| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | எஸ்.வரலட்சுமி | குன்னக்குடி வைத்தியநாதன் | திருமலை தெய்வம் |
Neela Nira Megam Song Lyrics in Tamil
பெண் : கண்ணா… கமலக்கண்ணா…
கங்கைக் கரை மன்னா…
பண்ணாரும் இசையமுதே…
பாரதப்போர் தளபதியே…
அந்நாளும் இந்நாளும்… ஆஆஆ… ஆஆஆ…
அகிலமெல்லாம் ஆள்பவனே…
பெண் : நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா… ஆ…
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா… ஆ…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
கண்ணா… ஆஆ… நீயே கண்ணா…
—BGM—
பெண் : நீலக்கடல் பொன்னலைகள் நீயே கண்ணா…
நீலக்கடல் பொன்னலைகள் நீயே கண்ணா…
நல்ல நீலமணி வண்ணம் யாவும் நீயே கண்ணா…
நீலமணி வண்ணம் யாவும் நீயே கண்ணா…
பெண் : நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா… கண்ணா…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
கண்ணா… ஆஆ… நீயே கண்ணா…
—BGM—
பெண் : தத்துவத்தில் கீதை நாயகனே…
தத்துவத்தில் கீதை நாயகனே…
அன்பு சந்நதியில் ராதை நாயகனே…
பெண் : தத்துவத்தில் கீதை நாயகனே…
அன்பு சந்நதியில் ராதை நாயகனே…
பக்தியிலே கோதை நாயகனே…
பக்தியிலே கோதை நாயகனே…
பெண் : நல்ல பண்பினிலே சீதை நாயகனே…
பண்பினிலே சீதை நாயகனே…
பெண் : நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா… கண்ணா…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
கண்ணா… ஆஆ… நீயே கண்ணா…
Notes : Neela Nira Megam Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan. நீலநிற மேகமெல்லாம் பாடல் வரிகள்.


