ஜெர்மனியின் செந்தேன் மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாஉல்லாசப் பறவைகள்

Germaniyin Senthen Malare Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…
ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…

ஆண் : காதல் தேவதையே…
காதல் தேவதை பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…

ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…

—BGM—

பெண் : சித்திரமே செந்தேன் மழையே…
முத்தமிழே கண்ணா அழகே…

பெண் : காதல் நாயகனே…
காதல் நாயகன் பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…

பெண் : சித்திரமே செந்தேன் மழையே…
முத்தமிழே கண்ணா அழகே…

—BGM—

ஆண் : பூஞ்சோலையே பெண்ணானதோ…
இரு பொன்வண்டுகள் கண்ணானதோ…

—BGM—

பெண் : பூங்கோதையின் நெஞ்சோடு நீ…
இனி எந்நாளுமே கொண்டாடலாம்…

ஆண் : லாலாலா… வா வா வா…
குளிர்நிலவின் ஒளி நீயே…

பெண் : லலலலா… வா வா…
எனதன்பின் சுடர் நீயே…

ஆண் : சுகம் நூறாக வேண்டும்…
பெண் : பா பா ப ப பா…

பெண் : உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்…
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்…

ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…
காதல் தேவதையே…

பெண் : காதல் நாயகன் பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…

—BGM—

பெண் : பேரின்பமே என்றால் என்ன…
அதை நீ என்னிடம் சொன்னால் என்ன…

—BGM—

ஆண் : பேரின்பமே நீதானம்மா…
அதை நீ என்னிடம் தந்தால் என்ன…

பெண் : பா ப… வா வா வா…
என்னை அணைத்தே கதை சொல்ல…

ஆண் : லாலாலா… வா வா…
அதை சொல்வேன் சுவையாக…

பெண் : வெகு நாளாக ஆசை…
ஆண் : ர பாபா ப பா…

ஆண் : என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்…
நீ சொல்லும் பாடம் சொர்கம்…

பெண் : சித்திரமே செந்தேன் மழையே…
முத்தமிழே கண்ணா அழகே…
காதல் நாயகனே…

ஆண் : காதல் தேவதை பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…

ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…

—BGM—


Notes : Germaniyin Senthen Malare Song Lyrics in Tamil. This Song from Ullasa Paravaigal (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. ஜெர்மனியின் செந்தேன் மலரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading