கண்மணி நீ வர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாதென்றலே என்னைத் தொடு

Kanmani Nee Vara Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…

ஆண் : கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்து இருந்தேன்…

பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்…
மன்னவன் ஞாபகமே…

ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்…
மன்மத நாடகமே…

பெண் : அந்திப்பகல் கன்னிமயில் உன்னருகே…

ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…

—BGM—

ஆண் : நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா…
பெண் : நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா…

ஆண் : நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா…
பெண் : நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா…

ஆண் : கள்ளிருக்கும்…
பெண் : பூவிது பூவிது…
ஆண் : கையணைக்கும்…
பெண் : நாள் இது நாள் இது…

ஆண் : பொன்னென்ன மேனியும்…
பெண் : மின்னிட மின்னிட…
ஆண் : மெல்லிய நூல் இடை…
பெண் : பின்னிட பின்னிட…

ஆண் : வாடையில் வாடிய…
பெண் : ஆடையில் மூடிய…
ஆண் : தேன்…
பெண் : நான்…

ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…

பெண் : கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்…
என்னுடல் வேர்த்து இருந்தேன்…

ஆண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்…
மங்கையின் ஞாபகமே…

பெண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்…
மன்மத நாடகமே…

ஆண் : பொன்னழகே பூவழகே என்னருகே…

பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்து இருந்தேன்…

—BGM—

ஆண் : ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா…
பெண் : நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா…

ஆண் : ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா…
பெண் : நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா…

ஆண் : பெண் மயங்கும்…
பெண் : நீ தொட நீ தொட…
ஆண் : கண் மயங்கும்…
பெண் : நான் வர நான் வர…

ஆண் : அங்கங்கு வாலிபம்…
பெண் : பொங்கிட பொங்கிட…
ஆண் : அங்கங்கள் யாவிலும்…
பெண் : தங்கிட தங்கிட…

ஆண் : தோள்களில் சாய்ந்திட…
பெண் : தோகையை ஏந்திட…
ஆண் : யார்…
பெண் : நீ…

பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்து இருந்தேன்…

ஆண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்திருந்தேன்…

பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்…
மன்னவன் ஞாபகமே…

ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்…
மன்மத நாடகமே…

பெண் : அந்திப்பகல் கன்னிமயில் உன்னருகே…

ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…

பெண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்திருந்தேன்…


Notes : Kanmani Nee Vara Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vaali. கண்மணி நீ வர பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading