திருமலை நாயகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னியின் செல்வன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுமங்கலிதேவாமாப்பிள்ளை கவுண்டர்

Thirumalai Nayagane Song Lyrics in Tamil


BGM

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

பெண் : சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…

ஆண் : வெற்றிலை கொடி மடித்து…
முத்துக்கள் சரம் தொடுத்து…
சிற்றிடை அளவெடுத்து கொள்ளவா…

பெண் : இரவின் மடியில் கணா கணா காணும் சுகமா…

ஆண் : திருமலை நாயகனின் இன்று திருமதி ஆனவளே…
பெண் : திருமதியான பின்னே உன் திருவடி சேரட்டுமா…

BGM

பெண் : ராமனைத்தான் நான் கண்டதில்லை…
சிதையை நீயும் தொட்டதில்லை…
நீதான் அந்த ராமன் இந்த வில்லை முறிப்பாயா…

BGM

ஆண் : கோகுலத்தில் நான் பொறந்ததில்லை…
வெண்ணைகள் திருடி தின்னதில்லை…
நீதான் அந்த ராதை திண்ண வெண்ணை தருவாயா…

பெண் : நிலவில் நீதானே நான் பார்த்த மூன்றாம் பிறை…
ஆண் : நதியில் நீதானே நான் பார்த்த யமுனா நதி…

பெண் : ஒரு பூவே வரும் வாசம்…
இந்த பூவில் மனம் பாசம்…

ஆண் : அடிகண்மணி அடிக்கண்மணி சுகமா…

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

BGM

பெண் : மன்மத சாயல் ஆணிடமே…
மயங்குவது எல்லாம் பெண்ணினமே…
மாயம் அந்த மாயம் இந்த மன்ணன் புரிவானா…

BGM

ஆண் : சுகங்களை சேர்த்து பெண் எழுதி…
சூரியனைக் கொண்டு கண் எழுதி…
பார்வை சுடும் பார்வை என் நெஞ்சை எறிக்காதா…

பெண் : அணைத்தால் சுகம் பாதி பயம் பாதி…
நான் வேர்க்கிறேன்…

ஆண் : வியர்வை மணி சேர்த்து சரம் சேர்த்து…
நான் கோர்க்கிறேன்…

பெண் : ஒரு காதல் அதில் மோதல்…
ஒரு மோதல் அதில் காதல்…

ஆண் : கிளி கொஞ்சிடும் கொஞ்சிடும் மொழியோ…

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

பெண் : சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…

ஆண் : வெற்றிலை கொடி மடித்து…
முத்துக்கள் சரம் தொடுத்து…
சிற்றிடை அளவெடுத்து கொள்ளவா…

பெண் : இரவின் மடியில் கணா கணா காணும் சுகமா…

BGM


Notes : Thirumalai Nayagane Song Lyrics in Tamil. This Song from Mappillai Gounder (1997). Song Lyrics penned by Ponniyin Selvan. திருமலை நாயகனே பாடல் வரிகள்.