நாளெல்லாம் உந்தன் திருநாளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.பி.சுந்தராம்பாள்குன்னக்குடி வைத்தியநாதன்திருமலை தெய்வம்

Naal Ellam Song Lyrics in Tamil


பெண் : திருவேங்கடத்து முடியரசே…
சீரார் கருணைத் திருமாலே…
பொருளாய் எழுந்த முழுமுதலே…
புவனங்காக்கும் பெருமாளே…

பெண் : அருளால் உலகை அளந்தவனே…
அன்பர் பிணிக்கு அருமருந்தே…
இறைவா உன்னைப் பாடுங்கால்…
இன்பம் பொங்கும் என் மனமே…

BGM

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே…
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…

பெண் : உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே…
அவர் நாடிய வினை தீர்க்கும் நாரணனே…
உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே…
அவர் நாடிய வினை தீர்க்கும் நாரணனே…

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…

BGM

பெண் : மலைபோல வரும் துன்பம்…
பனிபோல மறைந்தோடும்…
மலையேறி வருவோர்க்கு மன்னா…

பெண் : மலைபோல வரும் துன்பம்…
பனிபோல மறைந்தோடும்…
மலையேறி வருவோர்க்கு மன்னா…

பெண் : நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்…
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா…
உடல் நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்…
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா…

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…

BGM

பெண் : முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே…
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே…
முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே…
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே…

BGM

பெண் : வேலவனின் மாமனான மாலவனே…
வேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே…
வேலவனின் மாமனான மாலவனே…
திருவேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே…

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…

BGM

பெண் : உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு…
உடன் காட்டும் கண்கண்ட தெய்வமே வெங்கடேசா…
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு…
உடன் காட்டும் கண்கண்ட தெய்வமே வெங்கடேசா…

பெண் : கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்…
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா…
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்…
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா…

பெண் : நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே…
நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…


Notes : Naal Ellam Song Lyrics in Tamil. This Song from Thirumalai Deivam (1973). Song Lyrics penned by Kannadasan.  நாளெல்லாம் உந்தன் திருநாளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading