நீதானே எனது தோழமை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜா & சாய் விக்னேஷ்யுவன் ஷங்கர் ராஜாMr. Zoo Keeper

Neethane Enadhu Thozhamai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீதானே எனது தோழமை…
உன்னில் கண்டேன் அன்பினை…
உலகை புதிதாய் ரசிக்கிறேன்…
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்…

ஆண் : நடக்கும் பொம்மை போல நான்…
வாழ்ந்த வாழ்வை மாற்றினாய்…
எனக்கு இந்த பிறவியில்…
மனிதம் சொல்லி நீ தந்தாய்…

ஆண் : மனங்கள்தான் இணையும்போது…
மரபுகள் தேவை இல்லை நண்பா…

ஆண் : நீதானே எனது தோழமை…
உன்னில் கண்டேன் அன்பினை…
உலகை புதிதாய் ரசிக்கிறேன்…
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்…

—BGM—

ஆண் : மனித இனத்தினில் நானும் பிறந்தேன்…
மிருக இனத்தினில் நீயும் பிறந்தாய்…
நமது உறவினையே உயர்வென்பேன்…
உயிர்கள் அனைத்தும் இங்கே பொதுவென்பேன்…

ஆண் : அன்புக்கு ஏங்கிடும் உந்தன் அன்பை…
நாளெல்லாம் நான் கண்டு நெகிழ்ந்தேன்…
காவல் காப்பேன் உன்னை நான்தான்…
நமது நட்பை உலகம் அறியாது…

ஆண் : நீதானே எனது தோழமை…
உன்னில் கண்டேன் அன்பினை…
உலகை புதிதாய் ரசிக்கிறேன்…
உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன்…

—BGM—


Notes : Neethane Enadhu Thozhamai Song Lyrics in Tamil. This Song from Mr. Zoo Keeper (2024). Song Lyrics penned by Snehan. நீதானே எனது தோழமை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading