…

—BGM—

ஆண் : கலங்கிடத்தான்மாட்டா நம்ம காரைக்குடி பொண்ணு…
மயங்கிடத்தான்மாட்டா நம்ம மதுரைக்கார பொண்ணு…

—BGM—

ஆண் : எப்பா வாயத் தொறந்து பேச மாட்டா வாழப்பாடி பொண்ணு…
சொன்ன பேச்ச கேட்டுக்குவா சென்னை பட்டினம் பொண்ணு…

ஆண் : ஆண போல பெண்ணுக்கு ரெண்டு மடங்கு அறிவுடா…
சிரிச்சு பேசும் பொண்ணுக்கு சிரிப்புதானே அழகுடா…
கொஞ்சி பேசும் பொண்ணுக்கு கண்ணுக்குள்ள சிரிப்புடா…
பஞ்சுபோல பெண் மனம் பத்திக்கிட்டா நெருப்புடா…

ஆண் : காதல் என்னடா அதை காதில் சொல்லடா…
சிக்னல் காட்டினா நீ சிரிச்சு பேசுடா…
ஜில்லா ஃபுல்லா தேடிப்புட்டேன்…
ஜிமிக்கி போட்ட பேரழகிய நைனா இவ நைனா…

ஆண் : கந்தன் இருக்கும் இடம் கந்தக்கோட்டம்…
என் காதலி இருக்குமிடம் பாதர்தோட்டம்…
சைக்கிளும்தான் போகுதடா குதிரை ஓட்டம்…
என் சைட்ட வந்து பார்த்துக்கடா வள்ளுவர் கோட்டம்…

ஆண் : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

குழு : எப்பா ஞானி நீ தண்டபாணி…
ஆறுமுக சாமி அருள் தர வா நீ…

—BGM—


Notes : Kandan Irukkum Idam Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. கந்தன் இருக்கும் இடம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading