தென்றல் வந்து என்னைத்தொடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாதென்றலே என்னைத் தொடு

Thendral Vandhu Ennai Thodum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…

ஆண் : பகலே போய் விடு…
இரவே பாய் கொடு…
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு…

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…

—BGM—

ஆண் : தூறல் போடும் இந்நேரம்…
தோளில் சாய்ந்தால் போதும்…

பெண் : சாரல் பாடும் சங்கீதம்…
கால்கள் தாளம் போடும்…

ஆண் : தெரிந்த பிறகு திரைகள் எதற்கு…
பெண் : நனைந்த பிறகு நாணம் எதற்கு…
ஆண் : மார்பில் சாயும் போது…

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…

பெண் : பகலே போய் விடு…
இரவே பாய் கொடு…
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு…

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…

—BGM—

பெண் : தேகமெங்கும் மின்சாரம்…
பாய்ந்ததேனோ அன்பே…

ஆண் : மோகம் வந்து இம்மாது…
வீழ்ந்ததேனோ கண்ணே…

பெண் : மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்…
ஆண் : இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்…
பெண் : சாரம் ஊரும் நேரம்…

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…

ஆண் : பகலே போய் விடு…
இரவே பாய் கொடு…
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு…

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…


Notes : Thendral Vandhu Ennai Thodum Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vairamuthu. தென்றல் வந்து என்னைத்தொடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading